சமீபத்தில் பார்த்த இரு யூடியூப் குறும்படங்கள் மனதில் மீண்டும் மீண்டும் காட்சி படுத்தப் பட்டு கொண்டே உள்ளன. அவைகள் குறித்தும், அவைகள் குறித்து கிடைத்த அறிமுக குறிப்புகளும்.
ஜனகண மன என்று தொடங்கும் தேசிய கீதம் நம் அனைவருக்கும் மனப்பாடம். அதைப் பாடும்போது அதற்கென ரையறுக்கப்பட்டுள்ள பண்ணில் உரக்கப் பாடுவதும் நமக்குப் பழக்கம்தான். ஆனால், அது மௌனமாகப் பாடப்படுவதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சிலர் இந்த மௌனகீதம் இசைக்கப்படுவதைப் பார்த்திருக்கலாம். கேட்டிருக்கமுடியாது.
சமீபத்தில் முத்ரா என்ற விளம்பர நிறுவனம் ரிலையன்ஸ் கம்பெனிக்காக ஒரு துண்டுப்படம் எடுத்திருக்கிறது. காது கேளாத-வாய் பேசமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் பின்னணியில் தேசிய கீதம் ஒலிக்க, இந்த மாற்றுத்திறனாளிகள் தங்கள் அழகிய சைகை மொழியில் தேசிய கீதம் இசைப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறதாம். படத்தைப் பார்ப்பவர்கள் அப்படியே பிரமித்து நிற்கிறார்களாம்.
தேசபக்திக்கு மொழி தேவையா என்ன?
உதயன்.
http://www.youtube.com/watch?v=LdjZDDGeeYQ
இக்காணொலியை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும், இதில் இடம்பெறும் இசையும், நாட்டியக் கூறுகளும் என்னுள் இருக்கும் அகந்தை, இறுமாப்பு, திமிர், கள்ளம் என ஏதாவதொன்றைத் துடைத்தெறிவது போன்ற உணர்வு!!
பழமைபேசி.
இரண்டு படங்களும் அவசியம் நம் மதிப்பு மிக்க நேரத்தை ஒதுக்கி பார்க்க கூடியதே. எனக்கும் ஒரு பாடல் வரி நினைவுக்கு வருகிறது…
நல்ல நல்ல குழந்தைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி..!!
மானாட மயிலாட போகாமல் வாழ்வில் உருப்படியான பிறவற்றை செய்யும் குழந்தைகள் மற்றும் பயிற்றுவிக்கும் தாய்மார்களை காணும் போது மிக்க மகிழ்ச்சி உண்டாகிறது. இரண்டாவது படம் 13 நிமிடங்கள் எடுத்துக் கொண்டாலும் ஒவ்வொரு விநாடியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
thesiya geetham padal padiyadhu arumai solla varthai yethum illai…