புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

புது வியாபாரப் பூசை

Ohm

லட்சுமி

லட்சுமி தேவி

போன வாரம் பொழம்பிய படியே இன்னைக்கு ஆவணி 1ம் தேதி என்பதால் காலம்பற புது பங்கு வியாபாரத்துககு பூசை போட்டாச்சு. அதான் மேலே பார்க்கிற சுப்லாப் மற்றும் லட்சுமி தேவி படங்கள். பூசைன்னா இவிக இல்லாமலா… அப்புறமும் எல்லா ஷேட்டுகளும் இந்த படத்தை தான் பூசைக்கு வச்சிருக்காங்க. அதனாலதான் அவிக பயங்கர பணக்காரர் ஆவறதா நம்ம நண்பர் சொல்லறாரு. இந்த படங்கள் வைச்சு பூசை போடாது போய் நட்டம் வந்திட்டா அவரு புலம்பலு தாங்க முடியாது.

சரி நிறுவனமுன்னு ஆரம்பிச்சா அதுக்குன்னு ஒரு பேரு வேணாமா… இன்னா இன்னா வியாபார பண்ண போறோமுன்னு சொல்ல வேணாமா…?என்னதான் அப்பாரு கனாவுலே கொடுத்த காசா இருந்தாலும் நம்ம விருப்பத்திற்க்கு பேரு வைக்க முடியுமா. அப்படிதான் வைச்சாலும் நாளையும் பின்னையும் வியாபாரம் ஊத்திக்கிச்சுன்னா நம்ம தலையை உருட்டுவாங்களே… தவிரவும் வூட்டு உடன்பிறப்பு புள்ளைக பேருலே நமக்கு இருக்கிற பிரியத்தை காட்டவும் இது ஒரு சந்தர்ப்பம் ஆச்சே. அதனால‍ே அனுசி ஷேர்ஸ் ன்னு நம்ம பொட்டி தட்டற நிறுவன பேருலேயே ஆரம்பிச்சாச்சு.

சரி இன்னா, இன்னா வியாபார யோசனைன்னா…

1. பங்கு சந்தை திறக்கறதுக்கு முன்னா‍டியே நம்ம வாங்கற, விக்கிற விலைவாசிய முடிவு பண்ணி இங்கிட்டு  சொல்லிட்டு பொழப்ப பாக்க போயிடனும்.

2. அப்பாலே சந்தை முடிஞ்ச பொறவு நம்ம கேட்ட, சொன்ன விலை வந்துச்சான்னு பாத்து வந்திருந்தா நம்ம கணக்கிலே வியாபாரம் நடந்ததா எழுதிக்க வேண்டியது தான். நடக்கலேன்னா அடுத்த நாளு சந்தை தொறக்கிறதுக்கு முன்னாலே வேற விலை சொல்லி போட்டு பார்க்க வேண்டியது தான். இங்கிடு சந்தை நேரத்துக்கு முன்னாடியே நாம விலை சொல்றமாங்கிறது தான் முக்கியமே. மற்றபடி சந்தை பற்றி தகவல்கள் அவிகளே வரலாறா தொகுத்து வைச்சிருப்பாங்க. என்னைக்கு வேணுமின்னாலும் யாரு வேணுமின்னாலும் பார்த்துக்காலம்.

தினம் தினம் விலைச் சொல்றத இங்கிட்டு போட்டு பக்கத்தை நிறப்பர யோசனை இல்லே. அதுக்குன்னு தனியா ஒரு இடம் போட்டாச்சு … http://anusishares.blogspot.com இங்கிட்டு இங்கிலீசுலே வாங்க, விக்க ஆர்டர் போட்டு விட்டுட்டு சாயந்திரமே, மறுக்கா நாளோ வந்து பார்த்து அங்கிட்டே வரவு, செலவுக்கு கொடுத்திருக்கிற கோப்பில் வரவு, செலவு ‍எழுதிட வேண்டியது தான்.

அப்பப்ப லாபம் வந்தாக்கா இங்கிட்டு கட்டுரை எழுதி பந்தா பண்ணிக்குவேன். நட்டமுன்னா ஓரிரு வரி தலைப்பு செய்திகள் போல வரக்கூடும். தோத்தாங்கோளி கதையை எழுத யாருக்கு தான் ஆர்வமிருக்கும்… 🙂

Share

8 comments to புது வியாபாரப் பூசை

 • அன்பின் தமிழ் பயணி

  பூசை போட்டு ஆரம்பிக்கும் வியாபாரம் வெற்றி கரமாக நடைபெறவும் நல்ல இலாபம் கிடைக்கவும் நல்வாழ்த்துகள்

  நட்புடன் சீனா

 • நன்றிங்க சீனா அவர்களே. ஒரு புதுவிதமான விளையாட்டு போல தோன்றினாலும் நாம் கணிப்பதில் எவ்வளவு வெற்றி, தோல்வின்னு எந்த (technical analysis) பங்கு சந்தை நுட்ப ஆலோசகரும் சொல்லுவது இல்லே. எனவே என்னுடைய வியாபாரம் அதையே கொஞ்சம் விதத்யாசமா செய்யுது. இப்படி வெளிப்படையா பண்ணினா நமக்கு என்ன அறிவும், அனுபவமும் இருக்குன்னு தெரிய வருமேன்னு வியாபாரத்தை ஆரம்பிச்சு இருக்கேன்.

  உங்களை போன்றவர்கள் ஆசியால் நல்முறையில் வணிகம் பெருகட்டும். நன்றி.

 • வாழ்த்துகள் சிவா..வியாபாரம் வெற்றி பெரும்..

 • சந்தையை மதிப்பிட்டு செயலில் இறங்கும் மதிப்பிற்குரிய அண்ணன் ஒண்டிப்புலி அவர்களின் இந்த முயற்சி வெற்றி அடையவும் அனுசிசாப்ட் மென்பொருள் நிறுவனம் பெருவளர்ச்சி பெறவும் வாழ்த்துக்கள். சீக்கிரம் ஒரு பங்கு பரிவர்த்தனை நிலையமாக மாறி ஊருக்கே பயனளிக்க வேண்டுமர்ய வாழ்த்துகிறோம்.

  தங்களை ஒரு பேராசைக்காரர் என்று சொல்ல முடியாது அதற்காக அனுபவம் இல்லாதவர் என்றும் சொல்லமுடியாது. எனவே சந்தையின் மதிப்பை திறனுடன் மதிப்பிடுவீர்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உண்டு.

  பாண்டியன், புதுக்கோட்டை

 • Nathan

  அன்பு தமிழ் பயணி புதிய தொழில் சிறக்க வாழ்த்துக்கள்

 • lathananth

  வாழ்த்துக்கள்

 • […] விளையாடி பார்க்க முடிவு செய்து புது வியாபாரப் பூசை விளையாட்டை துவக்கியிருந்தேன்.. […]

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>