இன்றைக்கு குழுமத்தில் நண்பர் செல்வன் அவர்கள் பின்வரும் கட்டுரையை அனுப்பியிருந்தார். அதற்க்கு நானும் என் கருத்தை தெரிவித்து இருந்தேன். அவைகள்..
மனித நாகரிகத்தை உருவாக்கியது ஆன்மிகமே
இதுநாள்வரை கிமு 9600 போது பனியுகம் முடிவடைந்தது எனவும் அப்போது நிறைய மிருகங்களும், தானியங்களும் கிடைத்ததால் மனிதன் மிருகங்களை வளர்க்க துவங்கி ஒரு இடத்தில் தங்க துவங்கினான் எனவும், அப்போது தற்செயலாக தானியத்தை பயிர் செய்வதை கண்டுபிடித்து விவசாய யுகம் துவங்கியது எனவும், விவசாயம் செய்து வேட்டையாட போகாமல் இருந்ததால் நிறைய நேரம் மிச்சமானது எனவும் அப்போதுதான் ஆன்மிகம், மதம் எல்லாவற்றையும் ரூம்போட்டு யோசித்து கண்டுபிடித்தான் மனிதன் எனவும் நம்பிகொண்டிருந்தோம்.
சமீபத்தில் ஆர்க்கியாலஜிஸ்டுகள் கண்டுபிடித்த ஒரு விஷயம் இந்த வரலாற்றை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
துருக்கியில் கோப்கெலி டெபே எனும் இடத்தில் உலகின் மிக தொன்மையான கோயிலை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இது சாதா கோயில் இல்லை, மிக விஸ்தாரணமாக கட்டபட்டுள்ளது.லேயர் லேயராக இதை அகழ்ந்தெடுத்த ஆய்வாளர்கள் பல ஆயிரம் வருடங்கள் இது தொடர்ந்து கட்டபட்டிருக்க வேண்டும் என்கின்றனர்.இதை கட்ட துவங்கிய வருடம் கிமு 9,600 எனவும் இதில் கடைசியாக கிடைத்த கட்டிடம் கிமு 7000 வருடம் கட்டபட்டது எனவும் கூறுகின்றனர்.
கிமு 9600 ஆண்டளவில் மனிதன் கற்காலத்தில் இருந்தான்.சக்கரம், இரும்பு, செம்பு என எந்த உலோகமும் கண்டுபிடிக்கபடவில்லை. விவசாயம் உருவாகவில்லை. மிருகங்களை மனிதன் வளர்க்க துவங்கவில்லை. அன்று சில லட்சம் மனிதர்களே பூமியில் இருந்தனர்.
இந்த காலகட்டத்தில் கடவுள் வழிபாடும் அதற்கு இத்தனை விஸ்தீரணமான கோயிலும் உருவாக்கபட்டது ஆய்வாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தி உள்ளது.இந்த கோயிலை அந்த காலத்தில் இருந்த டெக்னாலஜியை வைத்து உருவாக்குவது இன்று ஒரு போயிங் 747 விமானத்தை காயலான் கடை சாமானங்களை வைத்து நம் வீட்டில் உருவாக்குவதுக்கு சமமாம்.
அந்த காலத்தில் இருந்த மனிதர்களில் பெரும்பாலானவர்கள் இந்த கோயில் உருவாக்குவதில் பங்கெடுத்திருக்க வேண்டும் என கருதும் ஆய்வாளர்கள் இப்படி ஒரு கோயில் கட்டபட்டதால் அதை சுற்றி குடியிருப்புகள் உருவாகியிருக்க வேண்டும் என்றும், இதுதான் நாடோடிகளாக திரிந்த மனிதர்கள் முதல் முதலில் ஒரே இடத்தில் குடியேற காரணம் எனவும் இப்படி குடியேறியவர்களுக்கு உணவளிக்க விவசாயம் துவங்கபட்டிருக்க வேண்டும் எனவும் மிருகங்களை மனிதன் வளர்க்க துவங்கியிருக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்
ஆக விவசாயமே மதத்தை உருவாக்கியது என்பதை விட ஆன்மிகமே விவசாயத்தையும் மனித நாகரிகத்தையும் உருவாக்கியது என கூறுகின்றனர்
பிரமிக்க வைக்கும் உலகின் முதல் கோயில்.உலகின் அனைத்து மதங்களுக்கும் தாய்மதம் இதுவே.மனித நாகரிகம் பிறந்த தொட்டிலும் இதுவே (முழு புகைப்பட காலரியையும் பார்க்க நேஷனல் ஜியாக்ராபிக் தளத்துக்கு செல்லவும்)
http://ngm.nationalgeographic.com/2011/06/gobekli-tepe/musi-photography
எனது கருத்து…
வீடு, விவசாயம், கால்நடை என்ற எந்த அறிவும் இல்லாத மனிதனுக்கு இம்மாம் பெரிய கோவில் கட்டும் என்ற யோசனையும், அறிவும் எப்படி வந்திருக்க இயலும்.வேண்டுமானால் …
கிமு 9600 ஆண்டளவில் மனிதன் கற்காலத்தில் இருந்தான்.சக்கரம், இரும்பு, செம்பு என எந்த உலோகமும் கண்டுபிடிக்கபடவில்லை. விவசாயம் உருவாகவில்லை. மிருகங்களை மனிதன் வளர்க்க துவங்கவில்லை. அன்று சில லட்சம் மனிதர்களே பூமியில் இருந்தனர்.
மேற்க்கண்ட நவீன நம் கண்டுபிடிப்பை வேண்டுமானால் தவறு என்று சொல்லிக்கலாம். கிமு 9601 ம் வருடத்திலேயே மனிதன் வீட்டையும், விவசாயத்தையும், கால்நடை செல்வத்தை கண்டடைந்து இருந்தான் என்று சொல்லிக்கலாம்.
நேசனல் ஜியோகிரபி தளத்தில் உள்ள ஒளிபடங்கள் நன்றாக உள்ளது. பதிவுரிமை, காப்புரிமை காரணமாக இங்கு ஒளிபடங்களை மீள்பதிவு செய்யவில்லை.
Leave a Reply