
ப்ளாக்பெர்ரி
ப்ளாக்பெர்ரி என்ற பெயரே ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவுகளில் ஒன்றாக இருந்தது. நோக்கியோ 1100 போன்ற கறுப்புவெள்ளை அலைபேசி வைத்துக் கொண்டு திரிந்த போதெல்லாம் ப்ளாக்பெர்ரி என்பது மிகப் பெரிய லட்சியமாக இருந்து இருக்கிறது பலருக்கும். ஆனாலும் N-82, 92 போன்றவைகள் சந்தையை இழுத்துப் போட்டுக் கொண்டாலும் ப்ளாக்பெர்ரி என்பது ஒரு தனித்துவமாகவே இருந்துள்ளது இது நாள் வரையிலும்.பெரும்பாலும் வர்த்தகர்களும், பெரிய அதிகாரிகளுமாக வைத்திருக்கும் அந்தஸ்தை பெற்றிருந்தது.
ப்ளாக்பெர்ரி பயன்பாட்டில் மிக முக்கியமானது அதன் சேவி(server) கனடா நாட்டில் இருக்கிறது. உலகெங்கும் இருந்தும் ப்ளாக்பெர்ரியை உபயோகித்தாலும் அது இணைய வழியே கனடாவில் உள்ள சேவி வழியாகவே இயங்கும். பொதுவாக இந்தியாவில் உள்ள அனைத்து இணைய சேவைகள் மற்றும் வெளிநாட்டு தொலைபேசி அமைப்புகள் புலனாய்வு நிறுவனங்களின் இடைமறிப்புக்கு உட்பட்டவையே ஆகும். எந்த ஒரு போக்குவரத்தையும் ஒற்று அறிய இவ்வமைப்புகளுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. இந்த வசதியினை தராவிடில் அந்த நிறுவனம் தொழில் செய்ய உரிமம் கிடையாது.

ப்ளாக்பெர்ரி
இந்த நிலையில் ப்ளாக்பெர்ரி இது நாள் வரை இடைமறிக்கும் வசதியினை இந்திய புலனாய்வு நிறுவனங்களுக்கு இது வரை தரவில்லை. நம்ம ஆளுகளும் ஒரு வெளிநாட்டு நிறுவனத்தை மிரட்டும் தெம்பு இல்லாது விட்டு விட்டார்கள். இப்ப தீவிரவாதிகள் ப்ளாக்பெர்ரி மூலம் வெளிநாடுகளுக்கு தொடர்பு கொண்டால் நம்ம புலனாய்வாளர்களால் ஏதும் இடைமறிக்க இயலாது சூழல். இவர்களின் தொடர் நெருக்குதல் காரணமாக தொலைபேசி துறை சம்பந்த பட்ட செயலாளர் கூப்பிட்டு இடைமறிக்கும் வசதியினை தருமாறு கேட்டுள்ளார். ப்ளாக்பெர்ரி நிறுவனம் சரி இந்தியா தானே என்று தெனா வெட்டாக அதெல்லாம் பெரிய இரகசியம். உங்களுக்கு எல்லாம் கொடுக்க இயலாது என்று சொல்லி விட்டது.
எங்கிருந்து தான் நம் செயலாளருக்கு சுறுசுறுப்பு வந்ததோ தெரியவில்லை. ஒரேயடியாக உத்திரவு போட்டு விட்டார். வரும் ஆகஸ்ட் 31 க்குள் இடைமறிக்கும் வசதி தரா விடில் மேற்க்கொண்டு உரிமம் இரத்து என்று சொல்லி விட்டார். இது போன்றதொரு உத்திரவை யாரும் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. இதன் மூலம் ப்ளாக்பெர்ரி நிறுவனம் தனது 4.5 லட்சம் பயனாளர்களுக்கான சேவையை மேற்க் கொண்டு அளிக்க இயலாது என்று சந்தை மதிப்பீடுகள் சொல்கின்றன.
இந்த நிறுவனம் எப்ப இந்த வசதியினை அரசுக்கு கொடுத்து அனுமதி வாங்கி முடிக்குமோ..? அது வரை ப்ளாக்பெர்ரி சேவை கிடைக்குமோ கிடைக்காதோ என்று பயனாளர்கள் குழம்பி போய் உள்ளார்கள். மிகப் பெரும்பாலும் ப்ளாக்பெர்ரி பயனாளர்கள் பெரிய பெரிய நிறுவன அதிகாரிகள் மற்றும் வியாபாரிகள் என்பது குறிப்பிட தக்கது. இந்த தடை படும் பட்சத்தில் பலருக்கும் பல வித இன்னல்கள் என்பது நிச்சயம்.
அன்பின் தமிழ்பயணி அண்ணாச்சி,
தொடையில ஒரு தீவிரவாதி குண்டு கட்டிட்டு வந்து வெடிச்சாக்கா, அடுத்த நான் ரயில்வே நிலையத்தில் போலீசார் அனைவர் தொடைகளை மட்டும் சோதிப்பார்களாம்.
இதில் அரசாங்கத்தின் இயலாமை, அரைவேக்காட்டுத்தனம்தான் இந்த உத்தரவு.
நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது பிளாக் பெரி என்கிற குறுகிய பார்வை பலன் தராது. வாய்ப் (VOIP) மூலம் செல்லும் ஏனைய சேவைகளுக்கு நம் பதில் என்ன? கணினி ஸ்கைப், மொபைல் ஸ்கைப், ஸ்கைப் போன்கள், வாய்ப் போன்கள் இவற்றிற்கு எல்லாம் என்ன செய்யப் போகிறோம்? மும்பை தாக்குதல் அறிக்கையில் நேரிடை செயற்கைக் கோள் தொலைபேசிகள், ஸ்கைப் என்று இந்த வகையறாக்களைப் பயன்படுத்தி தகவல் பரிமாற்றம் நடந்துள்ள நிலையில் (அதாவது தாக்குதல் நடக்கும் என்பது நிரூபணம் ஆன நிலையில்) வெறும் பிளாக்பெரியை தடை செய்வதால் என்ன வகையான தாக்குதலை தடுக்கப் போகிறோம்? தொடர்ந்து நடக்கப்போகும் நடவடிக்கைகளில் ஆரம்பமாகவும் இது தெரியவில்லை. இந்தியாவின் (எனக்குத் தெரிந்த அளவில்) அனைத்து நிறுவனங்களிலும் வாய்ப் போன்கள் உள்ளன. சட்டத்திற்கு புரம்பான விசியம்?
இதில் நம் அறிவியல் தொழில்நுட்பத்துறைக்கு தெளிவான கொள்கை இல்லை. நாம் 4ஜி ஸ்பெக்ட்ரம் அலகேசன் எப்ப வரும்னு வெயிட் பன்றோம். (அலோ.. அரசியல் பேசாதீங்க!)