மிகப் பெரும் வீழ்ச்சியுடன் துவங்கிய சந்தையானது மேலும் சரிந்து சமீப காலத்தின் மாபெரும் ஒரு தின சரிவாக அமைந்து விட்டது. ஒரே நாளில் 500புள்ளிகளுக்கும் மேலாக சரிந்துள்ளது. சீனாவின் அதிர்வலை மிகவும் அதிகமாகவே எதிரொலிக்கிறது. சர்வதேச காரணங்கள் தவிர்த்து பெரிய அளவிலான இந்திய காரணங்கள் இல்லை என்பதால் விரைவில் மீளக் கூடிய வாய்ப்பு உள்ளதாக கருத வேண்டும். பருவமழையின் சதவீத குறைவு என்ற ஒரு காரணி இருப்பினும் இந்தளவும் இன்னமும் எதிர் வரும் நாட்களில் வரக்கூடிய மேலான சரிவும் சற்று அதிகமே. இந்த வாரம் முன்பேரவர்த்தக மாதாந்திர கணக்கு முடிப்பு வாரம் என்பதால் இன்னமும் சந்தை எப்படி வேண்டுமானாலும் நகர வாய்ப்புண்டு. நிப்டி வருடத்தின் மிக குறைந்த(year low) மதிப்பான 7723.85 என்பதற்கு அருகே வந்து விட்டதால் அதனை உடைத்து கொண்டு கீழிறங்கி புதிய வருட குறைவு (new year low) மதிப்புகள் உருவாகிட வாய்ப்புகள் சற்று மிக அதிகமாகவே தோன்றுகிறது. இறுதியில் -5.92% அல்லது -490.95 என்ற அளவு சரிந்து 7,809.00 என்பதாக முடிவடைந்துள்ளது.
இன்று விற்க விலை கூறியிருந்தவைகளில் UFLEX 162.00 என்ற திறப்பு விலைக்கு நட்டநிறுத்த விலையாக விற்பனையாகியுள்ளது. இன்று வாங்க விலை கூறியிருந்தவைகளில் எவையும் எனது விலைக்கு வர்த்தகமாகவில்லை.
கையிருப்பில் எந்த பங்கும் கிடையாது.
அடுத்த சந்தை வர்த்தக நாளான (25-08-2015) சந்தையில் எந்த பங்கினையும் வாங்குவதாக இல்லை. என்னிடம் உள்ள வாங்க, விற்க வேண்டிய பங்குகளின் விலைகள் குறித்த பட்டியல்…
Buy/Sell | Qty | Script | Buy Rate | SL | Sell Rate |
---|---|---|---|---|---|
Hold | NIFTY | 0 | 0.00 | 0.00 | 0.00 |
Leave a Reply