உற்சாகமாக துவங்கிய சந்தையானது பெரிய அளவு முன்னேற்றம் இல்லை என்றாலும் தொய்வின்றி மேல்நிலையிலேயே இருந்தது. இறுதியில் +0.69% அல்லது +57.60 என்ற அளவு உயர்ந்து 8,423.25 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்றைக்கு வாங்குவதற்கு விலை கூறியிருந்த பங்கான IDEA 179.00 என்ற விலைக்கு கிடைத்தது. அதேசமயம் நட்டநிறுத்த விலைக்கு கீழாகவும் சென்று 176.70 என்ற விலைக்கு விற்கபட்டது. விற்க விலை சொல்லியிருந்த JISLJALEQS பங்கானது 68.15 என்ற எனது விலைக்கு விற்க பட்டது.
ICICIBANK பங்கானது +1.10% உயர்ந்து 318.75 என்பதாகவும், MMFIN பங்கானது -0.50% சரிந்து 269.70 என்பதாக நட்ட நிறுத்த விலைக்கு கீழாகவும், DISHTV பங்கானது -1.20% சரிந்து 81.85 என்பதாகவும், JISLJALEQS பங்கானது -2.20% சரிந்து 66.00 என்பதாகவும், ITC பங்கானது -0.20% சரிந்து 331.95 என்பதாகவும், BHARTIARTL பங்கானது +0.60% உயர்ந்து 400.55 என்பதாகவும் முடிவடைந்துள்ளது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (21-05-2015) சந்தையில் SPARC நிறுவன பங்கினை வாங்கிட உள்ளேன். என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | ICICI | 30 | 0.00 | 296.70 | 0.00 |
Sell | MMFIN | 36 | 0.00 | 269.80 | 0.00 |
Hold | DISHTV | 119 | 0.00 | 75.00 | 0.00 |
Hold | ITC | 30 | 0.00 | 326.20 | 0.00 |
Sell | BHARTIARTL | 25 | 0.00 | 391.80 | 409.40 |
Buy | SPARC | 24 | 407.95 | 401.50 | 0.00 |
Leave a Reply