புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

கண்ணேதிரே நிகழும் சரித்திர நிகழ்வை பற்றிய சில வரிகள். பல்லாயிரக்கணக்கான வருடங்களாக  நம் பாரத நாடு எண்ணெற்ற படையெடுப்புகள், மொழி, கலாச்சர, மத ரீதியிலான ஆதிக்கங்கள், ஆட்சி முறை மாற்றங்கள் போன்றவற்றை தாங்கி கொண்டு செறித்த வண்ணம் உள்ளது.

என் அறிவு சரியானதாக இருப்பின் உலகில் வேறு எந்த ஒரு மக்களாட்சி நாட்டிலும் பொதுவுடமை கட்சியினர் தொடர்ந்து இவ்வளவு காலம் கிட்டதட்ட 35 வருடங்களாக இடைவெளியின்றி ஆட்சியில் இருந்திருக்க மாட்டார்கள். நாட்டின் ஒரு பகுதியில் வேறெந்த இடையூறும் இன்றி – வேறு கட்சி ஆட்சி இன்றி – மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சி நடைபெற்று முடிந்துள்ளது.

கிட்டதட்ட இதே கால அளவு தமிழகத்திலும் தேசிய கட்சி ஆட்சியில் இல்லாது திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன.
ஆனால் தமிழகத்திற்க்கும், மேற்கு வங்காளத்திற்க்கும் இடையே உள்ள வித்தியாசம் மிக முக்கியமானது. திமுக, அதிமுக என்று
மாறுபட்ட கட்சியினர் ஆட்சியில் இருந்ததால் பகுத்தறிவும், திராவிட உணர்வுகளும் மக்களிடையே நிலைநிறுத்த படஇயலவில்லை
என்று சப்பை கட்டு கட்டலாம்.

மேற்கு வங்காளாத்தில் இது போன்ற காரணமும் கூற இயலாது. பாரத நாடு வழமை போலவே இந்த கொள்கை கோட்பாட்டை உள்வாங்க சுமார் 35 ஆண்டுகள் எடுத்துக் கொண்டுள்ளது. டாடாவின் தொழிற்சாலைக்கு பொதுவுடமைவாதிகள் இடம் தேடியதே  பாமரனுக்கு எளிதில் விளங்க கூடிய ஒரு எளிய தோற்றம்.இறுதியில் பொதுவுடைமைவாதிகள் நல்லவர்கள், அப்பழுக்கற்றவர்கள் அவ்வளவுதான் என்ற முடிவிற்க்கு வந்து, மேற்க்கொண்டு அடுத்த கட்டத்திற்க்கு நகர்ந்து விட்டது.

இன்றைக்கு மேற்கு வங்காளம், கேரளா என்ற இரு மாநிலங்களில் பொதுவுடமைவாதிகள் தோற்று ஆட்சியிலிருந்து வெளியேறும் முக்கிய நிகழ்வு நடந்துள்ளது. யாரும் பெரிய முதலாளித்துவ சதியென்றோ அல்லது பிற புரட்சியென்றோ பேசவில்லை. நாகரீகமாக தமது தோல்வியினை பொதுவுடமை தலைவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

மீண்டும் இது போன்று மாநிலங்களில் பொதுவுடமைவாதிகள் ஆட்சியை பிடிப்பார்களா என்பது காலம் தீர்மானிக்க வேண்டியது.
இதனினும் மேலாக மீளக் கூடும். ஆனால் இன்றைய  வெளியேற்றமும்,  அதனால் பாரதத்தில் காணப்படும் அக்கொள்கைக்கான பெரிய வெற்றிடமும் எளிதில் புறந்தள்ள கூடியதல்ல.

அனேகமாக பாரதநாடு பொதுவுடமைவாதிகளை இனி வருங்காலத்தில் ஆயுததாரிகளாகவே சந்திக்க நேரிடக் கூடும். அவர்கள் பங்களிப்பும், சீரழிப்பும் இந்த நாட்டில் எந்தளவு இருக்க போகிறது என்பதை வருங்காலத்தில் காணலாம். அவர்களுக்கான களம் வலுவாக பாரதமெங்கும் ஊன்றப் பட்டு வருகிறது. இந்த சவாலையும வழமைப் போலவே பாரத நாடு சந்தித்து கால வெள்ளத்தில் தன் பயணத்தை இனிதே தொடரும் என்று நம்புவோமாக.

Share

2 comments to இந்தியாவும் பொதுவுடைமை பரிசோதனையும்

 • Pandian

  பெரிய அரசியல் சக்தியாக அவர்கள் உருவெடுக்க வாய்ப்புகள் இல்லை – ஊகிக்க முடியாத மாற்றம் ஏதும் வராதவரையில். ஆயுத தாரிகளாகலாம். இந்தியாவில் இருந்து கொண்டு அந்நிய சக்திகளின் ஆதரவுடன் ஆயுததாரிகளாகளாம்.

  பொதுவுடைமை காங்கிரஸ் பாஜ என்ற எந்த ஒரு தேசீயக் கட்சியும் பதறும் வண்ணம் பிராந்திய கட்சிகளின் வளர்ச்சியே தற்பொழுது நடைபெற்று வருகிறது. பொதுவுடைமை சக்திகள் மக்களை விட்டு தற்பொழுது தள்ளிச் செல்கின்றன

 • Rajasankar

  பொதுவுடமையை அவிங்க மூட்டை கட்டி வருசம் 20 ஆச்சு. :-)) வன்முறை மூலமாகவே அதிகாரத்தை கையில் வைத்திருந்தார்கள். தமிழ்நாட்டில் பணத்திற்கும் அங்கு வன்முறைக்கும் ஆப்பு அடித்த தேர்தல் ஆணையத்திற்கு தான் நன்றி சொல்லவேண்டும்.

  ராஜசங்கர்

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>