புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

சத்தியமா சொல்றோம்… இது அரசு பள்ளியே தான்!

இந்த கட்டு​ரை இன்​றைய தினமலர் நாளிதழ் (19-12-2015) ​செய்தியின் மீள்பதிவு. ​செய்திக்கான சுட்டி http://www.dinamalar.com/district_detail.asp?id=1413511
***************************************************************************************************************************************************************************************************
கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
புத்தகப் புழுவல்ல நான்…புத்தகத்தை தாண்டிய வாழ்க்கைப் பாடத்தை கற்றுக்கொண்டேன் எம் பள்ளியில்சிரமங்களை சிந்தனைகளால் தகர்த்தெறிவேன் சிகரம் தொடும் நாள் தொலைவில் இல்லைஎன் லட்சிய பாதைக்கு ஒளிகாட்டிய என் பள்ளியேஎன்றும் உன்னை மறவேன்…


கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் பிளஸ் 2 மாணவிகளின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாக சிதறிய கவிதைத் துளிகள் இவை. இப்பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவிகளிடம், ஆசிரியர்களால் விதைக்கப்படும் முதல் பாடம் தன்னம்பிக்கை.கடந்த, 1964ம் ஆண்டில் துவங்கப்பட்ட பள்ளி, அடையாளம் காணப்பட்டது நான்கு ஆண்டுகளாகத்தான். ' பன்றிகள் மேயும் பள்ளி' என்ற அடைமொழியை மாற்றி, எட்டா உயரத்தை எட்டி பிடித்துள்ளது.

கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
'அரசு பள்ளிக்கு வாங்க' என்று பேனர் வைத்து மாணவர்களை சேர்க்கும் கல்வி சூழல்களுக்கு மத்தியில், தனியார் பள்ளிகளுடன் போட்டியிடும் வகையில், மாணவர்கள் எண்ணிக்கை, வசதிகள், கல்வித்தரம், கலைத்திறன், பேச்சுத்திறனில் முன்னோடி பள்ளியாக திகழ்வது பாராட்டுதலுக்குரியது.


இப்பள்ளியில், ஆறு முதல் பிளஸ் 2 வரை, 1,200 மாணவிகள் படிக்கின்றனர். முழுநேரமாகவும், பகுதியாகவும் ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். பத்து, இருபது மாணவர்களை வைத்து 100 சதவீத தேர்ச்சி கணக்கை காட்டும் பள்ளிகளுக்கு மத்தியில், ஒவ்வொரு ஆண்டும், பின்தங்கிய குடும்பங்களிலிருந்து வரும், 300 – 350 மாணவர்கள் இப்பள்ளியில் பொதுத்தேர்வை எதிர்கொள்கின்றனர்.

கோவை ஒண்டிப்புதுார் ஆர்.சி., அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
பத்தாம் வகுப்பு தேர்வில், இரண்டு ஆண்டுகளாக, 100 சதவீத தேர்ச்சியும், பிளஸ் 2ல், மூன்று ஆண்டுகளாக, 99 சதவீத தேர்ச்சியும் பெற்று, சாதனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. கல்வியை தாண்டி, விளையாட்டு, பரதநாட்டியம், தற்காப்பு, தனி மனித ஒழுக்கம், சமூக பொறுப்பு, மனிதநேயம் ஆகியவை சிறப்பு வகுப்புகள் வாயிலாக கற்பிக்கப்படுகிறது.


தனியார் பங்களிப்புடன், தனியார் பள்ளிகளிலும் காண இயலாத ஆய்வக வசதிகள் இப்பள்ளியில், 1.12 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டுள்ளது. கணினி ஆய்வகம், அரங்கம், வேதியியல், இயற்பியல் ஆய்வகம், உயிரியல் ஆய்வகம் என தனித்தனியாக கல்லுாரிகளுக்கு இணையான நவீனம், தொழில்நுட்பத்துடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


பாடங்கள் தாண்டி, மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பிரத்யேக பயிற்சியாளரை நியமித்து, மாணவியருக்கு பரதநாட்டியம் கற்பிக்கப்படுகிறது. இருக்கும் இடத்தில், நிலவேம்பு, சோற்றுக்கத்தாழை, துாதுவளை போன்ற செடிகள் வைத்து மூலிகை தோட்டம் பராமரிக்கப்படுகிறது.


தலைமையாசிரியை பாக்கியம் கூறுகையில், ''இப்பள்ளி, கடந்த பல ஆண்டுகளாக எவ்வித வசதியும் இன்றி இருந்தது. கடும் சிரமத்துக்கு மத்தியில், ஆசிரியர்களின் ஒத்துழைப்பால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாணவிகளை இப்பள்ளியில் சேர்த்தோம். மாணவிகளின் எதிர்காலத்தை மட்டுமே லட்சியமாக கொண்டு, பயிற்சிகள் வழங்கி படிப்படியாக கல்வித்தரத்தை உயர்த்தினோம்.


நல்ல தேர்ச்சி விகிதத்தை காண்பித்ததால், சாந்தி அறக்கட்டளை வாயிலாக, 1.12 கோடி ரூபாய் மதிப்பில், கல்லுாரிகளுக்கும் இணையான ஆய்வக வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பில் பல மேம்பாட்டு பணிகளை செய்து கொடுத்தனர். இதுபோன்று, அரசு பள்ளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் உதவ முன்வரவேண்டும்,'' என்றார்.

***********************************************************************************************************************************************************************************

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>