இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடிவடைந்துள்ளது. செவ்வாய் கிழமை ஹோலி பண்டிகையினை முன்னிட்டு சந்தை விடுப்பு. திங்கள் +0.85% என்றளவில் லாபமும், புதன் அன்று .-5.50% என நட்டமும், வியாழனன்று -+3.84% லாபமும், வெள்ளியன்று-0.44% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 8.33% – 1.25% = 7.08% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.
கடைசிய வர்த்தக நாளான இன்று நிப்டி 10% சதம் சரிந்து உறைநிலைக்கு சென்றது. 45நிமிடகள் ஆசுவாச நேரம் அளிக்க பட்டு
மீண்டும் சந்தை வர்த்தகத்தை துவங்கியது. அனைவராலும் மீண்டும் சரிய கூடும் என்று எதிர்பார்க்க பட்ட சந்தையானது நேரெதிராக
ஆதரவு பெற்று மேலே உயர தொடங்கியது. தொடர்ந்து இடைவிடாது உயர்ந்து 10% சரிவினை சரிகட்டி கூடுதலாகவும் மேலே சென்று
+4.52% முடிவடைந்தது. இன்றைக்கு பயத்தால் பேனிக் விற்பனை மற்றும் ஷார்ட் செல்லிங் செய்தவர்கள் நிலை பரிதாபமே.
படித்ததில் பிடித்தது….
In business:
You need capital.
You got expenses to cover.
You don’t expect to succeed from day one.
You need some time before you make a profit.
Trading is a business — so treat it as one.
எந்தவொரு தொழிலும் தொடங்கி நட்டம் தவிர்த்து லாபம் பெற சிறிது காலம் பெறும். ஆனால் பங்கு முதலீட்டில் மட்டும் துவங்கிய முதல் நாள் முதலே லாபம் வரவேண்டும் என்றும்.. அதுவும் பேரளவு லாபம் வந்து எளிதில் பெரும் செல்வந்தராக வேண்டும் என்று நம் மக்கள் எண்ணுகிறார்கள்.
Leave a Reply