2011-ம் வருடமும் முடிய போகிறது. இந்த வருடத்தில் என்னை கவர்ந்த அல்லது அதிகம் உபயோகிக்க வைத்த தளங்கள் பற்றி சில வரிகள். முதலில் தமிழ் தளங்கள்…
இந்த வலைபதிவில் தார்மீக ரீதியிலும், சட்ட ரீதியிலும் சில தவறுகள் இருந்தாலும் அதிகம் போய் வந்த தளம். இது மூன்றாமிடம் பெறுகிறது.
செய்திகளை வித்தியாசமான நடையில் கொடுத்தாலும் சுவாரசியமாக இருப்பதால் அதிகம் பார்வையிட்ட தளம். இது இரண்டாமிடம் பெறுகிறது.
உலக செய்திகளை அறிய அதிகம் நான் நாடிய தளம். பொதுவுடைமை கொள்கை பிரச்சார தளமாக இருப்பதால் அன்னப் பறவை போல அதனை விளக்கி விட்டு செய்தியினையும், அது குறித்த கருத்துகளையும் பிரித்து எடுத்துக்க சிறிது பயிற்ச்சி தேவை.. 🙂 🙂 மற்றபடி அமெரிக்க பொருளாதார வீழ்ச்சி, யூரோ குறித்த ஐரோப்பிய நாட்டு தலைவர்கள் பேச்சு, கூட்டறிக்கைகள், சீன உள்நாட்டு தொழிலாளர் பிரச்சினை மற்றும் சீனாவிறக்கு எதிரான அமெரிக்காவின் ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்றவற்றின் மெல்ல மெல்ல உருவாகி வரும் கூட்டணிகள் குறித்த செய்திகள் போன்றவைகளுக்கு மிகவும் உபயோகமா இருந்தது. ஆங்கில செய்தி தளங்கள் மூலம் தொடர்வது சற்று கடினமாக இருப்பதாக படுகிறது. எனவே இந்த வருடத்தில் இந்த தளம் முதலாமிடம் பிடிக்கிறது.
இனி வருவது ஆங்கில தளங்கள். மூன்றாமிடம் பிடிப்பது இந்திய தேசிய பங்கு சந்தையின் தளம். புதிய வடிவமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது. Peer Review என்பது குறிப்பிட தக்கது.
இரண்டாவது இடத்தினை பிடிப்பது இந்திய தொழில் முனைவோர்களுக்கான தளமாகும்.
முதலாமிடம் பிடிக்க கூடியது. உலக புகழ் பெற்ற தளமாகும். அமெரிக்க அடிப்படையிலான தொழில் முனைவோர் தளம்.
மிகவும் யதோச்சையாக ஆங்கில தளங்களில் தொழில்நுட்ப (கணிணி) சம்பந்த பட்ட தளங்கள் இடம் பெறாது போனது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது. இங்கு மேலே குறிப்பிட பட்டுள்ளது எல்லாம் என் சொந்த பயன்பாட்டின் அடிப்படையில் தொகுக்கப் பட்டவையாகும்.
arumaiyaana thokuppu.. nice