புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..!!

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவில் என் வாக்கை வெற்றிகரமாக செலுத்தியாச்சு. நல்ல விறுவிறுப்பான வாக்குபதிவு. பலரும் சொல்லுவது போல மோசமானவர்களில் ஓரளவு நல்லவரை தெரிவு செய்ய ரொம்ப எல்லாம் சங்கடமோ சிரமமோ இல்லை.

ஒரு மோசமான முதலாளி, தொழிலாளி, வாடிக்கையாளர், அண்டைஅயலாரை நம்மால் பொறுத்துக் கொள்ள இயலுவ தில்லையா என்ன..? மோசமானவர்களுக்கு பயந்து என்ன செய்து விடுகிறோம்..?

ஒவ்வொரு தேர்தலில் புதுமையை புகுத்தி வரும் இந்திய தேர்தல் ஆணையம் இந்த தேர்தலில் சிறிய பணவசதி அற்ற வேட்பாளருக்கும், பெரிய பணவசதியுடைய வேட்பாளருக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பெருமளவு குறைத்து விட்டது. அனைவரும் ஒத்தை வண்டியில் தான் பிரச்சாரம் செய்ய இயன்றது. தாரை தப்ப‍டைகள் முழங்க ஊர்வலம் வந்து மக்களை மயக்குவது எல்லாம் முடியாது. சுவர்கள் எல்லாம் வெகு சுத்தம். எந்தவொரு கிறுக்கலும் கிடையாது.

கூடிய விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் செய்ய கூடியதா நான் எதிர்பார்ப்பது இரண்டு. குறுகிய காலத்தில் 49ஓ வசதியை வாக்களிப்பு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி தெரிவாக சேர்த்து விடுவார்கள். தனியே நாம் 49ஓ வசதி பயன்படுத்துகிறோம் என்பது வெளியே தெரியாது. இதனால் நிறைய பேர் வாக்களிக்க கட்டாயம் வருவார்கள்.

வெகு நீண்ட காலத்தில் ஒவ்வொரு தொகுதியை சார்ந்த வேட்பாளரும் அந்தந்த தொகுது கட்சி உறுப்பினர்களால் தெரிவு செய்ய பட்டவராக இருக்க வேண்டும் என்பது வந்து சேரும். மேலிடத்தில் கவனிப்பதன் மூலம் வேட்பாளராக நிற்பது நடவாத காரியமாக மாறும். கனவு போல இருப்பினும் போட்டி வேட்பாளர்கள் அதிகரித்து வரும் போக்கு இந்த சூழலை கட்டாயம் கொண்டு வரும். இந்த வசதி வந்தால் மக்களாட்சி இன்னமும் சற்று மேம்படும் என்பது என் கருத்து.

Share

2 comments to மக்களாட்சிக்கு வாக்களித்தோம்..!!

 • Pandian

  Oru sandhegam. kalla ottu poduvathu kutrama. ottuku kaasu vanguvathu kutrama. ithil ethu periya kutram?

 • சட்டபடி இரண்டுமே குற்றம்.
  மனச்சாட்சி படி….

  கள்ள ஓட்டு போடுவது மகா குற்றம். பிறர் ஓட்டை போட நாம் யார்..?

  பணத்திற்க்கு ஆசைப் பட்டு ஓட்டுக்கு காசு வாங்குவதோ அல்லது வாங்காவிடில் மிரட்டலுக்கு ஆளாக நேருமே என்று பயப்பட்டு வாங்குவதோ உங்கள் மனதை பொறுத்தது.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>