இந்த சப்பானிய தளத்தில் நாம் டிவீட்டர் பயனாளர் பெயர் அல்லது தேடு சொல் கொடுத்தால் சம்பந்த பட்ட ட்வீட்டுகள் அவரவர் படங்களுடன் பல்லூடக வசதியால் பேரணியாக நடத்தி காட்டுகிறது. பிண்ணனி இசை உள்ளதால் ஒலியமைப்பு வசதியுடன் பார்க்கவும். நான் நம்முடைய சமீபத்திய பிரச்சினையான
#tnfisherman
என்ற தேடுசொல்லை கொடுத்து பார்த்த போது நம் நண்பர்கள் அனைவரும் தத்தமது ட்வீட்டு கருத்துகளுடன் பேரணியாய் அலைஅலையாய் வந்தார்கள். ஒரு சீரியஸான பேரணி போல இல்லாவிடினும் பேரணி என்பதாக கருதலாம்.
வெறுமே
தமிழ்
என்ற வார்த்தைக்கு வரும் பேரணி மிக அழகாக உள்ளது.
கூகிள் பஸ்ஸில் சுட்டி அளித்த நண்பர் ராஜாசங்கருக்கு நன்றி.
Leave a Reply