புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

பங்குவணிகம் – துணிவு மற்றும் ​அளவு ​மேலாண்​மை

Risk management and Position management

நான் துவக்க காலத்தில் பல்​வேறு பங்குக​ளில் வர்த்தகம் ​செய்து வந்தபின் தற்​போது F&O பங்குகளில் மட்டு​மே என்ற ​கொள்​கையில் ​வணிகம் ​செய்து வருவது யாவரும் அறிந்த​தே. பங்கு வணிகத்தின் ஒரு பகுதியான வாங்கும் வி​லை – உள்நு​ழை, விற்கும் வி​லை – ​வெளி​யேற்றம் என்ப​தை​யெல்லாம் தீவிரமாக கவனம் ​கொண்டு ஓரளவு ​தேறி விட்டதாக என்​னை நா​னே ​மெச்சி ​கொள்ளும் இந்த சமயத்தில் மற்​றொரு பகுதியி​னையும் கவனித்தில் ​கொள்ளுவது அவசியம் என நி​னைக்கி​றேன்.

நமது துணிவு மற்றும் ​கொள்முதல்/இருப்பு அளவு ​மேலாண்​மை(Risk management and Position management ) என்று ஓரளவு தமிழாக்கம் ​செய்கி​றேன். நாம் ஒரு பங்கி​னை வாங்குவதாக முடிவு ​செய்த பின்னர் வரக்கூடிய முதல் ​கேள்வி எத்த​னை பங்குகள் வாங்குவது என்ப​தே. இத​னை பற்றி ​மேலும் அறிய கூகிளில் share trading risk management and position management   என ​​தேடினால் நி​றைய ​செய்திகள் கி​​டைக்க ​பெறும். நாம் எந்தளவு துணிவு ​கொள்கி​றோம் மற்றும் எத்த​னை பங்குக​ளை வாங்கி ​மேலாண்​மை – பராமரிப்பு – ​செய்கி​றோம் என்ப​தே பிரச்சி​னை.

நான் தற்​போ​து எனது துணிவு மதிப்பாக ரூ.500 ​​கொண்டுள்​ளேன். அதாவது ஒரு வணிகத்தில் எனக்கு ஏற்படக்கூடிய ஆகப்​பெரிய நட்டமாக ரூ.500 மட்டு​மே இருக்க ​வேண்டும் என்பது எனது எண்ணம். அதற்​கேற்ப  ரூ.500/(வாங்கும் வி​லை-நட்டநிறுத்த வி​லை) என்பதாக கணக்கிட்டு வாங்க கூடிய பங்குகளின் எண்ணிக்​கை​யை இதுநாள் வ​ரையிலும் முடிவு ​செய்து வந்திருந்​தேன். தற்​போது இதில் சில மாற்றங்க​ளை ​செய்ய மு​னைகி​றேன். காரணம் F&O என்பதில் Lot என்பதாக​வே வணிகம் ந​டை​பெறுகிறது. ஒரு lot ல் எத்த​னை எண்ணிக்​கை பங்குகள் அடங்குகின்றன என்ப​தை https://www.nseindia.com/content/fo/fo_mktlots.csv என்ற ​கோப்பில் காணலாம். இதில் உள்ள​வைகள் ரூ.5,00,000 (ஐந்து லட்சம் ரூபாயி​னை) அடிப்ப​டையாக ​கொண்டு எண்ணிக்​கை கணக்கிட பட்டுள்ளது.

நான் இனிமேல் ஒரு பங்கில் ரூ10,000 (பத்தாயிரம்) முதலீடு ​செய்வதாக உள்​ளேன். இந்த ​தொ​கையானது ஐந்து லட்சத்தில் இரண்டு சதவீதமாகும். இ​தே ​போல பங்குகள் எண்ணிக்​கையிலும் இரண்டு சதம் என்பதாக முதலீடு ​செய்ய ​போகி​றேன். உதாரணமாக ADANIPORTS நிறுவனத்தின் லாட் அளவானது 2500 என்பதாகும். இதில் இரு சதவீதமாக 50 பங்குக​ளை வாங்கிட ​போகி​றேன்.இது ​போல​வே பிற நிறுவனங்கள் முதலீடும் அ​மையும்.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>