இந்த வாரம் ஒட்டு மொத்தமாக நட்டத்திலேயே எனது வர்த்தகம் முடுவடைந்துள்ளது. திங்கள் -3.62% என்றளவில் நட்டமும், செவ்வாய் அன்று +3.42% லாபமும்,புதன் அன்று .-1.17% என நட்டமும், வியாழனன்று -+3.32% லாபமும், வெள்ளியன்று -4.20% நட்டமும் என கலந்து கட்டி ஒட்டு மொத்தமாக நட்டத்தில் வந்து முடிவடைந்துள்ளது.
ஒட்டு மொத்தமாக 7.08% – 2.33% = 4.75% என்பதாக வளர்ச்சி நிலை வரைபடம் அமைந்துள்ளது.
வெள்ளிகிழமை மதியம் வரையிலும் ஓரளவு லாபகரமான சூழலில் இருந்து வந்த எனது வர்த்தக நிலவரம் கடைசி இரு வணிகத்தில் ஏற்பட்ட நட்டத்தினால் ஒட்டு மொத்தமாக வாராந்திர லாபத்தையும் விழுங்கி விட்டு, மேற்கொண்டும் நட்டத்தை ஏற்படுத்தி விட்டது, நான் பெரும்பாலும்/எப்போதும் பின்பற்றும் எனக்கு பிடித்த, நடை முறையில் உண்மையானதுமான பின்வரும் வாசகத்தை இன்று கடைசி கட்டத்தில் தவற விட்டு விட்டேன். பெரும்பாலான சமயங்களில் எனது அடிப்படை நோக்கமே பெரும் நட்டத்தை தவிர்க்க தேவையானதை செய்வதே. அதை சிறப்புற செய்ய தான் நமது திறமை தேவை. மற்றபடி லாபத்தை தருவதா வேண்டாமா என்பதை சந்தையே
தீர்மானிக்கும். லாபத்தை தரக்கூடிய விசயத்தில் நம்மால் எதுவுமே செய்ய இயலாது. ஆகையினால் நட்டத்தை குறைப்பதே நமது திறமையாக கொண்டு வளர்த்து கொள்ள வேண்டியுள்ளது.
படித்ததில் பிடித்தது….
There are 5 possible outcomes for your trade:
- Breakeven
- Small win
- Small loss
- Big win
- Big loss
Eliminate #5 and you’ve just taken a big step forward.
Leave a Reply