சாதரணமாக அறிமுகற்றவர்களிடையே இருந்து வரக்கூடிய முன்னகர்த்து மடல்கள் (forward messages) எரிதம்(spam) என்று ஒதுக்கிவிடுவது இயல்பு.ஆனால் நேற்று ஒரு நண்பரிடம் இருந்து ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் சொல்லி மடல் வந்திருந்தது. சாதரணமாக ஒதுங்கி செல்லக் கூடியவன் நேற்று உடனடியாக சற்று காரச்சாரமாக பதில் மடலிட்டேன்.
உண்மையில் நல்லெண்ண அடிப்படையில் அமைந்த மடல் தான். ஆங்கில புத்தாண்டில் அனைத்து வளமும் பெற்று வாழ வாழ்த்தியிருந்தார். எம்மதமும் சம்மதம் என்ற இறைநம்பிக்கையில் சொல்ல விரும்பியிருந்தால் சுலபமாக இயேசுவின் ஆசியினால் என்று சொல்லியிருக்கலாம். கிடைக்க கூடிய நல்ஆசியினை யாரும் மறுதலிக்க போவதில்லை. நல்ல காரியம் செய்ய முயன்ற அந்த அன்பருக்கு தேவையற்ற சங்கடமாகியிருக்கும். எல்ல வல்ல அந்த ஆண்டவன் மனநிம்மதியை அளிப்பானாக.. 🙂 🙂
பொதுவாக திருக்கோவில்கள் சில குறிப்பிட சமயங்கள் தவிர்த்து நடுநிசியில் திறப்பது கிடையாது. மார்கழி மாதம் விடியலில் திருப்பாவை, திருவெம்பாவை பாடலுடனும், பொங்கல், சுண்டலுடனும் பள்ளியெழுச்சி கொள்ள வேண்டிய இறைவனை போய் நடுநிசியில் தொந்திரவு செய்வது என்ன அர்த்தம் என்றே புரியவில்லை.
இந்த பதில் மடல் போட காரணம் யோசித்த போது புலப்பட்டது. எங்கள் பகுதியில் பல தெருக்களில் புத்தாண்டு கேக் வெட்டி கொண்டாட படுகிறது. எந்தவொரு வைதீக காரணம் கிடையாது. நடுநிசி வரை ஒலிப்பெருக்கியில் பாடல்கள் அலற விடப்படுகின்றன. இளைஞர்கள் இவ்வளவு பொறுப்புடன் கொண்டாட காரணம் இது ஒரு வெளிக்காரணமே. மறைபொருளாக காண்பது டாஸ்மார்க் தீர்த்தமே. வயது வித்தியாசமின்றி சரக்கு பொதுவெளியில் உட்கொள்ள படுகிறது.
ஒவ்வொரு வருடமும் வருடத்தின் எண் அதிகரிப்பது போல குடிமகன்கள் எண்ணிக்கை ஏறுமுகத்திலேயே இருப்பது கவலையளிக்கிறது.
நானும் இதைத்தான் சொன்னேன்.. இவனுகளுக்கு உல்லாசமாக கொண்டாட ஒரு நாள் வேண்டும்..இந்த நாளை அது போன்ற ஒன்றாகவே கருதுகிறேன்.. கோயம்புத்தூரில் இப்போது பல இடங்களில் கேளிக்கை விடுதிகளின் விளம்பரப் பதாதைகள் காணப படுகின்றன.. உறுப்பினர்கள் மட்டும் பங்கு பெறலாம், இந்த நடிகை பங்கு பெறுகிறார், போன்ற விஷயங்கள் வேறு.. இது போன்ற கலாச்சாரம் கரையான் புற்றைப் போன்றது.. அடிக்கடி கேளிக்கை விடுதிகளில் உறுப்பினராகக் கேட்டு குறுஞ்செய்திகள் வேறு வருகின்றன. இதெல்லாம் மேற்கத்தியக் கலாச்சாரத்தின் தாக்கத்தின் உச்சம்.. முன்பெல்லாம் இதெல்லாம் மும்பை போன்ற பேரு நகரங்களில் இருந்தன.. இப்போது அது பட்டி தொட்டிகளையும் பதம் பார்க்கக் காத்து இருக்கின்றன.
அந்த மடலில் உங்கள் நண்பர் என்ன தகவலை அளித்து இருந்தார் என்று சொல்லவே இல்லையே..??
பின்னூட்டத்திற்க்கு மிக்க நன்றிங்க சாமக்கோடங்கி.
நுகர்வு கலாச்சாரத்தின் விளைவாக எடுத்துக்கலாம்.
அதை பற்றி சொல்லுதல் நாகரீகம் அல்லவே?
வீண் வம்பு வளர்ப்பதாகவே அமையும்.