பரணி(லட்சன்) தங்கை மகன். முதலாமாண்டு பிறந்த நாளை கடந்த 09-09-2010 அன்று கொண்டாடினான். கடந்த ஒரு வருடமாக எனது பெரும்பான்மையான நேரத்தை மிக உரிமையுடன் எடுத்துக் கொண்டவன்…..
பரணி - பிறந்த நாள்
எங்கிருந்தோ வந்தான் யாதவ குலத்து மாதவன் மதுசூதன்
யாதவ குலத்து மாதவன் மதுசூதன்
தேங்கியிருக்கும் நீர்போல் நீரிருக்கும் கார்போல்
கார் இருக்கும் வான்போல் வானிருக்கும் மீன்போல்
………
சொன்னபடி கேட்பான் துணிமணிகள் நனைத்திடுவான்
சின்ன குழந்தையாய் சிங்காரப் பாட்டிசைப்பான்
கண்ணை இமையிரண்டும் காப்பது போல் என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றோம் வாய் முணுத்தல் கண்டறியேன் கண்ணன்
………
கனவுகள் கோடி விழிகளில் ஓடி
உயிர் மலர் வாடி தனித்து இருக்கும் தவித்து கிடக்கும்
வண்ணமயில் நெஞ்சுருகும் வேளையிலே
எங்கிருந்தோ வந்தான்
….. கடந்த வருடம் 09ம் தேதி நள்ளிரவு வரை இவன் யாரென்று நானறியேன், யாவருமறியோம்.
கடந்த ஒரு வருடமாய் அடுத்த கணம் என்ன, எப்படி நடப்பான் என்று கணிக்க இயலா மந்திரவாதியாய் சுழன்றான்.
இங்கு ஒரு புகைப்படமும், இரு அசைப் படங்களும் இணைத்துள்ளேன். நண்பர்களுடன் பகிர்ந்துக்க ஒரு செய்தி அந்த அசைப் படத்தில் உண்டு. பரணி முதல் படத்தில் நடந்து போய் பொம்மையை எடுத்து வருவான். அருகிலேயே கேக் இருக்கும். அதை கண்டுக்க மாட்டான். அடுத்த அசை படத்தில் பரணி கேக் வெட்டும் கத்தியை எடுத்து அதை தின்றுக் கொண்டே வருவான். காலையில் கேக் வெட்டிய பின் மதியம் வரையிலும் கேக் என்று ஒன்று இருப்பதே அவன் அறிவுக்கு எட்டவில்லை.
கேக் வெட்டும் கத்தியில் தான் இனிப்பு இருக்கு என்பது அவன் கவனிப்பு. அதனால் கத்தியை மட்டுமே எடுப்பானே ஒழிய அங்கு வைத்திருக்கும் கேக்கை பற்றி கண்டுக்கவே மாட்டான். அது என்னவோ ஒரு பொருள் என்பதே அவன் நினைப்பு. குழந்தை மனம் என்பது இது தானோ…?
annaachi,
(sorry, tamil kayboard problem)
pullaiyar charthi andru iniya pathivu koduthatharku nandri.