பொதுவா சிலர் குளிக்க வாளி வாளியா தண்ணீர் தேவைபடும். ஒரு சிலர் மிக எளிமையா குளிச்சு முடிச்சுடுவாங்க. ஆனாலும் கோவையை சார்ந்த சிறுதுளி போன்ற நீராதார நல அமைப்புகள் குளிக்கும் போது நீர் சிக்கனத்தை கடைப்பிடிப்பதை பற்றி ஒரு காட்சி விளக்க நிகழ்ச்சி கோவை வ.உ.சி. பூங்காவில் நடத்தியிருக்காங்க.
இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சார்ந்த கோவிந்தசாமி என்ற இளைஞர் மேடையில் 1500மில்லி தண்ணீரில் குளித்து காண்பித்தார். தலைக்கு ஷாம்பு மற்றும் உடலுக்கு சோப்பு போட்டு முழுமையான குளியலை முடித்துள்ளார். வாளி வாளியாக தண்ணீரை வீணடிக்கும் மக்கள் இதனை பார்த்து 1500மில்லியில் இல்லாது போனாலும் ஒரு வாளி தண்ணீரிலாவது குளித்து முடிப்பார்களாக.
Leave a Reply