குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 19 other subscribers

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

யுவான் Vs டாலர்

முதல் முதலா பாடும் பாட்டுன்னு கூகிள் பிளசுலே முதன் முதலா எழுதறது…

அமெரிக்க சந்தைகள் இன்று சரிவு. அமெரிக்கா சந்தை சரிவதும் நிமிர்வதும் அவர்களுக்கு தினமும் பல் துலக்குவது போல அரசியலில் சகஜமப்பா என்று போய் விடுவார்கள். புலியை பார்த்து பூனை சூடு போட்டுகிட்டதா சீனா இதை எப்படி சமாளிக்க போகுதுன்னு புரியலே.

எப்ப‍டியெல்லாம் சீனாவிற்க்கு அல்வா கொடுக்கலாம் என்று அமெரிக்க (பல்கலை கழக) ஆராய்ச்சியாளர்கள் மாளாத கட்டுரைகள் எழுதி அலசி ஆராய்ந்து முடித்திருப்பார்கள். டிராகன் ஆசாமிகள் என்ன செய்வார்கள் என்பது சற்றும் யூகிக்க முடியாததா இருக்கு.

இந்திய ரூவாயை சிவகாசியில் நோட்டு அடிப்பவர்கள் முதல் பக்கத்து நாட்டில் உள்ள டி கம்பெனிகாரங்க வரைக்கும் ஒரு கை பார்த்து இதுக்கு மேலேயும் மதிப்பை குறைக்க முடியாது என்று செய்தாச்சு. எனவே அமெரிக்கா டாலர் விழுந்தா கொஞ்சம் பெட்ரோல் விலை ஏறும். இல்லைன்னாலும் ஏறும் நம்ம நாட்டிலே. அவ்வளவு தான்.

ஆனா ரொம்ப சிரமபட்டு அடக்கி வைச்சு இருக்கிற சீனா தனது செலவாணியான யூவானை குறைவான மதிப்பில் இருந்து மதிப்பு உயர விட்டது எனில் ஏற்றுமதி ரொம்ப பாதிக்கும். கொடுத்த கடனை திருப்பி கேட்டால் டாலர் புயல் அடிக்கும். ஏற்றுமதியிலும் டாலர் வரும், கடன் வசூலிலும் டாலர் வரும். இப்ப வசூல் என்றாலும் வம்பு அமெரிக்கா டாலரா அடிச்சி தள்ளிடும், அதே சமயம் கடனை கேட்காது விட்டு அமெரிக்க பொருளாதாரம் விழுந்து விட்டாலும் இம்சை. இத்தனை டாலர் திடீரென வந்தால் செலாவணி சந்தையில் பெரிய பணக்கார நாடு ஆயிடும்.

அதனால் கம்மி கூலிக்கு வேலையாட்கள் வேலை செய்வதில் பிரச்சினை. அதனால் நமக்கு கம்மி விலையில் சாமான் கிடைக்காது. உதாரணமாக சீனா மொபைல் விலைக்கு கொஞ்சம் அதிக விலையில் இந்திய சர்வதேச தயாரிப்புகளான நோக்கியோ போன்றவை எல்லாம் கிடைக்கும்.

அது மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது சீனாவுடன் போட்டியிடும் அளவுக்கு நம்ம விலை சற்று பக்கமாவே இருக்கும். பொருள்களின் தரம், உதிரிபாகங்கள், விற்பனைக்கு பிந்தைய சேவை என்று இந்திய பொருள்களுக்கு ஏகப் பட்ட சிறப்பம்சங்கள் இருக்கு.

நிறைய எழுத நினைத்தாலும் நேரமில்லை. கட்டாயம் தொடரதான் உத்தேசம்.

Share

2 comments to யுவான் Vs டாலர்

  • பாண்டியன்

    பொருளாதாரம் ஒரு சூதாட்ட களமாகவே ஆகிவிட்ட நிலையில் என்னவோ அவ்வப்போது வருகிற காய்ச்சல் மாதிரி பொருளாதாரப் பிரச்சினைகள் வந்து அந்த நாட்டவர் செய்யும் நல்லது கெட்டதுகளுக்கு நாமும் உடந்தை ஆவது போன்று ஆகிவிடுகிறது. இதுதான் உலகமயமாக்கல் போல. இந்திய சீன சந்தை மாதிரி உலகில் வேறெங்கும் சந்தைகள் உண்டா.? ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளில்?

  • சந்தை என்று சொல்லும் அளவுக்கு வேறு நாடுகள் கிடையாது.
    ஆனால் முன்னேறி வரக்கூடிய நாடுகள் BRIC என்று கூட்டமைத்துள்ளார்கள்.
    BRIC – wikipedia இந்த நாடுகள் முற்காலத்தில் பிரான்சு, ஜெர்மன் போன்ற நாடுகள் இருந்த புகழையும், தகுதியையும் பெறக்கூடும். இவற்றில் ஏதேனும் ஒன்று மிகவும் முன்னேறி போட்டியில் வென்று பிரிட்டன், அமெரிக்கா என்ற வரிசையை துவக்கும் விதமாக உலக வல்லரசு ஆகலாம்.

Leave a Reply