பிராண்டிங் என்பதும் விற்பனை(sales) என்பதும் ஒன்றேயல்ல. பிராண்டிங் என்பது ஒரு பொருளை பற்றி கருத்தை, நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துவதே ஆகும். இதன் மூலம் பிற்காலத்தில் விற்பனை அல்லது வணிகம் நடைபெறும் என்பதே. கண்காட்சிகள் போன்ற இடங்களில், பத்திரிக்கைகள் மற்றும் வார இதழ்களுடன் சில பொருட்கள் இலசமாக கொடுத்து பயன்படுத்தி பார்க்க சொல்லுவதும் இதன் அடிப்படையிலேயே. சில இடங்களில் புல்வெளி வளர்ப்பது, ஆதரவற்றோர் விடுதி ஆதரிப்பு பல்வேறு வகையில் தங்கள் நிறுவனங்களை பற்றி கருத்தை/நல்லெண்ணத்தை மக்களிடையே நிலைநிறுத்துகிறார்கள். ஆனால் இப்படி நல்ல காரியம் செய்து தான் நம் பெயரை நிலைநிறுத்த வேண்டும் என்பதல்ல.. சில ஏடாகூட வேலைகள் மூலமாக கூட தங்களை பற்றிய ஒரு கருத்தை வலுவாக மக்கள் மனதில் பதிய வைக்க இயலும் என்பதை தற்போது "ஆப்பிள்" நிறுவனம் நிரூபித்துள்ளது.
சையது ரிஸ்வான் பரூக் (Syed Rizwan Farook) என்பவர் மீதான வழக்கில் அமெரிக்க காவல் துறை அவருடைய ஐபோன் -னை கைப்பற்றியுள்ளது. இந்த அலைபேசியானது இரகசிய குறியீடு முறைகள் மூலமாக உரிமையாளரால் பூட்டி வைக்க பட்டிருந்தது. இதனை திறக்க இயலாத சூழ்நிலையில் அமெரிக்க காவல்துறையினர் அலைபேசி உற்பத்தியாளர்களான ஆப்பிள் நிறுவனத்தை தொடர்பு கொண்டு இதனை திறக்க உதவுமாறு கேட்டு கொண்டுள்ளது. பொதுவாக எந்த நாட்டிலும் இது போன்ற சட்ட பூர்வ கோரிக்கைகளை அதுவும் நீதிமன்றங்கள் வாயிலாக வரக்கூடியவைகளை நிறுவனங்கள் ஏற்று கொண்டு விடுவதே வாடிக்கை. அதே போல இந்த சமயத்திலும் ஆப்பிள் நிறுவனம் நடந்து கொண்டிருந்தால் இப்படியொரு விசயம் நடந்ததே யாருக்கும் தெரியாமல் போயிருக்கும்.
தங்கள் கைக்கு வந்த சட்டபூர்வ கோரிக்கையை முன்னிட்டு அவர்கள் கொடுத்து பதில் தான் நிறுவனத்தை பற்றிய பிராண்டிங் யுக்திக்கு மிகவும் உதவிகரமாக அமைந்து விட்டது. இந்த முடிவை எடுத்தது யாரோ அவர் மிகவும் புத்திசாலியே. ஆம்.. சட்டபூர்வ கோரிக்கைக்கு தாங்கள் தனிநபர் உரிமையை மதிப்பதாகவும், அதனால் தங்களால் குறியாக்க (மறைகுறியீடுகள்-encryption locking) முறையினை திறந்து கொடுக்க இயலாது என்று கூறியுள்ளார்கள். கவனமாக முடியவே முடியாது என்று சொல்லாமல் இந்த கோரிக்கை வைக்க இந்த நடவடிக்கை போதாது.. சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று ஏதோ ஒரு சட்டவிளக்க மறுப்பாக கொடுத்துள்ளார்கள். மொத்தத்தில் அரசின்-நீதிமன்ற கோரிக்கையை நிராகரித்துள்ளார்கள்.
அமெரிக்க குடியரசு தேர்தல் முன்னெடுப்புகள் நடந்து வரும் இச்சமயத்தில் நீதிமாட்சிமை – தனி மனித உரிமை என்ற விவாதங்கள் பலமாக நடக்க ஆரம்பித்து விட்டன. எப்படியாகினும் இறுதியில் ஆப்பிள் நிறுவனம் மறை குறியீட்டுகளை திறக்கும் முறையினை கொடுத்தே தீரவேண்டிய சூழல் வந்து தீரும். அவர்களும் அதற்கு ஆயத்தமாகவே இருப்பார்கள். இந்த இழுத்தடிப்புகளால் அவர்களுக்கு என்ன நன்மை… சற்றே யோசித்து பார்ப்போம்..
அரசு கேட்டவுடன் திறப்பு வசதியினை கொடுத்திருந்தால் நானோ, நீங்களோ இக்கட்டுரையினை எழுத, படிக்க தேவையிருந்திருக்காது. இந்த விவாதத்தை கிளப்பியதன் மூலமாக உலகின் மூலை முடுக்கில் இருக்கும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் எளிமையாக புரிய வைத்த விசயம் யாதெனில் அமெரிக்காவின் ஒற்றுவேலை சிங்கங்களான CIA, FBI போன்றவர்களாலேயே திறக்க முடியாத அளவுக்கு ஆப்பிள் ஐபோன் – பாதுகாப்பு மறை குறியீடு வசதிகள் உடையது என்பதேயாகும். அடுத்த முறை புதிய அலைபேசி வாங்க ஐபோனுடன் வேறு எந்த தயாரிப்பாளரின் அலைபேசியினை ஒப்பீடு செய்தாலும் நாம் இந்த தரமேம்பாட்டு வசதியினை கருத்தில் கொண்டே தீருவோம்.. இப்போது நீங்களே சொல்லுங்கள்.. பிறர் அறிய கூடாத வணிக தகவல்கள் மற்றும் கில்மா விசயங்களை பாதுகாப்பாக வைக்க ஐபோனை விட சிறந்ததாக வேறெந்த தயாரிப்பு உள்ளது,
Leave a Reply