இந்திரா பார்த்தசாரதி அவர்களின் கிருஷ்ணா கிருஷ்ணா நூலை படித்தேன்.கிழக்கு பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. விலை ரூ.150/- இணையத்தில் வாங்க சுட்டி..
https://www.nhm.in/shop/978-81-8368-080-6.html

கிருஷ்ணா கிருஷ்ணா
ஒரு பெரும் படைப்பினை பற்றிய விளக்கம் அல்லது தனது பார்வை என்ற வகையில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் மகாபாரதத்தின் தனி பெரும் நாயகனாகிய கிருஷ்ணனின் செயல்பாடுகள் குறித்த தனது கோணத்தை சொல்லுகிறார்.
கண்ணன் லீலைகளை சொல்லிச் சொல்லி ஏகப்பட்ட நூல்கள் பாரத நாட்டில் வந்துவிட்டன. இதில் நவீன கால நிர்வாக முறையில் கிருஷ்ணன் எடுத்த முடிவுகள், நியாயம், நீதி, தர்மம் போன்றவைகள் விளக்க பட்டுள்ளது.இளைய தலைமுறையினரை கவரும் வண்ணம் வெகு இயல்பான நடையில் அமைந்துள்ளது. பொறுமையாக மகாபாரத கதாகாலேட்சபம் கேட்க நேரமின்றி இருப்பவர்களுக்கு இது போன்ற நூல்கள் மிகவும் உபயோகமான ஒன்று.
ஜரா எனும் வேடன் மூலமாக நாரதர் வாயிலாக நடந்தவற்றை கிருஷ்ணனே வெளிப்படுத்துவதாக நடை அமைந்துள்ளது. நாரதரும் நவீன கால பாணியில் நமக்கு விளக்கி சொல்கிறார். எனவே விளக்கமற்ற பகுதிகளோ, சந்தேகம் தொக்கியுள்ள சூழலோ புத்தகம் எங்கும் கிடையாது.இளைய தலைமுறை ஈடுபாட்டுடன் படிக்க நாரதர் சமகால உலகியல் செய்திகள் எல்லாம் கலந்து கட்டியே தருகிறார். நல்லவேளை விளம்பர இடைவேளை விடாது தொடர்ந்து சொல்லி செல்கிறார்.
இது நாள்வரை தமிழில் இது போன்ற நூல் எழுத முயலுபவர்கள் தவறாது சமஸ்கிருத சுலோகம் மேற்க் கோள் சொல்லி வைப்பார்கள். அதையாவது ஓரளவு ஏற்றுக் கொண்டு வியாசரே இப்படிதான் எழுதியிருப்பாரோ என்று மனச் சமாதானம் அடைந்து கொள்ளலாம்.
ஆனால் இந்த நூலை சிறப்பு வாய்ந்தது என்று என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. காரணம் நூல் முழுக்க நெருடலாக விரவியுள்ள ஆங்கில சொற்கள் பிரயோகம். செம்மொழியில் பல்லாயிரக் கணக்கான வருடங்களாக விவரிக்க பட்ட ஒரு செய்தியினை தற்போது விளக்க இயலவில்லை என்பது சற்றும் ஒப்புக் கொள்ள இயலவில்லை. இந்த நூல் ஒன்றும் துருவ செயற்கைக் கோள் செலுத்து வாகன(PSLV – Polar Satellite Launch Vehicle) தொழில் நுட்ப கட்டுரை கிடையாது. ஊடகத்தில் ஆங்கில கலப்பு அதிகரித்து வருவதாக கவலையடைந்து ஒரு சூழலில் இது போன்ற நல்ல கருத்துள்ள விசயங்களை தவறான மொழி பிரயோகத்தில் அளித்து வருங்கால சந்ததியினரை தங்கிலீசு சரியானதே என்று தவறான பாதையில் பயணிக்க வைக்கிறார் ஆசிரியர்.
Leave a Reply