புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே.

நறுந்தொகை என்னும் இந் நீதிநூல் அருந்தமிழ்ப் புலமை சான்ற அதிவீரராமபாண்டியரால் இயற்றப்பட்டது.

வித்யாரம்பம் எனும் ஏடு தொடங்குதல் நல்ல நிகழ்ச்சி இன்று என் தங்​கை மகனுக்கு இனி​தே ந​டை​பெற்றது. எந்த வித மத சடங்குகளுமின்றி, ஆங்கில வழி   வி​ளையாட்டு பள்ளிகளுமின்றி (play school) எளி​மையாய் தமிழ்நாடு அரசின் அங்கன்வாடி என்னும் பால்வாடியில் ​​ சேர்க்க பட்டதுடன் நி​றைவு ​பெற்றது.

வித்யாரம்பம்

வித்யாரம்பம்

பல்​வேறு நண்பர்கள், உறவினர்கள் ஆ​லோச​னைக​ளையும் தாண்டி பாரம்பரியமாக நானும், என் ச​கோதரியும், எங்கள் மூதா​தையர்களும் படித்து வளர்ந்த அ​தே துவக்க பள்ளியில் இவ​னையும் ​சேர்த்து விட்டது எ​னோ மகிழ்வாக​வே  ​தெரிகிறது. இனி வருங்காலத்தில் ஆங்கில வழி கல்வி, சர்வ​தேச பாட திட்ட கல்வி என்று மாறி ​போககூடும் என்பது  இப்​போ​தே நன்கு ​தெரிகிறது. ​போகும் வ​ரை ​போகட்டும்.

குரு - சீடன்

குரு - சீடன்

என்​னை ​போல் சராசரி மாணவனாக திகழாது, அவன் தா​யை ​போல எதிலும் முதன்​மை என்பதாக படித்து வளர வாழ்த்தி
அனுப்பி​னேன். எப்படி​யோ படித்தாலும், படிக்காவிடினும் தன்னியல்பு அழியாது வளர்ந்து, வாழ்த​லே அவன் வாழ்வின் உண்​மையான
மகிழ்ச்சியாக இருக்கும். அதற்க்கு தக்க வழி காட்டலும், மன திடமும் கி​டைத்தால் அது​வே ​போதும்.

இலக்​கே குறி

இலக் கே குறி

சுயம் அழிதல் என்பது பலருக்கும் புரிவதில்​லை. புரிந்து தான் என்ன ​செய்ய ​போகிறார்கள்… 🙂 🙂

சமூகம் என்ன​ சொல்லும்,அவர்கள் என்ன ​சொல்லுவார்கள் என்று பல சம்பந்தமில்லா காரணங்களுக்காக பயந்து வாழ்ந்து,  ஓய்ந்து வாழ்வில் எந்த​வொரு திருப்தியும், மகிழ்வுமின்றி.. என்னத்​தை ​சொல்ல.

Share

1 comment to கற்கை நன்றே..!! கற்கை நன்றே…!!!

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>