புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

மீண்ட முதலீடு

    23/10/2014    ​தேதியன்று ரூபாய் ஒரு லட்சத்துடன் பங்கு வணிகத்​தை துவக்கிய நான் பல்​வேறு யுக்திகள்-கருவிகள் உப​யோக படுத்தி வாங்கி, விற்று வணிகத்​தை நடத்தி​னேன். நான் வணிகத்​தை துவங்கும் ​போது நிப்டி 7995.90 புள்ளியாக இருந்தது. மிக கடு​மையாக முயன்று ​போராடி கிட்டதட்ட எட்டு மாத காலம் அயராது, கண் துஞ்சாது உ​ழைத்த​மையின் காரணமாக 24/06/2015 அன்று  -11630.00 என்பதாக கிட்டதட்ட பன்னி​ரெண்டாயிரம் ரூபாய் நட்டத்தி​னை எட்டி பிடித்​தேன்., 🙂 🙂  இந்த நட்டத்தி​னை எட்டி பிடிக்கும் ​போது நிப்டி 8360.85 புள்ளிகளாக இருந்தது. 364.95 புள்ளிகள் +4.50% ஒட்டு​மொத்த சந்​தையும் உயர்ந்திருக்கும் ​போது நான் கிட்டதட்ட -12.00% என்பதாக இழந்திருந்​தேன்.

ஒவ்​வொரு யுக்தி/கருவிக​ளை பயன்படுத்தும் ​போதும் ஒவ்​வொரு விதமான பிரச்சி​னைகள் சந்திக்க ​வேண்டி வந்து முடிவில் அதனடிப்ப​டையில் ​​மேலும் நட்டத்தி​னை அதிக படுத்தி ​கொண்டது தான் மிச்சம். எனது நண்பரும், வழிகாட்டியுமானவர் கூறிய சில புகழ்​பெற்ற வழிமு​றைகள் எனது பாணி அல்லது சுபாவத்திற்கு ​ஒத்து வரவில்​லை. ​தொடர் ​தோல்விகள் எனும் நட்டங்கள் கூடிக்​கொண்​டே ​சென்றன. இறுதியில் எனக்கான வழிமு​றையி​னை நா​னே உருவாக்கி ​கொண்டு பின்னர் அத​னை ​மென்​மேலும் ​செம்​மை படுத்தி ​கொள்ள ​வேண்டியது காலத்தின் கட்டாயமாக அ​மைந்து விட்டது.

01/07/2015 முதல் எனது யுக்திக​ளை மாற்றிய​மைத்து ​செயல் பட்டதன் காரணமாக லாபமீட்டல் ​தொடங்கியது. நிப்டி 8532.85 புள்ளிகள் என்ற சூழலில் துவங்கி ​வெறும் மூன்​றேகால் மாதம் 09/10/2015 என்பதற்குள் ரூபாய் +11845.20 லாபமீட்டியுள்​ளேன். இன்று நிப்டி 8189.70 என்பதாக சுமார் 343.15 புள்ளிகள் -4.04% என்பதாக ஒட்டு ​​​மொத்த சந்​தையும் சரிந்துள்ள சூழலில் நான் கிட்டதட்ட +13.40% லாபமீட்டியுள்​ளேன். எனது முதலீடு மீண்டுள்ளது.
    
பலரும் ​பொதுவில் படிக்க கூடிய சூழலில் இப்படி​யொரு முயற்சி ​தே​வைதானா என்று பலரும் என்​னை ​கேட்டு விட்டார்கள். நம் தவறுக​ளை கண்டு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்.. அது என்​னை திருத்தி ​​கொள்ள உதவும் என்ப​தே என் பதிலாக அ​மைந்தது. இன்​றைக்கு நான் கண்டறிந்துள்ள மு​றையானது என் வாழ்நாளில் ​நெடுந்தூரம் பயனளிக்க கூடியது என்பது எனக்கு கி​டைத்த மிகப்​பெரிய லாபம். ​பொதுவில் எழுத ​வேண்டியிருப்பதால் எப்பாடு பட்டாகினும் லாபத்​தை காட்டி​யே ஆக ​வேண்டி இருக்கிற​தே.

தின வர்த்தகம் மற்றும் நீண்ட கால முதலீடு ​போன்ற பல்​வேறு வ​கைகள் இருக்கும் ​போது ஏன் இப்படி குறுகியகால வர்த்தகத்​தை ​தெரிவு​செய்துள்​ளேன் என்பது ஒரு ​கேள்வி. வட்டிக்கு விடுவ​தை ​போல தான் இதுவும் ஒரு ​தொழில். எங்கள் பக்கத்தில் மாத வட்டியாக ​தொழிலகங்களுக்கு தனியார் 3% வட்டிக்கு (36%pa) தருவார்கள். இது ​போல தான் எனது பணம் ஒரு மு​றை 3% சம்பாரித்தால் ​போதும். நிதியக ​தொழில் பிண்ணனியில் இருந்து வந்தவன் என்ற மு​றையில் இதன் ஒட்டு ​மொத்த பயன் என்ன என்ப​தை நான் நன்கு அறி​வேன். நீண்ட கால முதலீடு ஆகாது என்பதல்ல.. பணம் சுழற்சியில் இருப்ப​தே சிறந்தது என்பது எனது ​கொள்​​​கை. வரக்கூடிய லாபங்க​ளை நாம் நீண்ட கால முதலீட்டு பங்குகளில் குவித்து ​வைக்கலாம்.

Share

1 comment to மீண்ட முதலீடு

 • போட்டதை மீட்ட புலிகேசி என்று ஊர் மக்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்படுவீர்.

  சந்தை இறங்கியபோதும் சரியாது முதலீடை மீட்டதற்கு வாழ்த்துக்கள்.

  இதில் கடமையே கண்ணாக கழுகுக் கண் கொண்டு சந்தையே பார்த்திருந்தீரோ.

  சந்தை மீது அதீத நம்பிக்கை வைத்து இருக்கிறீரோ. பிறரிடமிருந்து எவ்வகையில் உங்கள் முறை மாறுதலடைந்தது? ஊரெல்லாம் நட்டக் கணக்கு பாடும்போது நீர் மட்டும் விசில் அடிக்க காரணமென்ன?

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>