குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

(IE,CHROME)+FIREBUG

இணைய தள வடிவமைப்பாளர்களுக்கு பெரிதும் உதவும் ஒரு கருவி firebug(தீப்பூச்சி) எனபடுவதாகும். நாம் வடிவமைத்துள்ள இணைய தளப்பக்கத்தை தேவையான படி மாற்றி பார்த்து திருத்த உதவக் கூடியது. எனக்கு அறிமுகம் ஆனபோது தீநரி (firefox) உலாவியில் ஒரு இணைப்பானாக கிடைத்தது. நானும் இது தீநரி உலாவி  திறவூற்றிலானது என்பதால் எளிதில் உள்ளிணைப்பாக இணைந்து விடுகிறது. ஆனால் IE யில் கடினம். அவர்கள் தனது உலாவிக்கான செயலியில் பிறஇணைப்பு செய்ய பட வேண்டும் எனில் அவ்வளவு எளிதில் தேவையான தகவல்கள் தரமாட்டார்கள் வணிக ரீதியிலான தடைகள் இருக்க கூடும் என்ற எண்ணத்தில் IE க்கான இந்த கருவியின் வெளியீட்டை தேடாமல் இருந்து விட்டேன்.

FireBug

FireBug Lite

http://getfirebug.com/firebuglite
சமீபத்தில் மிக முக்கியமாக IE உலாவியில் சம்பந்த பட்ட வடிவமைப்பை பார்த்து திருத்த வேண்டிய சூழல் வந்து விட்டதால் தேடல்கள் துவக்கினேன். தீப்பூச்சியின் IE இணைப்பு இருக்கிறது என்று அறிந்து மகிழ்ந்தேன். அதை உபயோகித்து பார்க்கும் போது வியப்பில் ஆழ்ந்து விட்டேன். உண்மையில் இந்த திட்டத்தினர் IE செயலியினுள் புகாமலேயே வெளியிலிருந்து கொண்டே வேலை செய்வது போல தீர்வு கண்டு இருந்தனர். யோசித்து பார்க்கையில் மிக எளிய நுட்பமே. ஆனால் மிகப்பெரிய கண்ணோட்டம். உள்ளே சேர்ப்பது எப்படி என்று மெனக்கெடாமல் நம் ஊரு அரசியல்வாதிகள் போல வெளியே இருந்தே ஆதரவு கொடுத்து வேலையை முடிக்கிறார்கள். என்ன ஒரே ஒரு சிரமம்.தேவைபடும் வடிவமைப்பாளர் தனது இணைய பக்கத்தில் ஒரு வரியினை சேர்க்க வேண்டும்..

<script type=”text/javascript” src=”/local/path/to/firebug-lite.js”></script>

சம்பந்த பட்ட தீப்பூச்சி கருவியானது குறிப்பிட இடம் என்று கணிணியில் நிறுவ பட்டு இருக்காது. நாம் நம்  தேவைக்கேற்ற இடத்தில் வைத்துக் கொண்டு உள்ளே அழைத்துக் கொள்வது என்பது மிக எளிமையானது. தேவையற்ற பாதுக்காப்பு ஓட்‍டை அது, இது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். பாதுகாப்பு குறித்தும் தீப்பூச்சி திட்டத்தினர் கவலை படவேண்டியதில்லை.

மாற்றி யோசி என்னும் தாரக மந்திரம் இதுதானோ..?

Share

2 comments to (IE,CHROME)+FIREBUG

Leave a Reply