ஒரு குறிப்பிட்ட விசயங்களுக்காக பதிவிடுதல் என்பது ஓரு புறம் இருக்க, தனியே பதிவு போடும் அளவுக்கு முக்கியமற்ற பல விசயங்கள் நம்மை கவர்ந்து நகர்கின்றன. அவைகள் பிடித்தமான படைப்பாக இருக்கலாம், பிடிக்காத அரசியல் நிகழ்வாக இருக்கலாம், தனி மனித சாதனைகளாக இருக்கலாம். இவைகள் குறித்து தனியே பதிவு போடுதல் ஆர்வத்தை உண்டாக்கினாலும் பெரும் பாலும் முழுமை பெறாது போய் விடுகின்றன. எனவே ஊரு உலகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து வெளியிடப் படும் தேதியுடன் பதிவுகள் போட யோசனை.
ஒரு வகையில் பார்த்தால் கருத்து கந்தசாமி போல அமைந்து விடுமோ என்ற அச்சம் மனதினுள் இருந்தாலும் முனைந்து பார்த்து விடலாம் என்று யோசனை. இது போன்ற பதிவுகள் வரும் கால இடைவெளி என்று எதனையும் நிர்ணயம் செய்துக்கவில்லை. தினமும் வரலாம், வாரா வாரம் வரலாம், மாத இடைவெளியானாலும் ஆகலாம். வேலையின் பளூவினை பொறுத்து வரக்கூடும். கிட்டதட்ட கேள்வி பதில் போல அன்றி எனக்கு பிடித்த செய்திகள், சமாச்சாரங்களை முதலில் கொடுத்து அது குறித்த என் பார்வையை தொடர்ந்து கொடுக்க எண்ணம்.
பவித்ரா (சிறுகதைகள்) (2010-11-23)
எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய சிறுகதை. கடைசி வரி வரை நான் சற்றும் எதிர்நோக்கா கோணத்தை காட்டி கதையினை மிகச் செவ்வனே முடித்துள்ளார். எப்படிதான் 99சதவீதத்தினர் எதிர்பார்க்க்கும் ஒரு முடிவினை விட்டு இல்லாத ஒன்றை கொண்ட வந்து (சொல்ல போனால் – கொண்டு வராது) மிக சாமார்த்தியமாக முடிக்க முடிகிறதோ.
செப்டிக் டேங்க்குகளில் துப்புரவு தொழிலாளர்கள் இறங்க தடை
இந்த எளிய தடையாணையை பிறப்பிக்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடத்த வேண்டியிருக்கிறது. என்ன செய்ய..?
Leave a Reply