புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிளின் மில்லியன் டாலர் நிதியுதவி

கூகிள் தனது Project 10அடுக்கு100 என்ற தனது திட்டத்தின் கீழான நிதியுதவியினை அறிவித்துள்ளது. இந்த திட்டமானது பொதுநலன் சார்ந்து நீண்ட காலத்திற்கு பயனளிக்க கூடிய தன்னார்வ சேவை நிறுவனங்களுக்கு அளிப்பதற்க்காக யோசனைகளை வரவேற்றது. மேலதிக விவரங்களுக்கான சுட்டி..

http://www.project10tothe100.com/intl/EN_GB/index.html

மனித குல மேம்பாட்டிற்க்கான சிறந்த யோசனைகளுக்கு பல மில்லியன் டாலர் மதிப்பில்
நிதியளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். அதற்க்கான சரியான திட்டத்தை கண்டறிய பொதுவில் அறிவிப்பு
கொடுக்க பட்டது. சுமார் 170 நாடுகளிலிருந்து 1,50,000 க்கும் மேற்பட்ட யோசனைகள், திட்டங்கள்
பரிசீலனைக்கு வந்திருந்தது. அதிலிருந்து 16 திட்டங்களை மட்டும் தெரிவு செய்து பொது வாக்கெடுப்புக்கு
நடத்தப் பட்டது. அதில் பின்வரும் ஐந்து திட்டங்கள் தெரிவு செய்யபட்டுள்ளன.

1.    Idea: Make educational content available online for free
கான் அகாடெமி (Khan Academy – http://khanacademy.org/) எனும் புகழ்பெற்ற லாப நோக்கற்ற இணைய வழி பாடம் சொல்லி தரும் நிறுவனம் ‍தெரிவு செய்யபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் இணைய நூலகத்தில் கிட்டதட்ட 1,600 பாடங்கள்  ஒலி,ஒளி கோப்பாக இணையம் வழி கற்க ஏதுவாக உள்ளன. மேற்க் கொண்டு புதிய பாடங்கள் உருவாக்கவும், உலகின் புகழ்பெற்ற பிற மொழிகளில் மொழிபெயர்க்கவும் உதவியாக $2 மில்லியன் டாலர் நிதியுதவி அறிவிக்க பட்டுள்ளது.

2.    Idea: Enhance science and engineering education
பர்ஸ்ட்(FIRST – http://www.usfirst.org/) எனும் லாப நோக்கற்ற அறிவியல் மற்றும் கணிதத்தை இளையோரிடையே  பரப்பும் நிறுவனம் தெரிவு செய்யப் பட்டுள்ளது. இந்நிறுவனம் அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் இடையே யதார்த்த வாழ்வியல் அனுபவத்தை போதிப்பதே நோக்கமாகும். $3 மில்லியன் டாலர் நிதியுதவியின் மூலமாக மேலும் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும், அதிக மாணவர்கள் பங்கேற்க்கவும் உதவி செய்யபட்டுள்ளது.

3.    Idea: Make government more transparent
பப்ளிக் ரிசோர்சு (Public.Resource.Org) எனும் லாப நோக்கற்ற சேவை நிறுவனம் அமெரிக்காவில் அரசு சார்ந்த கோப்புகள் அதிகம் இணையம் வழியாக அணுக தேவையானவற்றை செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்க்கு $2 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதன் மூலமாக  மேலும் அதிக அளவில் அமெரிக்க அரசு இணைய வழியாக அணுகும் தன்மையுடையதாகும்.

சீவிப்

சீவிப் எனும் பொதுசன போக்குவரத்து நிறுவனக் கருவி

4.   Idea: Drive innovation in public transport
ஸ்வீப் ( Shweeb – http://shweeb.com/) எனும் நிறுவனம் பொது மக்கள் உபயோகத்திற்க்கான பொது போக்குவரத்து வாகன வசதி மேம்படுத்துதல் மற்றும் ஆராயச்சி, அபிவிருத்தி செய்து வருகிறது. $1 மில்லியன் டாலர் நிதியுதவியினை இத்திட்டத்திற்க்கு அளிப்பதன் மூலும் கிராமப்புற மக்கள் பயன்பெறக் கூடிய வகையிலான அமைப்பு குறித்தான ஆராய்ச்சி அபிவிருத்தி செய்ய படும்.

சீவிப்

சீவிப் எனும் பொதுமக்கள் போக்குவரத்து நிறுவன கருவி

5.    Idea: Provide quality education to African students
எய்ம்ஸ் (AIMS – African Institute for Mathematical Sciences – http://www.project10tothe100.com/aims/index.html) எனும் தென்னாப்பரிகாவை சார்ந்த நிறுவனம் கணிதம் மற்றும அறிவியல் கல்வியகமாகும். $2 மில்லியன் டாலர் நிதியுதவி அளிப்பதன் மூலமாக பல்கலைகழக
பட்டதாரிகளுக்கு ஒரு வருட பயிற்சியளிக்கப் படும். இதன் மூலம் அதிகமானவர்கள் கணிதம் மற்றும் அறிவியலில் தேவையான பயிற்ச்சியினை பெறுவார்கள்.

மேற்க்கண்ட ஐந்து திட்டங்களும் பல்லாண்டு காலத்தில் நிறைவேற்ற படுபவ‍ை. எனவே இவற்றை நாம் வரும்காலத்தில் சம்பந்த பட்ட நிறுவனங்களின் இணையதளம் வாயிலாக வளர்ச்சியினை காண்போமாக.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>