ஆக்சுவலி இந்த மீட் ப்ளாக்கர்ஸ் + Express சந்திப்பு. டோண்ட் கன்பூஸ் வலைபதிவர் Vs பிளாக்கர்ஸ்.. 🙂

கோவை பிளாக்கர்ஸ் express சந்திப்பு
நம்ம பழமைபேசி அவர்கள் புத்தக வெளியீட்டு விழாவிற்க்கு வந்திருந்த நண்பர் வெங்கடேசன் மூலமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் கட்டுரை எழுத கோவையை சேர்ந்த பிளாக்கர்ஸ் சிலர் சந்திக்க ஏற்பாடு செய்ய பட்டது. நண்பர்கள் பழமைபேசி, சஞ்சய் காந்தி, வடகரை வேலன், தமிழ்பயணி சிவா(நான்), ஓசை செல்லா, வெங்கடேசன், மரவளம் விண்சென்ட் அவர்கள், சங்கவி (சங்கமேஸ்வர்) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகைப் படகாரர் (பெயர் கேட்க மறந்து போச்சு..:( ) மற்றும் அனுலா அவர்கள் கோவை நிர்மலா கல்லூரி அருகில் சந்திக்க ஏற்பாடு செய்ய பட்டது.

எல்லாம் சும்மா ஒரு நடிப்பு தான்.. 🙂
அனைவரும் அவரவர் வலைபதிவு அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டனர். அனைவரும் வலைப் பதிவதனால் கிடைத்த லாபம் என்று சொன்னது பொதுவான ஒத்த கருத்துடைய நண்பர்கள் கிடைத்தது தான் என்றார்கள். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கலந்துரையாடிய பின் அனுலா மற்றும் புகைப்படக் காரர் கிளம்பி சென்றனர். நண்பர்கள் தொடர்ந்து அரட்டையை தொடர்ந்தோம். 3 மணி நேரம் ஒத்தை காபியை மட்டும் குடிச்சுட்டு பேச அனுமதித்தார்கள். காபி விலை ரூ.35 என்பது தனி. கோவையில் இது போன்ற மிக அமைதியான இடம் இருப்பது ஆச்சரியத்தை ஊட்டியது.

அமைதியான பையனாக்கும்... கை கட்டி...!!
வரும் வெள்ளியன்று செய்திகட்டுரை வெளிவரும் என்றார்கள். இன்று பார்த்தேன் வரவில்லை… 🙂 நண்பர்கள் எல்லாம் சேர்ந்து கோவைக்கு என்று வலைபதிவர் குழுமம் துவங்க வேண்டும் என்று பேசினோம். இது போன்ற நிகழ்வுகளுக்கு அனைவருக்கும் அழைப்பு அனுப்ப ஏதுவாக இருக்குமே என்பது அடிப்படை காரணம். ஒளிப் படங்கள் அனுப்பி கொடுத்த venkat moorthy அவர்களுக்கும், காபி புரவலர் சஞ்செய்க்கும், கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்த வெங்கடேசு அவர்களுக்கும் மிக்க நன்றிகள்.
இன்னமும் நிறைய ஒளிப்படங்கள் அடங்கிய பதிவிற்க்கு பழமைபேசியின்…
உணவகத்தின் பெயர், முகவரி கிடைக்குமா? நன்றி.
இராமநாதபுரம் நிர்மலா கல்லூரி அருகில் உள்ள L&T மற்றும் காங்கிரசு கட்சி அலுவலகம் எதிரே உள்ளது atmos (அட் மாஸ்) எனும் இந்த உணவகம். முற்றிலும் சாலை அருகில் இல்லாததாலும் வேறு பெரிய போக்குவரத்தும் இல்லாததால் அமைதியான சூழல் கிடைக்கிறது. திறந்த வெளி (மரத்தடி – கார்டன்) என்பதால் கால நிலையை(வெய்யில், மழை) கவனித்தல் நலம்.
தாங்கள் கோவை என்றால் தனிமடலிடுங்களேன். விரைவில் சந்திப்போம்.
தங்கள் வருகைக்கு நன்றி.
நல்ல ஒளிப்படங்கள். கூட்டுங்க கூட்டுங்க. கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது வருத்தம் தருகிறது. நன்றி.