புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

முதலாளித்துவம் Vs சூதாட்டம்

குழுமத்தில் பொருளாதாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் எனது வாதத்தை இங்கே தொகுத்துள்ளேன். ஏனோ இங்கே போட்டு வைப்பது தேவை என்று படுகிறது.

இந்த இணைய வழிவணிகத்தில் அடிப்படை குழப்பம் உள்ளது. இருவேறு முறைகளை மக்கள் குழப்பி கொள்கிறார்கள்.

பங்கு சந்தை இணைய வழி வணிகத்தில் உள்ளது. ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்க, விற்க செய்யலாம். இது சுதந்திர பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பே. இதை ஏற்பதில்லை மாற்று கருத்து கிடையாது.

இதே பங்குசந்தையிலும், காமாடிட்டி சந்தையிலும் இணைய வழி வணிகத்தில் யூக வணிகம் என்று (Future & Option) ஒன்று உண்டு. இதற்க்கும் சுதந்திர பொருளாதாரத்திற்க்கும் என்ன சம்பந்தம் என்று புரியலே. இல்லாத ஒரு பொருள் பற்றி வெறுமே 10% (நாட்டுக்கு நாடு மாறலாம்) அளவு பந்தய பணம்(margin) கட்டினால் போதும் என்பது சூதாட்டத்தின் நாகரீக வடிவமே.

முதாலாளித்துவத்தின் முக்கிய பிரமுகரான வாரன் பப்பெட் கூட இந்த F&O முறையை ஆதரிப்பதில்லை.

1. எதிர்காலத்தில் வாங்க நீங்கள் முழு பணம் கொடுப்பதில்லை. 5% – 10% என்ற அளவில் (சந்தைக்கு சந்தை மாறலாம்) தான் கொடுக்கிறீர்கள். அதே சமயம் இன்றைக்கு நீங்கள் பொருளை வாங்கனும் என்றால் கையிலே காசு. வாயிலே தோசை. முழு பணம் தரணும் நீங்கள் கடன் வாங்கியாவது தந்தாகனும். முழு பணம் கேட்டால் போதும் இந்த யூக வணிகம் என்பது நின்று உண்மையான வணிகம் என்றாகிவிடும்.

2. உருளை கிழங்கு அதிகம் தின்று வாயு பிரிந்தால் கூட பிடித்து வைக்க வசதி இல்லாதவர்கள் தான் இன்றைக்கு இயற்கை வாயு (Natural Gas) க்கு 5% பணம் கட்டி வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்கிறார்கள்.

எனக்கு தெரிய இயற்கை வாயுவை வாங்க, விற்க, சேமிக்க எல்லாம் மத்திய அரசின் IOC, HP, ONGC போன்றவைகளும் தனியாரில் ரிலையன்சு போன்ற பெரிய நிறுவனங்களுக்கு தான் அனுமதியிருக்கும். நானும், நீங்களும் வாங்கவோ, விற்கவோ பணம் கட்டுவது சூதாட்ட நோக்கமே அன்றி டெலிவரி எடுத்து விற்க்கும் உண்மையான வியாபாரம் நோக்கம் தான் என்றால் நான் என்ன சொல்ல..?

முன்பேரத்தில் ஈடுபடும் இருமுதலாளிகள் எனில் லாபமோ, நட்டமோ தொழில் செய்யும் முதலாளிகள் ஏதேனும் விலைக்கு கையில் சரக்கு கொடுப்பார்கள். ஆனால் இந்த வருசம் பட்டு சீலை அதிக விலையா இன்ன விலைக்கு போகும் என்ன பந்தயம் வைச்சுக்கலாம் என்று பந்தயம் கட்டுபவர்களால் என்ன பிரயோசனம் இரு முதலாளிகளுக்கும்..?

இயற்கை வாயு வாங்க, விற்க்கும் நானும், நீங்களும்(உதாரணமா) வாங்கி வைத்து கொள்ளவும், சரக்கு டெலிவரி தரவும் தேவையான வசதியற்றவர்கள். ஊக வணிகத்திற்க்கும், உண்மையான வணிகத்திற்க்குமான வித்தியாசம் தெரியாதது தான் இங்கு பிரச்சினையே.

இன்னமும் எனது தரப்பை சற்று தொகுத்து தர முயலுகிறேன்.

முதலாளித்துவம் எனும் தத்துவம் தனி நபர் தொழில் முனைவோராக இருந்து மெல்ல மெல்ல கூட்டாளிகள் கொண்டதாக விரிந்தது. எண்ணற்ற கூட்டாளிகள் பங்கு பெற்ற நிறுவனங்களாக அமைந்ததால் அவரவர் பங்கை விற்க, வாங்க பங்கு சந்தை என்ற கருவியும் கண்டறியப் பட்டது.

இக்கருவியின் மூலம் நிறுவனங்களில் ஏற்படும் லாப, நட்ட நிலவரங்களுக்கு ஏற்ப பங்கின் விலை ஏற்ற, இறக்கம் சாத்திய படலாயிற்று. நல்ல முறையில் நிறுவனங்களை நடத்திய முதலாளிகள் (பங்காளிகள், பங்குதாரர்கள்) லாபம் பெற்றனர். சரிவர செயல்படாதவர்கள் நட்டம் பெற இந்த சுதந்திர சந்தை முறை அமைந்தது. தவிரவும் புதிய தொழில் துவங்கவும் தேவையான முதல் (மூலதனம்) திரட்டவும் இக்கருவியானது பயனுடையதாக அமைந்தது.

ஒரு கால கட்டத்திற்க்கு பின்னர் பங்குகள் எந்த விலைக்கு போகும் என்பதை முடிவு செய்ய முன்பேரஒப்பந்தம்(F&O) எனும் கருவி கண்டறிய பட்டது. உதாரணமாக கூகிள் நிறுவன பங்கானது அடுத்த மாதம் இன்ன விலைக்கு போகும் என்ற முன்பேர ஒப்பந்தம் மூலம் முதலாளித்து தத்துவம் எந்த பயனையும் அடைவதில்லை. காரணம் விலை அதிகமோ, இறக்கமோ அந்தந்த நிறுவன செயல்பாட்டினை பொறுத்தே அமைகிறது அல்லது பொருளின் உற்பத்தி/தேவை பொறுத்தே அமைய போகிறது.

முன்பேர ஒப்பந்தம் என்ற பந்தயத்தின் மூலம் முதலாளித்துவம் எண்ணற்ற இழப்புகளையே சந்தித்து வருகிறது. பங்கு சந்தையின் முதன்மை நோக்கமான பங்குகள் வாங்கி விற்பதில் நடைபெறும் மொத்த வரவுசெலவினை(turnover) விட முன்பேர ஒப்பந்தத்தில் பன்மடங்கு நடைபெறுகிறது.

இவ்வளவு அதிக மடங்கு நடந்து அதனால் சம்பந்தபட்ட நிறுவனங்களுக்கோ, அதன் பங்குதாரர்களுக்கோ நேரடியாக எந்த பயனும் இல்லை. பங்கு விலை அதிகரிப்போ, இறக்கமே அந்தந்த நிறுவன செயல்பாட்டினையே பொறுத்து அமைகிறது. பங்குகளின் விலைகளுக்கு வந்திருக்க வேண்டிய பொதுமக்களின் மூலதனமானது வெறுமே பந்தயம் கட்டும் திசையை நோக்கி திருப்பி விடப் படுகிறது.

 • முதலாளித்துவ தத்துவத்திற்க்கு ஏற்ப தேவையான மூலதனமாக இது மாறுவதில்லை.
 • சந்தையில் உற்பத்தி/தேவை என்பதற்க்கேற்ப விலைகள் அமையாது முன்பேர ஒப்பந்த சூதாடிகள் விலை நிர்ணயம் செய்கிறார்கள்.
 • மூலதனமாக மாற வேண்டிய பணமானது தவறான வழியில் சென்று அழிவதால் ஏற்படும் விளைவுகளுக்கும் முதலாளித்துவம் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

பொதுவுடைமைவாதிகள் எதிர்ப்பதால் மட்டும் இக்கருவி சரியானதாக அமைந்து விடாது. முதலாளித்துவம் தன்னை உற்பத்தி, உபரி, லாபம் என்பதன் மூலம் நிலைநிறுத்துவதை விட்டு விட்டு முன்பேர ஒப்பந்தம் என்ற சூதாட்டத்தின் மூலம் நிலைநிறுத்து முயல்வது தவறு.

திரு.செல்வன் விவாதத்தில் அளித்த பதில்…

ஆன் லைன் டிரேடிங், யூக பேரம் குறித்து:

ஆன்லைன் வணிகம் என்பது கணிணி மூலம் நடைபெறும் வர்த்தகம்.கணிணி என்பது இங்கே வெறும் கருவி மட்டுமே.டெலிபோன் மூலம் நடைபெறும் வணிகம் என்றால் அது வித்தியாசமாக தெரிவதில்லை.ஆனால் ஆன்லைன் வர்த்தகம் என்றதும் பீதி அடைகிறோம்.அப்படி பீதி அடையும் எந்த அவசியமும் ஆன்லைன் வணிகத்தில் இல்லை.

யூக பேரம்

ஸ்பெகுலேஷன், யூக வணிகம் என்பதற்கு சந்தை பொருளாதாரத்தில் இடம் உண்டு.டெக்னாலஜி வளர்ச்சி அடையாத நாடுகளில் இவற்றை மிஸ்யூஸ் செய்ய முடியும் என்பது உண்மை.ஆனால் நாள்போக்கில் இந்த அமைப்பில் இருக்கும் குறைகளை இதுபோன்ற கயவர்களே காட்டிகொடுத்து அமைப்பை மேலும் வலுவாக்குவார்கள்.உதாரணமாக 1992ல் தாராளமயமாக்கபட்ட இந்திய பங்கு சந்தையில் பழைய விதிகள் நிலவுவதை பயன்படுத்தி ஹர்ஷத் மேத்தா கோடிகளில் குளித்தார்.அதன்பின் கேத்தன் பரேக்.இந்த இரு ஸ்காண்டல்களுக்கு பிறகு அந்த சந்தைகளில் நிலவிய குறைகள் சரிசெய்யபட்டன.இன்று அதுபோன்ற ஸ்காண்டல்கள் மீண்டும் நிகழாவண்ணம் விதிகள் திருத்தபட்டு பங்குசந்தை ஸ்டெடி ஆனது.

9/11 என்பது அதேபோல அமெரிக்க விமனா நிலையங்களில் நிலவும் பாதுகாப்பின்மையை பயன்படுத்தி ஒசாமா நிகழ்த்திய தாக்குதல்.அதன்பின் பாதுகபபு பலப்பட,பலப்பட ஒசாமா அமெரிக்க விமான பாதுகாப்பில் இருக்கும் சின்ன சின்ன ஓட்டைகலையும் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினான்.ஏர்போர்ட் ஸ்கானர்கள் திரவ வெடிமருந்தை கண்டுபிடிக்காது என தெரிந்து பாட்டிலில் திரவ வெடிபொருளை நிரப்பி அனுப்பினான்.அண்டர்வேரில் குண்டை வைத்து தைத்து அனுப்பினான்.இப்படிப்பட்ட ஒவ்வொரு தககுதலும் அந்த அமைப்பில் இருந்த குறைபாட்டை வெட்ட வெளிச்சம் ஆக்கியது.அதன்பின் அந்த ஓட்டைகள் அடைக்கபட்டன.இன்று அமெரிக்காவில் விமான பயண பாதுகபபு மிகவும் பலப்பட ஒசாமாவே காரணம்.சர்வதேச கடத்தல்காரர்கள்,விமான ஹைஜககர்கள் ஆகியோர் ஒசாமாவை இந்நேரம் சபித்து கொண்டிருக்க கூடும்.

இந்தியா மாதிரி வளர்ச்சி அடையாத சந்தைகளில் இப்படி யூகபேரம்,ஆன்லைன் டிரேடிங் ஆகியவை வந்தால் இதேபோல ஆரம்பத்தில் பலதவறுகள் நிகழும்.பாதிப்புகள் நிகழும்.ஆனால் அதை எல்லாம் படிப்பினையாக ஏற்று அந்த அமைப்பு மேலும் வலுவாக்கபட்டு நாளடைவில் சிறந்த பயனை அளிக்கும் என்பது திண்ணம்.

யூகபேரம் அதேபோல வணிகத்துக்கு மிக நல்லது.இந்த முறை சந்தையில் பணவரவை அதிகரிக்கிறது.யூகத்தில் பொருளை வாங்கு குவிப்பவர்கள் சந்தைக்கு லிக்விடிட்டியை கொண்டு வருகின்றனர்.காளைகள் பொருளின் விலையை ஏற்றினால் கரடிகள் அதை குறைப்பார்கள்.ஆரம்பத்தில் மக்களுக்கு இதெல்லாம் அதிர்ச்சி அளிக்கும்.ஆனால் நாளடைவில் மக்களே சந்தையில் இறங்கி காசு பார்க்க ஆரம்பிப்பார்கள்.பொதுமக்கள் தங்கம்,வெள்ளியை வாங்குவதுபோல கோதுமை,அரிசி,பெட்ரோல் பியூச்சர்சை வாங்குவார்கள்.இந்த சந்தைகளில் பணவரவு அதிகரிக்கும்.இந்திய விவசாயத்தில் ஆதிக்கம் செலுத்தும் இடைதரகர்கள் கடும்போட்டியை சந்திப்பார்கள்.வயலும் வாழ்வும் நிகழ்ச்சிகளில் ஆன்லைன் வர்த்தகம் கற்பிக்கபடலாம்…

இப்படி எல்லாம் நடக்குமா என கேட்கலாம்…பல வளர்ந்த நாடுகளில் இப்படி எல்லாம் நடந்து விவசாயம் பனம் கொழிக்கும் தொழிலாக உள்ளது.சந்தை பொருலாதாரம் இந்தியாவில் முழுக்க கடைபிடிக்கபட்டால் இந்திய விவசாயமும் அதேபோல் லாபம் கொழிக்கும் தொழிலாக மாறும்.

Share

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>