என்னுடைய தின வர்த்தகத்தினை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீண்ட காலமாக இருந்து வந்தது. அதனை பொதவிலும்
போட்டு வைத்தால் யாருக்கேனும் ஏதேனும் பயனுற கூடும் என்ற எண்ணத்தில் என் வலைபதிவிலும், முகநூலிலும் பகிர்ந்து கொள்ள
முனைகிறேன். கடந்த வெள்ளியில்(14-02-2020) இருந்து கணக்கினை துவங்குகிறேன்.
அட்டவணை மற்றும் வரைபடம் இரண்டிலும் காட்டபட்டுள்ள மதிப்புகள் அனைத்தும் சதவீதங்கள் ஆகும். என்னுடைய முதலீட்டுக்கான
லாப நட்ட சதவீதங்கள்.. குறிப்பாக தரகு மற்றும் வரிகள் போன்றவை கழிக்க பட்ட பின்னர் என் வரவுசெலவு (ledger) கணக்கில் வரக்கூடிய
மதிப்பினை கொண்டு கணக்கிட பட்டுள்ளது.
அட்டவணையில் பச்சை நிற பிண்ணனி லாபம், சிவப்பு நட்டம், மஞ்சள் வணிகமில்லா நிலவரத்தையும் சுட்டி காட்டுகின்றன.
///மஞ்சள் வணிகமில்லா நிலவரத்தையும் சுட்டி காட்டுகின்றன. ///
எனக்கு உங்கள் பதிவில் புரியாதது என்ன என்றால் – டெலிவரி எடுக்கிறீர்களா. அல்லது அன்றே வாங்கி அன்றே விற்று அதன் இலாப நட்டத்தைப் போடுகிறீர்களா?
அன்றன்றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என காலை 9:15 முதல் மாலை 3:30 க்குள் கணக்கு வழக்கினை முடித்து கொண்டு விடுவதே இந்த லாபநட்ட அறிக்கையின் அடிப்படை.