அறிவிப்பு : இங்கு பகிர பட்டிருந்த அசைபடம் நீக்கபட்டுள்ளது.
பல செய்திகள் படிப்பதற்கும், கேள்வி படுவதற்கும் அதனையே நேரில் காட்சியாக பார்ப்பதற்கும் மிகவும் மாறுபட்ட உணர்வுகளை கொடுக்க கூடியன. அந்த வகையில் உலகில் பல நாடுகளில் பணவீக்கம், பண வாட்டம் என்பவைகளை புள்ளிவிவரங்களாக படிப்பது உண்டு. அப்போது எல்லாம் அவைகள் வெறும் புள்ளிவிவரங்களாகவே காட்சியளிக்கும். சமீபத்தில் நான் பார்த்த நாணய மதிப்பு சரிவு சம்பந்த பட்ட 2நிமிட துண்டு படம் மிகவும் சிந்தனையை தூண்டி விட்டது. பொதுவாக நிறைய பணம் என்னும் வார்த்தை என்றாலே ஒரு மங்களகரமான மஞ்சள் பையில் போட்டு எடுத்து செல்லும் நம் பெரியவர்களின் அறிய காட்சி தான் நினைவுக்கு வருகிறது. இந்த காலத்தில் பெரும்பாலும் காசோலை வடிவில் செலுத்த பட்டு விடுகிறது. கறுப்பு/கள்ள பண ஆசாமிகள் நோட்டுகற்றைகளை குவித்து வைத்திருப்பது என்பது வேறு.
நம் போன்ற நடுத்தர வாழ்க்கையில் பர்சு நிறைய பணம் இருந்தாலே கால் தரையில் பாவாது.. மனசு உற்சாகத்தில் துள்ளும்.. ஆனால் இந்த படத்தில் உள்ள படி பணம் தள்ளுவண்டியில் வைத்து தள்ளி வரக்கூடிய சூழலில் அவர்கள் நிலைமையை நினைத்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது. யாரும் பட்டினி கிடக்க போவதில்லை.. எளிமையாக பண்டமாற்று முறைக்கு ஏழைகளும், சமானியர்களும் மாறிவிடுவார்கள். ஆனாலும் நடைமுறை சிக்கல் என்பது தவிர்க்க இயலாது தான்.. சமீபத்தில் என்னை கவர்ந்த துண்டு படம். இதனுடன் -பணவீக்கம்- தொடர்புடைய செய்தி சுட்டி http://tinyurl.com/nnkdcob
Leave a Reply