பணக்காரன் ஆவறதுக்கு முன்முயற்ச்சியா பங்கு சந்தையில் முதலீடு செய்யும் விளையாட்டு ஒண்ணு விளையாடி பார்க்க
முடிவு செய்து புது வியாபாரப் பூசை விளையாட்டை துவக்கியிருந்தேன்.. 🙂 🙂 முன்றாம் காலாண்டு முடிவில் கிட்டதட்ட 11சதமானம் நட்டத்தில் உள்ளது வியாபாரம். ஆட்டத்தை துவங்கும் போது எழுதியிருந்த வரிகள் இது…
அப்பப்ப லாபம் வந்தாக்கா இங்கிட்டு கட்டுரை எழுதி பந்தா பண்ணிக்குவேன். நட்டமுன்னா ஓரிரு வரி தலைப்பு செய்திகள் போல வரக்கூடும். தோத்தாங்கோளி கதையை எழுத யாருக்கு தான் ஆர்வமிருக்கும்… 🙂
ஆனாலும் எழுத எனக்கு நிறைய விசயங்கள் இருக்கு. அதையெல்லாம் சுருக்கி ஒரே வரியில் சொல்லுவது என்றால்…
வழமைப் போல மக்கள் சொல்லும் சந்தையின் போக்கை அனுசரித்த வரைபட அலசல் எனக்கு ஒத்துவரவில்லை.
5834 துவக்க புள்ளியாக இருந்த தேசிய பங்கு சந்தையானது முன்றாம் காலாண்டு முடிவில் 20சதவீதத்திற்க்கும் மேலாக இழப்பாகி 4624 என்பதாக முடிந்துள்ளது. இதனுடன் ஒப்பீடு செய்யும் பட்சத்தில் 10சதவீத இழப்பு என்பது ஓரளவு தவிர்க்க இயலா மேம்பட்ட அளவாகும்.கிட்டதட்ட மூன்றாம் காலாண்டு முழுக்க வரைபட அலசல்கள் மூலமாக எந்தவொரு வணிகமும் செய்ய கூடிய சூழல் இருக்கவில்லை என்பதே உண்மை. கரடியின் ஆதிக்கம் முழுமையாக வினையாற்றியுள்ளது.
3ம் காலாண்டு 2011
வேலை வெட்டியை கெடுத்துட்டு வந்து என் வலைபதிவில் இந்த கட்டுரையை படிக்கும் மக்களுக்கு நான் சொல்லுவது என்னவென்றால்..
இனிமேற்க் கொண்டு வாரன் பப்பெட் முன்மாதிரியை பின்பற்றி நீண்ட கால முதலீட்டாளராக செயலாற்றி பார்க்க யோசனை.
Leave a Reply