குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

புதிய தேடுதளம் – blekko

கூகிள், யாகூ தேடுயந்திரங்களுக்கு போட்டியாக ஏகப்பட்ட தேடுயந்திரங்கள் வந்து விட்டன. வந்த வேகத்தில் காணாமல் போயும் உள்ளன. அந்த வகையில் இப்போது புதியதாக ஒரு தேடுதளம் வந்துள்ளது.
http://blekko.com/ என்பது அதன் பெயர். தற்போது சோதனையோட்டத்தில் (பீட்டா) உள்ளது.

புதிய தேடு பொறிகள் எதனை கண்டாலும் அதன் தரத்தை சோதிக்க எளிய தேடு சோதனை செய்வது என் வாடிக்கை. தமிழ் மற்றும் tamil என்ற இரு வார்த்தைகளை உள்ளீடாக கொடுத்து தேடினாலே அந்த தளத்தின் தரம் பற்றி ஓரளவு அறிய உதவியாக இருக்கும்.

blekko-tamil

blekko-tamil

வழமை போலவே இந்த தளத்தில் தமிழ் என்ற வார்த்தை கொடுத்து தேடினேன். முதலாவதாக தமிழ்மணம்.காம் விடையாக வந்தது. சரி தமிழ் என்ற வார்த்தையும், அதிக பயனாளார்கள் பார்வையிடுவதாலும் இருக்கலாம் என்று யூகிக்க முடிந்தது. இரண்டாவது விடை விக்கிபீடியா தமிழ் பக்கத்திற்க்கான சுட்டி. இதுவும் ஏற்க தக்கதே. பின்னர் வரிசையா 3,4 என்ற ரீதியில்  tamilnet.com, tamilbeat.com, tamil2friends.com என்பதாக வந்தது. ஆயசமே மிஞ்சுகிறது. மேற்க்குறிப்பிட்ட
தளங்களில் தமிழ் என்ற வார்த்தை எவ்வளவு முறை பயன்படுத்தி இருப்பார்கள் என்பது கேள்விக்குறியது..? இன்னமும் சொல்ல போனால் முதற்பக்க பட்டியலில் வந்துள்ள தளங்கள் tamilo.com, hi2world.com, goldentamil.com, tamilmasala.net, dailymotion.com, scribd.com/group/1286 என்ற ரீதியில் வந்தன. சில தமிழ் என்பதற்க்கு சம்பந்தமுள்ள தளங்களும் வந்தன. அவற்றை இங்கு தவிர்த்துள்ளேன்.

blekko-தமிழ்

blekko-தமிழ்

tamil என்ற வார்த்தையிட்டு தேடினால் விக்கிபீடியா முதலாவதாகவும், tamilnet.com இரண்டாவதாகவும், tn.gov.in என்ற வருகிறது. இருப்பினும் 6 வது இடத்தில நியூயார்க் டைம்சு எழுதிய ஒரு தமிழ் கட்டுரையும், ஏழாவதாக எப்பிஐ தளத்தில் எழுதபட்டுள்ள தமிழ் கட்டுரையும் பத்தாவது இடத்தில் தமிழ்பார்ஓபாமா என்ற தளமும் பட்டியலில் வருவது சகிக்க இயலாத ஒன்று.

கூகிளில் இந்தளவு மோசமாக காணோம். இப்போதைக்கு வேறு வழியிருப்பதாக காணோம்.
நம் தெரு முனை அரசியல்வாதிகள் ஒபாமாவுக்கு சவால் விடுவது போல இக்கட்டுரையால் ஒன்றும் பிரயோசனமில்லை என்றாலும் மனசு ஆற இப்படி எழுத வேண்டியுள்ளது.

Share

1 comment to புதிய தேடுதளம் – blekko

Leave a Reply