புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

டெல்லி முற்றுகை

அமெரிக்காவில் நடைபெறும் முற்றுகை போராட்டத்தை போல இங்கும் வர போவது நிச்சயம். எனவே விரைவில் நடைபெற உள்ள டெல்லி முற்றுக‍ை போராட்டத்திற்க்கு தேவையான வேண்டுகோள் பட்டியல்…

1. சம்பள உயர்வு: தடையற்ற வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டு வந்து உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு 20 டாலர் என்ற வீதத்தில் சம்பளத்தை உயர்த்த வேண்டும்.

வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்க்கு ரூ.200 வீதம் அதிகரிக்க வேண்டும். வேலையே இல்லாதவர்கள் அலுவலகங்களின் மூலாதாரங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் மணிக்கு ரூ.500 வீதம் வழங்க வேண்டும்.

2. தனியார் நிறுவனங்களுக்குத் தடை: நாடு முழுவதுமான ஒரே ஒரு அரசு காப்பீட்டு நிறுவனம் மட்டுமே நிறுவப்பட வேண்டும். தனியார் நிறுவனங்கள் இதில் அடிக்கும் கொள்ளையை வால் தெருவில் உள்ள பங்குச் சந்தையில் பதுக்குவதால், அவற்றுக்கு காப்பீட்டுத் திட்டத்துக்குள் நுழையத் தடை விதிக்க வேண்டும்.

இந்தியாவில் lic தான் பெரிய நிறுவனம். எனவே அனைத்து வித காப்பீட்டு நிறுவனங்களையும் மூடி விட்டு யார் இறந்தாலும், விபத்து போன்ற இழப்பு ஏற்பட்டாலும் அரசே நட்ட ஈடு வழங்க வேண்டும். மக்கள் காப்புறுதி கட்ட தேவையில்லை.

3. நிரந்தர ஊக்கத் தொகை: வேலைவாய்ப்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும், குறைந்த பட்ச ஊக்கத் தொகைக்கு உறுதியளிக்க வேண்டும்.

இந்திய குடிமகனாக குழந்தை பிறந்தது முதலே இறப்பு வரை இந்தியாவில் வாழ தேவையான ஊக்கத் தொகை வழங்க வேண்டும். 5 வயது வரை பால் பவுடர் போன்றவைகள் வடிவிலும், 6முதல் 10 வரை குச்சி மிட்டாய், கம்மர்கட், தேன் மிட்டாய் போன்ற பாரம்பரிய தின்பண்டங்களை போதிக்கும் வகையில் ஊக்க தொகை வழங்க பட வேண்டும்.

4. இலவசக் கல்வி: கல்லூரிக் கல்வி கட்டணங்களை அறவே நீக்க வேண்டும்.

ஏற்கனவே இலவச கல்விக்கு நிகரான கல்வி முறை இருப்பதால் அதனை முற்றிலும் நீக்கி விட்டு ஒவ்வொரு குழந்தையும் 18 வயது நிரம்பி குடிமகனா வாக்களிக்க தகுதி பெறும் போது அவர்களே தேவையான பட்டத்தை தெரிவு செய்து பெற்று கொள்ள வசதி செய்ய வேண்டும். படிக்க சொல்லி வற்புறுத்தும் காட்டுமிராண்டி தனம் ஒழிய வேண்டும்.

5. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி: நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களைக் கைவிட்டு, மாற்று வழியில் எரிசக்தி உற்பத்திக்கான நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட வேண்டும்.

பெரியவர்கள் எனில் மாட்டு வண்டி, குதிரை வண்டி, பல்லக்கு போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். பதின்ம வயதினர் எனில் பஞ்சாரகி போய் உள்ள மதிவண்டி, ஆட்டோ, கார் போன்ற வாகனங்களின் டயர்களை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். டயரினை சிறுவர்கள் தட்டி உருட்டி செல்ல ‍தேவைபடும் குச்சியையும் அரசே வழங்க வேண்டும்.

6. உடனடிச் செலவு: குடிநீர், சாலைகள், கழிவுநீர்ப் போக்குவரத்து, ரயில், பாலங்கள், மின்கட்டமைப்பு ஆகியவற்றுக்காக உடனடியாக ஒரு டிரில்லியன் டொலர் செலவழிக்க வேண்டும்.


ஒரு கோடியே கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். இந்த பணத்தை இந்தியர்கள் தலையை எண்ணி சரியாக பிரித்து அளிக்க பட வேண்டும். இதில் ஊழல் நடைபெறாமல் இருக்க ஆதார் முறையில் வைவிரல் ரேகை முறையை பின்பற்றலாம்.

7. வனப் பாதுகாப்பு: அமெரிக்காவின் அனைத்து அணு உலைகளையும் மூடுதல், காடுகள் மற்றும் சதுப்பு நிலங்களை உருவாக்குதல், ஆறுகளின் இயற்கையான போக்கை தடுக்காதிருத்தல் போன்றவற்றிற்காக மேலும் ஒரு டிரில்லியன் டொலர் செலவு செய்ய வேண்டும்.

ஒரு கோடியே கோடி ரூபாய் செலவு செய்து இந்தியாவில் அனைத்து அணு உலைகளையும் மூடி விட வேண்டும். வீடுகளில் ஏற்ற தேவையான மெழுகுவர்த்தி, அகல் விளக்கு, திரி, எண்ணெய் போன்றவைகளையும் அரசே முற்றிலும் இலவசமா தரவேண்டும்.

8. சம உரிமை: இனம் மற்றும் பாலியல் சம உரிமைகளுக்கான சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்.

ஆணும், பெண்ணும் சம‍மே என்ற நிலையை உடடினயாக கொண்டு வரவேண்டும்.

9. எல்லைச் சிக்கல்: நாட்டின் அனைத்து மாகாண எல்லைகளையும் திறந்து விட வேண்டும். இதன் மூலம் யாரும் எங்கு வேண்டுமானாலும் போய் வேலை செய்து வாழ வழி செய்தல்.

இந்தியா பிற நாடுகளுடனான எல்லை பிரச்சினையை இனிதே முடிவுக்கு கொண்டு வர அனைத்து எல்லைகளையும் திறந்து விட்டு விட வேண்டும். இதன் மூலம் பிற நாடுகளுடனான போர் என்ற அச்சம் நீங்கும். குறிப்பாக எல்லை தாண்டிய தீவிரவாதம் முற்றிலும் விலகும்.

10. வாக்குச் சீட்டு: அமெரிக்கத் தேர்தல்களில் சர்வதேச நடைமுறைப்படி, வாக்குச் சீட்டைக் கொண்டு வர வேண்டும். சுயேச்சை மற்றும் கட்சி கண்காணிப்பாளர்கள் மத்தியில் வாக்குச் சீட்டுகள் எண்ணப்பட வேண்டும்.

இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு இயந்திரங்களை ஒழித்து விட்டு மீண்டும் பாரம்பரியமான வாக்கு சீட்டு முறைய‍ை கொண்டு வர‍வேண்டும். வாக்கு பதிவில் குண்டர்களும், வாக்கு சாவடியை கைப்பற்றுபவர்களும் பங்கேற்க ஏதுவாக இவ்வசதியினை செய்து தரவேண்டும்.

11. கடன் தள்ளுபடி: வர்த்தகம், கல்வி, வீட்டு அடமானம் உள்ளிட்ட அனைத்துக் கடன்களையும் உடனடியாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதேபோல், உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் வழங்கிய கடன், வங்கிகள் வங்கிகளுக்கு வழங்கிய கடன், அனைத்து கடன் பத்திரங்கள் மீதான கடன் என அனைத்தையும் உலகளவில் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இந்தியா முதலில் தான் பிற நாடுகளிடம் வாங்கியுள்ள கடனை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். பிறகு நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும் உள்ள கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். கடன் வாங்காத சில ஏமாற்று பேர்வழிகளை தண்டிக்க அவர்களுக்கு அவரவர் பொருளாதார நிலைமைக்கு தக்கவாறு இலசமாக பணத்தை அளித்து அவர்களையும் கடன்பட்ட நெஞ்சினை உடையவர்களாக்கிட வேண்டும்.

12. விலக்கம்: அனைத்து கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கும் சட்டப் பாதுகாப்பை விலக்க வேண்டும்.

இந்தியாவில் கடன் மதிப்பீட்டு குறியீட்டு நிறுவனங்களுக்கு மதிப்பு கிடையாது. எனவே அனைத்து வட்டி கடைகள் மற்றும் அடமான நிறுவனங்களில் உள்ள பொருள்கள் மீதான அடமானம் தள்ளூபடி செய்யபட வேண்டும்.

13. தொழிலாளர் அமைப்பு: தொழிலாளர் அமைப்புகளின் தலைமையைத் தேர்ந்தெடுப்பதில், அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

மிக முக்கியமான கோரிக்கை. ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் அமைப்பு தலைமையை தெரிவு செய்வதில் அனைத்து தொழிலாளர்களும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். அனைத்து தொழிலாளர்கள் என்பது உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்கள் என்று அர்த்தம். பாட்டாளியிடையே பிரிவினையை உண்டாக்க கூடாது.

இது ஒரு நகைச்சுவை நோக்கிலான கட்டுரையாகும்.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>