பலருக்கும் பலவிதமான உடல்உபாதைகள் வரும். எனக்கு இந்த தொண்டைவலி என்பது என்னை படுத்தி எடுக்கும் ஒரு விசயம். பல மாதங்களுக்கு ஒரு முறை சிக்கி கொண்டு விடுவது உண்டு. தானாக வரும் நோய்யல்ல.
இனிப்பு உணவுகளில் சர்க்கரைக்கு பதிலாக சாக்ரீன் சேர்த்து இருந்தாலோ அல்லது உணவு பொருட்களில் வனஸ்பதி எனும் டால்டா சேர்த்து இருந்தாலோ போதும். என் தொண்டை கோவிச்சுக்கிட்டு பொங்கி எழுந்து விடும். ஏனெனில் இந்த பொருட்கள் தொண்டையில் ஏதோ ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த காரணமாக தொண்டையில் சாதரணமாக வலி எடுக்க ஆரம்பிக்கும். பின்னர் எச்சில் விழுங்க இயலாது அளவு வலி வரும். இதன் தொடர்ச்சியாக காய்ச்சல் என்று வந்து நிற்க்கும்.
இந்த உணவு பொருட்களை உண்டவுடன் சிக்கி கொண்டு விட்டோம் என்ற எண்ணம் வந்து விடும். எவ்வளவு முறை அனுபவம்.. அவ்வளவு தான் அடுத்த மூன்று தினங்கள் முதற் கொண்டு ஒரு வாரம் வரை அன்றாட வாழ்க்கை மிகவும் கசப்பானதாகி விடுகிறது.
இந்த வேதிப் பொருள்கள் ஒவ்வாமையிலிருந்து எவ்வாறு தப்பிப்பது என்று இது வரை புரியவில்லை..!! மிக அரிதாக ஊதுபத்தி புகையும், குப்பைகளில் பிளாஸ்டிக் கவர்கள், பொருட்கள் எரித்துக் கொண்டு இருந்தாலும் இவ்வாறு சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.
கடந்த சில நாட்களாக இந்த வலியினால் அவதிபட்டேன் பட்டேன் என்பதோ, ஆயுத பூசை சுண்டல், பொங்கல் உண்ண இயலாமல் அனைத்து இடங்களிலும் தவிர்த்து வந்து முடங்கி கொண்டேன் என்பதோ உங்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லையே.. 🙂
i have also same problem in my neck pls give one idea to awaid that
mona எனக்கு இதிலிருந்து விடுபட வழி தெரியாமல் போனதாலேயே இக்கட்டுரை. எனக்கு தெரிய வரும் போது அது குறித்தும் கட்டுரையிடுகிறேன். தாங்கள் யார் என்பது குறித்து சற்று அடையாளம் கொடுத்து இருக்கலாம்.
have also same problem in my neck pls give one idea to awaid that.