கன்னி ராசி என்பது பாரம்பரியமாக ராசி அமைப்பில் கன்னிராசியை குறிக்கும். இங்கு நான் கன்னி ராசி பலனை பற்றி பேச போவதில்லை. கன்னியருடனான கண்ணீர் ராசியை பற்றியே பேச உள்ளேன்.. 🙂 🙂

அழு கை
கண்ணீர் ராசி என்று புதியதாக ஒன்று உள்ளதோ என்று சமீப காலமாக சந்தேகமாகவே உள்ளது. தோழியராக அமைய கூடியவர்களை தவிர்த்து விடுவோம். சிலரோ ஏதேனும் ஒரு வகையில் உண்மையாகவோ அல்லது நடப்பு முறையில் உறவாக அமைந்து விடுகிறார்கள். இப்படி பட்டவர்களுடன் பேசும் போது
அனேகமா கண்ணிமைக்கு உள்ளே ஒரு வாளி கண்ணீரை வைத்து கொண்டு பேச ஆரம்பிப்பார்களோ என்று எண்ண தோன்றுகிறது.
ஒருவரோ பயணத்தினூடாக தனது கல்வியியல் குறிக்கோள் முழுமையாக வெற்றி பெறாது போனது குறித்து வருத்தத்தை பகிர்ந்து கொண்டு வந்தார். நானும் என்னை போல சரியாக படிப்பு வராதவர்கள் இருக்கும் உலகில் உங்களின் மிகப் பெரிய லட்சியம் சிறிது குறைவாக ஈடேறினாலும் என் போன்றவர்களுக்கு அதுவே மிகப் பெரிய சாதனை என்று சொன்னேன். அவருக்கு அவருடைய கவலை பெரிது போல இருந்திருக்கும் போல. பொலபொலவென கண்ணீர் விட்டு அழுதவாறே தனது ஆற்றாமையை வெளிப்படுத்தி மிகவும் வருந்தினார். பொதுவில் பார்ப்போர்களுக்கு நான் ஏதோ அவரை துன்புறுத்தி அழ வைத்திருப்பது போல ஆகிவிட்டது.
அப்போது தான் ஒவ்வொருவருக்கு பெரிதாக தோணுவது மற்றவருக்கு சாதரண விசயம் என்பது புரிந்தது. இன்றைக்கு நினைத்து பார்த்தால் அன்றைய சூழலில் தொழிலுமின்றி, பதவியுமின்றி, வருமானமின்றி ஒரு கையறு சூழல் எனக்கு. அவருக்கும் அது தெரியும். அப்படியிருந்தும் நான் அவருடைய 95% சத வெற்றி குறிக்கோளானது சிலபல சதவீதம் குறைவாக போனதற்க்கு சமாதானம் சொல்ல வேண்டியதாகி இருந்தது. சோத்துக்கே வழியில்லாதவன் விருந்தில் பீடா இல்லை என்று வருந்தியவருக்கு சமாதானம் சொல்லுவது போல இருந்தது.

கண்ணீர்
மற்றொரு உறவோ மிகச் செல்லமானவர். நானும் பண்ணைக்கோழி (பிராய்லர் கோழி) என்று செல்லம் கொஞ்ச போக சேவல் கோழியுடன் சண்டை என்று உறவையே முறித்து கொண்டு விட்டார். ஜென்ம பகையாகி போனது மிகப் பெரிய கொடுமை. உறவுகள் தேவையெனும் வரை எல்லா உரிமைகளும் எடுத்துக் கொண்டு நம்மை ஒரு வழி செய்கிறார்கள்.
வேறு ஒரு சகோதரியோ மருத்துவ படிப்பே தன் இலட்சியம் என்று இருந்தார். சரி ஒரு வேளை இடம் கிடைக்காமல் போய் விட்டால் என்ன செய்வது என்று கேட்க போக செவிலியர் படிப்பு படிக்க போவதாக கூறினார். நானும் அடடா மருத்துவம் என்பது நிறைய வருமானம் தரக்கூடியது. அதை விட்டால் பொறியியல் துறை தான் அடுத்ததாக அதிக வருமானம் தரக் கூடியது என்று விளக்கி கூறி வந்தேன். அவருடைய செவிலியர் லட்சியத்திற்க்கு எதிராக நான் பேசுவதாக கண்ணீர் பொங்கியது. அத்துடன் ஆளை காணோம். கணிணிப் பொறியியல் படிக்கிறார், தற்போதைக்கு c,c++,… சந்தேக நிவர்த்தி பணி மிச்சமாகி விட்டது என்பதுடன் திருப்பதியடைய வேண்டியது தான். இறுதியாக மருத்துவ படிப்புக்கு தேவையான மதிப்பெண்ணுக்கும் இவர் வாங்கிய மதிப்பெண்ணுக்கும் சாதாரண ஏணி போதாது தீயணைப்பு துறையின் நவீன இராட்சத ஏணி வாகனம் தேவையென்பது நான் சொல்ல தேவையில்லை.

அழு கை
ஒரு வேலை செய்து கொண்டு இருக்கும் போது உடன்பிறவா உறவு ஒருவரிடம் இந்த முறையில் வேலை நடந்தால் சில இடங்களில் சத்தம் போடுவார்கள், திட்டுவார்கள் என்று ஒரு ஒப்பீட்டுக்கு சொன்னேன். சில நிமிடங்களில் பொலபொலவென்று கண்ணீர் பொங்கி விட்டது. திட்டுவதென்றால் நேராக திட்டி விடுங்கள் இப்படி சுற்றி வளைக்க வேண்டாம் என்கிறார். ஊரில் இப்படி திருடி விடுவார்கள் என்று சொன்னால் நாம் திருட நினைப்பதா அர்த்தமா என்ன?
ஆனாலும் நம்மையே கண்ணீர் விடவைக்க கூடிய சாமார்த்தியசாலியான உடன்பிறப்புகளும் இருக்கிறார்கள். அவர்களிடையேயான எனது அனுபவம் பற்றி
என்றைக்கும் நான் வாய் திறப்பதாக இல்லை.. 🙂 🙂 என் முதுகு என்றுமே் சுத்தமானது தானே.
எத்தணை அடிவாங்கினாலும் சமாளிக்கிறீங்க.
நீங்க ரெம்ப நல்லவருண்ணே
why your saying like this for virgo horoscope?
is it true?
send me day to day update of my horoscope virgo
thank tou…