புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

  • சீனா ​போர் - ​09/2020 (1)
    • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
    • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
  • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
    • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
    • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
  • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
    • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
  • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

 



 

தண்ணியடி

பதிவுலக நண்பர்கள் எல்லாம் அவ்வப்போது தத்தமது அல்லது பிறருடைய தண்ணியடி வீரதீர பிரதாபங்களை பதிவா போடறாங்க. நாம தான் சாதரண கோக், பெப்சி என்றாலே டயட் கோக் தேடற ஆசாமியாச்ச‍ே. இருந்தாலும் தண்ணியடிப்பு சம்பந்தமா ஒரு பதிவு போடனும் என்கிற எண்ணம் ஏனோ திடீரென வந்துடுச்சு. சரி நான் தண்ணியடிக்காட்டி என்ன என் மருமகன் தண்ணியடிப்பது பற்றிய பதிவு இது. சாட்சிக்கு யூடிபில் அசைபடம் வேற கொடுத்து இருக்கேன்.

மருமகன் பரணிக்கு தண்ணி அடிப்பது என்கிறது ரொம்ப ஆர்வமான விசயம். பலமுறை கண்டிச்சு இருந்தாலும் நிறுத்தர மாதிரி காணோம். சரின்னு ஒரு முறை அவன் தண்ணியடிப்பதை அசைபடமா எடுக்கலாம் பிறரிடம் குறிப்பா அவர் அப்பா, அம்மாவிடம் காட்ட உதவுமேன்னு கேமிராவும் கையுமா இருந்தேன்.

அவரும் வசமா ஒரு நாள் தண்ணியடிக்கும் போது கேமிராவில் சிக்கி கொண்டார். அடப்பாவி தண்ணியடிக்கிறது மட்டுமல்லாது மொடா குடியனாவும் இருக்காரு. அதாவது தண்ணி இருக்கிற மொடாவு(ஜாடி)க்குள்ளயே தலைய விட்ட  குடிக்கிறான் அப்படிங்கிறது படத்தோட கடைசி சீன்லே தெரியும்.

இந்த சாடி எங்க மொட்டை மாடியிலே காக்காவுக்கு  தண்ணி வைக்க பயன்படுது. இப்ப காகங்கள் தான் உரிமையாளரா இருக்கு. விரைவில் காகங்களும், சமாதான உடன் படிக்கையும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதனும் அந்தளவு சமாச்சாரம் இருக்கு அதுலே.

அப்பாடா நானும் தண்ணியடிக்கிறது பற்றி ஒரு மொக்கைப் பதிவு போட்டாச்சு… 🙂 🙂

Share

3 comments to தண்ணியடி

  • நல்லா இருக்கப்பே. தண்ணியடிப்பில் நான் கண்டுணர்ந்த உண்மையானதாவது

    1. உமக்கு தண்ணீருக்குள் காமிராவைப் போடாமல் படம் எடுக்கத் தெரிகிறது
    2. அண்டங்காக்கையான நீர் கருப்புக் காமிராவுடன் இருக்கும் வரையில் காக்கைகள் பிரச்சினைக்கு வராது. சோளக்கொல்லை சட்டித்தலைகை்கு பயப்படும் காக்கைகள் உமக்க பயப்படாதா என்ன?

  • அப்பாடா, நீங்க ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு ரெகுலரா பதிவும் போட ஆரம்பிச்சுட்டீஙகளா!!!

    மருமகன் பரணியின் தண்ணியடி ரொம்ப நல்லாவே இருக்கு. ஒரு வருடம் ஓடிப்போயிடுச்சா ! அடேங்கப்பா! வாழ்க.

  • வணக்கங்க கபீரன்பரே. நலம் தானுங்களே..?

    //அப்பாடா, நீங்க ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு ரெகுலரா பதிவும் போட ஆரம்பிச்சுட்டீஙகளா!!!//

    ஆமாங்க. குழுமங்கள் சில சமயங்களில் சரிப்பட்டு வருவதில்லை. எனவே நம் வீட்டு திண்ணை போல இந்த வலைபதிவினை வைச்சுக்க யோசனை. என்னிடம் (மட்டும்) பேச விரும்புவோருக்காக இந்த வலைபதிவு.

    //மருமகன் பரணியின் தண்ணியடி ரொம்ப நல்லாவே இருக்கு. ஒரு வருடம் ஓடிப்போயிடுச்சா ! அடேங்கப்பா! வாழ்க.//

    உங்களை போன்ற பெரியவர்கள் ஆசியினால் நன்றாக உள்ளானுங்க.
    தங்கள் வருகைக்கும், பின்னூட்டத்திற்க்கும் மிக்க நன்றிங்க.!!

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>