புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே

ஒரு கோவணத்துடன் சிவனே என்று வசித்து வந்த சாமியார் ஒருவர் ஒரே ஒரு மாற்று கோவணத்திற்க்கு ஆசை பட போய் அதை எலியிடமிருந்து காக்க பூனை வளர்த்து, அதற்க்கு பசும் பால் தேவை‍‍ யேற்பட அதன் பொருட்டு மாட்டை நிர்வகிக்க வேண்டி ஒரு பெண்ணை மணம் புரிந்து இல்லறவாசியானதாக பழங்கதை உண்டு.

துறவறம் என்பது இப்படியானதாக இருக்க வேண்டும் என்பதா நமக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால் நடைமு‍றையில் துறவிகளிடம் அளவற்ற செல்வங்கள் குவிகின்றன. பக்தர்கள் கொடுப்பது என்று சொன்னாலும் அதனை வரும்படியாக கருதி விரும்பி வரவேற்கிறார்கள் என்பதே நிதர்சனம்.

கடந்த தினங்களில் வெளியான செய்தி ஒன்று…

தனி அறையில் சுமார் 12 கோடி ரூபாய் ரொக்கம், 98 கிலோ தங்கம், 317 கிலோ வெள்ளி இருந்தன.

… என்றுக் கூறுகிறது. 98 கிலோ தங்கம் என்பது 12250 பவுன் என்றாகிறது. தனியே வைத்துக் கொண்டு என்னதான் செய்திருப்பாரோ..?

பொதுவாக வர்த்தகர்களும், செல்வந்தர்களும் பொருளாசையில் வாழ்நாள் எல்லாம் பொருள் குவித்து வருவார்கள். முன் காலத்தில் இதற்க்கு இணையாக அரசர்களை கூறலாம். கல்கி பொன்னியின் செல்வனில் செல்வ குவியல் குறித்து இப்படி வர்ணிக்கிறார்….

ஒரு மூலையில் மணி மகுடங்கள்; முத்தும் மணியும் வைரமும் பதித்த மகுடங்கள்; இன்னொரு பக்கத்தில் ஹாரங்கள்; முத்து வடங்கள்; நவரத்தின மாலைகள், அதோ அந்த வாயகன்ற அண்டாவில் என்ன? கடவுளே! அவ்வளவும் புன்னை மொட்டுக்களைப் போன்ற வெண் முத்துக்கள்! குண்டு குண்டான கெட்டி முத்துக்கள்! அதோ அந்தப் பானையில் பளபளவென்று மஞ்சள் வெயில் வீசும் பொற்காசுகள். இதோ இங்கே குவிந்து கிடப்பவை தங்கக் கட்டிகள். தஞ்சை அரண்மனையின் நிலவறைப் பொக்கிஷம் இதுதான் போலும்! தனாதிகாரி பழுவேட்டரையரின் மாளிகையையொட்டி இந்த இருள் மாளிகையும் அதில் இந்தப் பொக்கிஷ நிலவறையும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? அம்மம்மா! இந்த நிலவறைக்குள் நாம் வந்து சேர்ந்தோமே? பாக்கிய லட்சுமியும் அதிர்ஷ்ட தேவதையும் சேர்ந்தல்லவா நம்மை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்? எப்படிப்பட்ட அதிசயமான, அபூர்வமான இரகசியத்தை, நம்முடைய முயற்சி ஒன்றும் இல்லாமலே நாம் தெரிந்து கொண்டோம்! இதை எப்படிப் பயன்படுத்துவது? பயன்படுத்துவது அப்புறம் இருக்கட்டும்; இங்கிருந்து போவதற்கே மனம் வராது போலிருக்கிறதே! இங்கேயே சுற்றிச் சுழன்று கொண்டிருக்கலாம் போலத் தோன்றுகிறதே! இங்கேயே இருந்தால் பசி, தாகம் தெரியாது! உறக்கம் அருகிலும் அணுகாது! நூறு வருஷ காலமாகச் சோழ நாட்டு வீர சைன்யங்கள் அடைந்த வெற்றிகளின் பலன்கள் எல்லாம் இங்கே இருக்கின்றன. நவநிதி என்று சொல்வார்களே; அவ்வளவும் இங்கே இருக்கிறது! குபேரனுடைய பொக்கிஷத்தையும் தோற்கடிக்கும் செல்வக் களஞ்சியம் இங்கே இருக்கிறது இதை விட்டு எதற்காகப் போக வேண்டும்!

வந்தியத்தேவன் அந்த நிலவறையைச் சுற்றிச் சுற்றி வந்தான். ஒரு மூலையில் கிடந்த மணிமகுடங்களைத் தொட்டுப் பார்த்தான். இன்னொரு பக்கத்தில் கிடந்த ரத்தின ஹாரங்களைக் கையில் எடுத்துப் பார்த்தான்.அவற்றைப் போட்டுவிட்டு இன்னொரு பக்கம் சென்று செப்புப் பானையில் நிறைந்திருந்த முத்துக்களில் கைகளை விட்டு அளைந்தான். வேறொரு பானையில் கையை விட்டுப் பொற்காசுகளை அள்ளிச் சொரிந்தான். ஒரு மூலையில் தரையில் பளபளவென்று ஏதோ பரவலாக ஜொலிப்பதைக் கண்டு அங்கே சென்றான். முதலில் என்னவென்று தெரியவில்லை பிறகு, குனிந்து உற்றுப் பார்த்தான். ஐயோ! ஆண்டவனே! அது ஓர் எலும்புக்கூடு! ஒரு காலத்தில் சதையும் இரத்தமும் தோலும் உரோமமும் மூக்கும் முகமும் கண்ணும் காதுமாக இருந்த மனித உடலின் எலும்புக்கூடு!

ஆ! இந்த எலும்புக்கூடு அசைகிறதே! உயிர்பெற்று எழுகிறதே! பொற்காசுகளைப் போலவே சத்தமிடுகிறதே! நமக்கு ஏதோ சேதி சொல்ல எழுந்திருப்பதாய்க் காண்கிறதே!….. வல்லவரையனுடைய உடம்பிலிருந்து ஒவ்வொரு ரோமமும் குத்திட்டு நின்றது. தனக்குப் பைத்தியந்தான் பிடித்து விட்டது என்று நினைத்தான். சீச்சீ! எலும்புக்கூடு எழுந்திருக்கவில்லை! அதற்குள்ளேயிருந்து ஒரு பெருச்சாளி ஓடி வருகிறது! நம் கால் மீது விழுந்து ஓடுகிறது!… ஆம்; இப்போது பார்த்தால் எலும்புக்கூடு தரையிலேதான் விழுந்து கிடக்கிறது! ஆனால் அது நமக்கு ஒரு சேதி சொல்லுகிறது என்பது உண்மை. “ஓடிப் போ! இங்கே தாமதியாதே! நானும் உன்னைப் போல் உடல் படைத்த மனிதனாயிருந்தேன். இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டேன். இங்கேயே மாண்டு மடிந்தேன்! இப்போது எலும்புக்கூடாகக் கிடக்கிறேன்! ஓடிப் போ!” என்று அது நம்மை எச்சரிக்கிறது. இங்கிருந்து, உடனே தப்பிச் சென்றோமோ, பிழைத்தோம். இல்லாவிட்டால் அதோகதி தான்; அந்த மனிதனுக்கு ஏற்பட்ட கதிதான்.

மிக எளிமையாக அய்யன் வள்ளூவர் சொன்னது…

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

Share

2 comments to காதற்ற ஊசியும் வாராது காண்நும் கடைவழிக்கே

 • Pandian

  ஆமாம்ணே. எல்லாத்தையும் விட்டாச்சுன்னு நினைச்சா பாவம் எல்லாத்தையும் வைச்சுக் கட்டிக் காப்பாத்திட்டு இருந்திருக்காரு. இவரு மட்டுமா. உண்ணாவிரத சாமியும் இப்டித்தான் சொல்றாக. அதுமட்டுமில்ல இதுவரை எந்த வில்லங்கத்திலும் பெரிசா மாட்டாம இருக்கிற அம்புட்டு புரோபசனல் சாமிமார்கள் அனைவரிடமும் இல்லாத சொத்தா?

 • பாண்டியன், பெரும்பாலும் அனைத்து சாமியார்களும் அறக்கட்டளை துவக்கி அதில் கணக்கு காட்டி விடுகிறார்கள். வரிவிலக்கு என்பது அரசாங்கம் தரக்கூடிய ஒன்று. நாளையே அனைத்து அறக்கட்டளையும் அரசுடைமை அல்லது இவ்வளவு வரி என்பது சாத்தியம்.

  ஆனால் தனிமனிதராக ஒரு அறையில் பயோமெட்ரிக்ஸ் முறையிலான நவீன பாதுகாப்பு போட்டு எந்த கணக்கும் இல்லாது இவ்வளவு செல்வத்தை போட்டு குவித்து வைத்திருந்தது என்ன நியாயம்..?
  ஏற்கனவே உள்ள அறக்கட்டளையின் கணக்கில் இதனை சேர்த்து இருக்கலாமே…?

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>