தமிழர்கள் அனைவரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரைகள் திரு.இராம.கி அவர்களின் (வளவு) வலைபதிவில் வெளியாகியுள்ள மூன்று கட்டுரைகளாகும். தமிழின் கடந்த காலம் மற்றும் எதிர்காலப் போக்கு குறித்து நிறைய அறிந்து கொள்ள இயலுகிறது. சில விடாப்பிடியான அடிப்படைக் கருத்துக்களை மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
தமிழெழுத்தும் கிரந்தமும் குறியேற்ற ஊடாடல்களும் – 1,2,3
http://valavu.blogspot.com/2010/11/1.html
http://valavu.blogspot.com/2010/11/2.html
http://valavu.blogspot.com/2010/12/3.html
http://www.youtube.com/watch?v=fkz83VFEk1A
– History Of The World Part 1 – The Stone Age
நண்பர் அளித்த சுட்டி வழியாக பார்த்த படம். வெகுவாக நகைச்சுவையாக உள்ளது. அமைதியாக விசயத்தை சொல்லுதல் என்பது மிகவும் கடினமானது. அதை அழகாக செய்துள்ளார்கள்.
உயிரின் அடிப்படை ரசாயனமான பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற தனிமம் கொண்ட புதிய பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு உயிர் உருவாக 6 வேதியல் பொருட்கள் கட்டாயம் என்பது தான் இதுவரை உயிரிலார்கள் கூறி வந்த ‘விதி’. அந்த 6 பொருட்கள்: கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர்.இதில் டிஎன்ஏ (deoxyribo nucleic acid-DNA ) எனப்படும் நமது ஜீன்கள் உருவாக பாஸ்பரஸ் மிக மிக அவசியம். இதனால் உயிரின் அடிப்படை வேதிப் பொருள்களில் மிக முக்கியமானதாக பாஸ்பரஸ் கருதப்படுகிறது.ஆர்சனிக் என்பது விஷத்தன்மை கொண்ட, உயிர்களைக் கொல்லும் திறன் கொண்ட ஒரு தனிமம். ஆனால், அதுவே ஒரு உயிரை உருவாக்கியும் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2010/12/03/nasa-discovery-changes-scientific-definition.html
பிற கிரகங்களில் உயிரினங்கள் இருக்குமா என்ற ஆராய்ச்சி இனி உத்வேகம் அடையும் என்று எதிர்பார்க்கலாம். இது நாள் வரை குறிபிட்ட வகையில் தான் உயிரினங்கள் அமைந்திருக்கும் என்ற எண்ணம் போய் இனி வேறு விதமான உயிரின கட்டமைப்பு இருக்க பெறலாம் என்ற எண்ணத்தில் தேடுவார்கள். சொல்ல போனால் நிலவில் கூட ஏதேனும் நுண்ணுயிரிகள் இருக்க கூடும். குறைந்த பட்சம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்ப்பை தோற்றுவிக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணை 3 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக நேற்று மாலை நிரம்பியது.ணை கட்டப்பட்ட 76 ஆண்டுகளில் இப்போது 37வது முறையாக அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி நேற்றிரவு நிரம்பியது. உத்திரமேரூர் பகுதியில் பெய்த பலத்த மழையால் கடலமங்கலம் ஏரி நிரம்பி அதில் உடைப்பு ஏற்பட்டது. அந்தத் தண்ணீர் முழுவதும் மதுராந்தகம் ஏரிக்கு வருவதால் நேற்றிரவு ஏரி அதன் முழு கொள்ளளவான 23.5 அடியை எட்டியது.
தமிழகத்தில் பொது மக்கள் மன அமைதி என்பது விவசாயத்தின் அடிப்படையில் அமையக் கூடியதே. போதுமான அளவு விளைச்சல் இருக்கும் பட்சத்தில் அரசியலில் என்ன தவறு நடந்தாலும் போனா போகுது போ.. என்ற தாராள சிந்தனையில் விட்டு விடுவார்கள். வெள்ளாமை பொய்த்து விட்டால் என்னதான் நல்ல ஆட்சியாளராக இருப்பினும் தங்கள் வாழ்வியல் துன்பத்திற்க்கு ஆட்சியாளர்களே காரணம் என்பதாக மிகவும் குறைசொல்ல ஆரம்பிப்பார்கள். இந்த வருடம் விளைச்சல் நன்றாக இருக்கும் போல தான் தெரிகிறது.
உயிர் மேட்டர் நல்ல விசியம்!