இந்திய – சீனா போர் வருமா என நண்பர்களுடன் பேசும் போது நான் இரு பெரும் காரணங்களால் போர் வரக்கூடிய சாத்தியம் அதிகம் என்றேன்..
1. சீனா தனது பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களை மடைமாற்ற சின்ன அளவிலான போர் நடத்த முனைகிறது.. அது போர் என்றளவில் கூட இல்லாது – 4அடி ஆக்ரமிப்பு.. வெற்றி.. வெற்றி.. கூப்பாடு போட கூடியதாக இருந்தாலும் சரியே..
சீன தலைமை கவனிக்க தவறிய ஒரு உலகறிந்த விசயம்.. இந்தியாவிற்கு அதே பொருளாதார வீழ்ச்சி பிரச்சினை பெரியளவில் உள்ளது.. ஏற்கனவே இந்திய பொருளாதார அமைச்சர் “Act of God” என்று GST வரி வசூல் பிரச்சினையில் பேசியுள்ளார்.. அந்தளவு பற்றாகுறை.. அதிலிருந்து மக்களை திசைதிருப்ப மோடியும் போர் வாய்ப்பினை நழுவ விட மாட்டார் என்பதே.. பெரிய போரா.. வெற்றியா. தோல்வியா என்பதெல்லாம் யாராலும் நிர்ணயிக்க இயலாது.
தோற்று விட்டால் ஆனானப்பட்ட நேருவே தோற்றார்.. இப்போது கொரோானாவினால் பாதிக்க பட்ட சூழல் அது. இது என கூறி நகர்ந்து விடுவார்…என்ன மன்மோகன் போன்றவர்கள் ஆட்சியிருந்தால் போர் இன்றி சில இடங்களை இழந்திருப்பார்கள்.. இவர் போரிட்டு இழப்பார்..
தவறி போய் உலக நாடுகள் உதவியுடன் சொல்ல தக்க வெற்றி வந்து விட்டால் இந்திய வரலாற்றில் மிக பெரிய வரலாற்று நாயகன்… எனவே போர் என்பதை சீனாவாக கை விட்டால் தான் ஆச்சு…
2. இரண்டாம் காரணம் கோவிட்-19 க்கு மருந்து அல்லது சீனாவுடனான போர் இந்த இரண்டில் ஒன்று கையில் இல்லாமல் ட்ரம்பு தேர்தலை சந்திக்க விரும்ப மாட்டார்.. மருநது வந்து சேர்வது காலத்தின் கையில் உள்ளது.. ஆனால் சீனா போர் என்பது அவருக்கும், அமெரிக்காவில் உள்ள ஆயுத வியாபாரா லாபிக்கும் மிகவும் விருப்பமான ஒன்று. எவ்வாறேனும் மோடியினை போர் நோக்கி செல்ல தேவையான அனைத்து உதவிகளும் செய்து போரை தூண்டி விடுவார்கள்.
போர் என்பதை எந்த வகையிலும் நான் விரும்பவில்லை.. ஆனாலும் சூழ்நிலை மற்றும் அரசியல் காரணங்களால் இவ்வாறு நடக்கலாம் என்று யூகிக்க வேண்டியுள்ளது.
கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி.
நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம்.
சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம்.
சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை வெளியிடவே இல்லை.
சீனா என்கிற வார்த்தையைச் சொல்லக்கூட இந்தியத் தலைமைக்கு தைரியம் இல்லை.
சீனாவை எதிர்கொள்ளத்தான் தைரியம் இல்லை. உண்மை நிலையைச் சொல்லக்கூடவா தைரியம் இல்லை?