முதலாவததாக இக்கட்டுரை எழுத முக்கிய காரணமாக இருந்த சித்திரக்கதை வலைபதிவாள நண்பருக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.
எனது சிறு வயதில் சில பறவைகளை புத்தகத்தில் படமாக பார்ப்பதை தவிர்த்து வேறு வகையில் உலக அறிவு வருவதற்க்கு வாய்ப்பு கிடையாது.

சித்திரக் கதை முன்அட்டை
அந்த காலத்தில் கரடியினையோ, புலியினையோ நேரில் சந்திப்பது என்பது அசாத்தியமான ஒன்று. இன்று போல இணையவெளியோ, டிஸ்கவரி சேனல்களோ கிடையாது. பாடப் புத்தகத்தில் வரக்கூடியவை தான் வெளியுலக தொடர்புகள். அந்த கால தமிழ்நாடு அரசு பாடநூல் புத்தகங்கள் தரம் சொல்ல வேண்டியதில்லை. இது போன்ற வறண்ட சூழலில் இருந்த குழந்தைகள்,சிறுவர்களுக்கு ஒரு கற்பனை மாயலோகத்தை எளிதில் கொடுத்தது சித்திர கதைகள் என்பதில் ஐயமில்லை.

சித்திரக்கதை
குறிப்பாக காமிக் வகை கதைகள் படிக்கும் காலத்தே முன்னர் எனக்கு கிடைத்த இந்த சித்திரகதைகள் என்ற ரஷ்ய வெளியீட்டு புத்தகம் வெகுவெகு வருடங்கள் எங்கள் இல்லத்தில் இருந்தது. என்னாலும், சகோதரியாலும், உறவுக்கார சிறுவர்களாலும் படிக்க பட்டது. இன்றைய குழந்தைகள் இதில் படிக்க பெரியதாக ஒன்றுமேயில்லை. ஆனால் சிலகாலம் முன்னர் இதுவே சிலருக்கு மட்டுமே கிடைப்பதாக இருந்தது. பெரியவர்கள் முனைந்து பணம் செலவு செய்து வாங்கி கொடுத்திருந்தால் தான் ஆச்சு.

சித்திரக் கதை
இதுபோன்ற துவக்க கால குழந்தைகள் சித்திரகதை புத்தகங்கள் படிக்காது போயிருந்தால் படக்கதைகள்(காமிக்) உலகில் பெரிய ஈடுபாடே இராது போயிருக்கும்.

சித்திரக் கதை
அந்த கால நினைவுகளும் சில சமயம் சுகமாவே இருக்கிறது. அவை சம்பந்த பட்ட சில ஒளிப் படங்கள்.

சித்திரக் கதை

சித்திரக் கதை பின்னட்டை
ஒளிவருடி இணையத்தில் பகிர்ந்ததன் மூலம் உதவி செய்தது சித்திரக்கதை வலைபதிவாளர். அவருக்கு நன்றிகள்.
Leave a Reply