நூற்றாண்டுகளுக்கு மேலான எங்கள் பாரம்பரிய பரம்பரை வீடானது இன்று (29-03-2012) விற்க பட்டு விட்டதாக முடிவாக அறிவிக்கப் பட்டுவிட்டது.
என்னாலும், என் தந்தையாலும் அதனை மீண்டும் கைக்கொள்ள இயலவில்லை என்பதை பதிவு செய்வதே இங்கு பகிர்வதன் முக்கிய நோக்கம்.வாரிசுரிமையிலும், அனுபவத்திலும் தமக்கே வரும் என்று நம்பியிருந்த என் பெற்றோர்களுக்கு சொத்தானது வேறொரு பெண் வாரிசுக்கு குறுக்கு வழியில் போனதே மிகவும் அதிர்ச்சியான விசயம்.
வாழ்ந்து கொண்டிருந்த வீட்டினை காலி செய்து விட்டு உள்ளூரிலேயே வாடகை வீட்டிற்க்கு குடிபெயர்ந்ததும், சொத்து சம்பந்தமாக உரிமையியல்
நடவடிக்கைகள் எடுக்காமல் விட்டு கொடுத்ததும் அந்த சமயத்தில் எனக்கு மனதளவில் மிகப் பெரிய காரியமாக இருந்தது. சொத்து சம்பந்தமான
தங்களுடைய உணர்வுகளை கட்டு படுத்தி மறக்க ஆரம்பித்துவிட்ட கால கட்டத்தில் சொத்தானது சம்பந்த பட்டவர்களால் விற்பனைக்கு என்று
அறிவிக்க பட்டது. பழைய நினைவுகள் அசைபோட சரி நாமே வாங்கி விடலாம் என்று வேறு காலி இடங்கள் போன்றவைகளை விற்று வாங்கிவிட
முயன்றார்கள் என் பெற்றோர்கள்.
தமது பிறசொத்துகளை விற்று வாங்க போவதை அறிந்த நேசமற்று இருந்து சொத்து சமீபத்திய உரிமையாளர் வரிசு வீடு தேடி வந்து உங்களுக்கே
விற்க விரும்புகிறேன். நம் சொத்தை நீங்களே வாங்குவதே முறை என்று சமாதானமா பேசி விட்டு சென்றார். இந்த பிண்ணனியில் உற்சாகமாகிய என்
பெற்றோர் எப்படியும் உள்ளூரில் நாமே வாங்கிடுவது தான் நல்லது அது, இது என்று பேசி இருக்கும் காலி இடத்தை விற்க முனைந்தனர். விதியின் குரூரத்தை
இங்குதான் காண இயலும். விற்க முனைந்த இடத்தை உடனே விற்க இயலாதவாறு பிரச்சினைகள். எப்படியும் ஆறு மாதங்கள் ஆகிவிடக்கூடும் என்பதாகி விட்டது.
வீட்டை விற்க முனைந்துள்ள சொந்தமோ தனக்கு பணம் அவசரம் என்பதால் தான் பிறருக்கு விற்க போவதாக கூறிவிட்டார். கையறு நிலையில் சில காலம் பொறுத்திருக்கும் படியும், வாடகை போன்று வேறு விதமாக விற்று வரக்கூடிய பணத்திற்க்கான ஈட்டினை அதுவரை தாங்கள் செய்து விடுவதாகவும் நாங்கள் கேட்டு கொண்டது எடுபடவில்லை. வீடு விற்பனை என்று அறிவிக்கபட்ட உடன் இணை பாகமாக இருக்க கூடிய பங்காளிகள் வழமை போல எல்லை தகராறினை கிளப்பினார்கள். வீட்டினை விற்க முடிவு செய்தவரோ நீதிமன்றத்தில் தடையாணை பெற்று, வீட்டினை வாங்குபவருக்கு எல்லையினை அளந்து காட்டி ஒப்புதல் பெற்றுள்ளார்.
இறுதியாக பதிவாளர் அலுவலகத்திலிருந்து விற்பனை முடிவாகிவிட்டதாக அலைபேசியில் அழைத்து உறுதி செய்துள்ளார். செய்தியினை கேட்ட தாயார்
மிகுந்த வருத்தத்துடன் பல்வேறு உறவுகள் பற்றியும் முறையற்ற சொத்து சேர்ப்பதன் தீமைகள் குறித்தும் எடுத்து கூறினார். ஒரு பெரிய உறவினர் தானே பார்த்து பார்த்து கட்டிய வீட்டினை பையனுக்கு கொடுத்து விட அதை தொலைக்க முயன்ற பையனிடமிருந்து மருமகள் எடுத்து கொள்ள இன்று தான் கட்டிய பெரியமாளிகையின் அவுட்அவுசில் என்றைக்கு மருமகள் வெளியேற சொல்லுவாளோ என்று எண்ணத்தில் காலத்தை கழித்து வருகிறார்.
மற்றொரு உறவினரோ தன் மனைவியினாலேயே வீட்டிலிருந்து துரத்த பட்டு வீட்டினுள் புக இயலாது உள்ளார். இவ்விரு ஆசாமிகளும் செய்த புண்ணிய காரியம் தான் நாங்கள் உள்ளூரிலேயே வீடற்றவர்களா இடம்பெயர வேண்டிதாகி விட்டது. அப்படி புத்திசாலிகளாக செயல்பட்டவர்களும் எங்களை விட மோசமான சூழலில் தான் தங்கள் முதுமையை கழிக்க காத்துள்ளார்கள். தெய்வம் நின்று கொள்வதில்லை இப்பவெல்லாம் அன்றே கொல்கிறது போலும் என்கிறார் என் தாயார்.
unmaya theivamnu onnu irukka yenaku nambikkai illa 🙁