புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

செந்தாமரைகளே மலருங்கள்..!!

சூன் ஒன்றாம் தேதி தமிழகத்தில் பருவமழை துவங்கும் என்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.இது நாள் வரை மண்டையை பிளக்கும் கோடை வெம்மையுடன் துணை உபத்திரமாக மின்வெட்டு ‍வேறு. நேற்று (1ம் தேதி) மாலை வரை ஓரளவு பிரகாசமாக இருந்த வானம் பின் மெல்ல மப்பும் மந்தாராமான சூழலுக்கு மாறியது.இரவு படுக்கும் போது லேசாக தூறல். பின்னிரவில் நல்ல மழை. பாதி தூக்கத்திலிருந்து எழுந்து அதிசயமாக ஓடிக் கொண்டிருந்த மின்விசிறியினை நிறுத்தி விட்டு சற்று கனமான போர்வையை தேட வேண்டியதாயிற்று.

செந்தாமரைகள்

செந்தாமரைகள்

நொய்யல் நதியில் நீரோடியதை இளம் வயதில் பார்த்தது உண்டு.  இன்றைய சிறுவர்கள் அப்படியொரு  விசயமாக ஆறு நிறைய தண்ணீர் ஓடும் என்பதையே நம்ப மறுக்கிறார்கள். அந்த அளவுக்கு சூழலையும், மனோபாவத்தையும் கெடுத்தாச்சு.

இன்றைக்கு இயற்க்கை தன் பங்களிப்பாக பாலக்காட்டு கணவாய் வழியாக சாறல் போன்ற மழைத் துளிகளை அனுப்ப துவங்கி விட்டது. மழை வரும் ஆனால் உங்கள் உடை நனையாது என்ற ரீதியில் வரும். இந்த மழை துளிகளுக்காகவே காந்திருந்தது போல அருமை  குழந்தைகள் சாரி சாரியாக பள்ளிக்கு அணிவகுக்க துவங்குவார்கள். அன்னையின் இடையில் சிலரும், அப்பாவின் வாகனத்தில் பலரும், கும்பலாகவும், கூட்டத்திலிருந்து உதிர்ந்தும் சிலர் தனித்து வருவார்கள்.

இந்த சாறலில் அம்மையின் சேலை தலைப்பில் ஒளித்தும், அப்பாவின் தலைப் பாகை(தொப்பி) என்று சகலவித பாதுகாப்பு உபகரணங்களால் பொத்தி பாதுகாக்க பட்டு கொண்டு வந்து விடப் படுவார்கள். தாமரை மலர்களுக்கு தண்ணீரால் என்ன சளியா பிடிச்சுடும் என்பதாக பள்ளி முடியும் வரை குழந்தைகள் வாய் நிறைய சிரிப்புடன், மனம் நிறைய உற்சாகத்துடன் பருவ மழையில் நனைந்தவாறே விளையாடும். அசுத்தமான திண்பண்டங்களை மொய்க்கும் ஈக்களை விட அதிகமாக அதை விற்க்கும் கடைகளை மொய்த்தும், உண்டும் மகிழ்வார்கள்.

இதோ சாறலும், தூறலுமாக இயற்கை தன் கொடையை அளிக்க துவங்கி விட்டது. மனிதயத்தனத்தால் அதை அனுபவித்து மகிழ செந்தாமரைகளையொத்த சிறுவர், சிறுமியரை காணவில்லை. ‍செந்தாமரைகளே சீக்கிரம் மலருங்கள்… உங்களுக்காக பள்ளி திடலும், இயற்கையின் சாறலும் வீணே காத்துக் கிடக்கின்றன.

பள்ளி குறித்த திரு.ஜெயமோகன் அவர்களின் ஒரு கட்டுரை ..

தேர்வு

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>