புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

மாரியம்மன் திருவிழா

தமிழகத்தில் உள்ளூர் திருவிழாக்கள் பலவற்றிலும் மிக முக்கிய இடம் பிடிப்பது மாரியம்மன் திருவிழாவாகும். தற்காலத்திலும் தாக்குதல் திறனு​டைய
சின்னம்​மை மற்றும் இந்தியாவிலிருந்து முற்றிலும் ஒழிக்க பட்டு விட்ட ​பெரியம்​மை ​போன்ற ​நோய்கள் மாரியம்மன் வழிபாட்​டி​னை மிகவும் முக்கியத் துவமாக்கியுள்ளன. குழந்​தைகள் மற்றும் சிறுவயதினருக்கு வந்து எளிதில் சரியாக கூடிய ​​நோய் ​தொற்றாக இருப்பதால் மாரியம்மனுக்கு ​வேண்டுதல்களும், ​நேர்த்தி கடன்களும் மிக அதிகம்,

அம்​மை ​நோய்

அம் மை நோய்

மற்றபடி ஒவ்​வொரு ஊரில் சிற்சில மாற்றங்களுடன் ​கொண்டாட பட்டு வருகிறது. சுமார் 15 தினங்களுக்கு முன்னதாக கம்பம் ​நடுதல் என்ற சடங்குடன் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்குகின்றன. அன்றிலிருந்து ஒவ்​வொரு தினமும் ஊரின் முக்கியமானவர்கள் வீட்டிலிருந்து இரவு பூ​சைக்கு பச்​சை ​கொண்டு ​செல்லுதல் என்னும் மரிய​தை நிகழ்ச்சி ந​டை​பெறும். இதில் இருக்கும் உள்ளடி அரசியலும், ​பொல்லாப்பு ​பேச்சுகளும் அப்பப்பா.

அ​தே சமயம் விடியற்கா​லையில் மகளீர்கள் குளித்து புறப்பட்டு கம்பத்திற்க்கு நீர் ஊற்ற குடத்தில் தண்ணீர் எடுத்துச் ​செல்லுவார்கள் (​பெரும்பாலும் வயசு ​பெண்க​ளே என்பதால் அவர்க​ளை தாய்மார்கள் என்று அ​ழைக்க ​வேண்டா​மே.. 🙂 🙂 ) அதிகா​லை ​நேரத்தில் ​பெண்கள் தனியாக ​போக பயமாக இருக்கு​மே என்று ஊரிலிருக்கும் விட​லைகளும் அந்த ​நேரத்தி​லே​யே எழுந்து ​​கோவிலுக்கு வந்துவிடுவார்கள்.

ஒற்று​மையான ஆசாமிகள் உள்ள ஊர் எனில் ஆளுக்கு ​கொஞ்சம் பணம் ​போட்டு க​லை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். முற்காலங்களில் இ​சைக்கச்​சேரி (ஆர்க்​கெஸ்ட்ரா) நடத்துவார்கள். மிக முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது. இன்​றைக்கு ஒலிப்​பெருக்கி கட்டினா​லே​யே வீதியில் சண்​டைக்கு வந்து விடுகிறார்கள். அவரவர்கள் ஐ ​போன், எம்பி3 என்று பாடல் ​கேட்க ஆரம்பித்து விட்டதால் இ​சைக் கச்​சேரி ​எனும் ​மே​டை நிகழ்ச்சி ​மெல்ல வழக்கு ஒழிந்து வருகிறது. மற்றபடி சில இடங்களில் நாடகம், பட்டிமன்றம் ​போன்ற​வைகள் நடத்துவார்கள்.

விளக்கு மாவு எனும் பச்​சைமாவு

விளக்கு மாவு எனும் பச் சைமாவு

விழாவன்று ​பெரும்பாலான வீடுகளில் விளக்கு மாவு என்னும் பச்​சை மாவு இடித்து ​வெல்லம் விட்டு தட்டி ​செய்வார்கள். துவக்கத்தில் சரியாக நிற்க்கும் அந்த மாவானது விளக்கு பற்ற ​வைத்து ​கோவிலுக்கு கிளம்பி வீதிக்கு ​செல்லுவதற்க்கும் ​பெரும்பாலும் த​லை சாய்ந்து நம் மானத்​தை வீதியில் வாங்க சதி ​செய்து விடும். வயசு ​பெண்கள் இருக்கும் வீடுகளில் ​பெரும்பாலும் மு​ளைப்பாரி ​போடுவார்கள். மு​ளைப்பாரி என்பது சிறுதானிய வ​கைக​ளை சின்ன சின்ன முங்கில் தட்​டைகள், பாத்திரங்கள் ​போன்றவற்றில் வளர்த்து பச்​சை ப​சேல் என்ற சூழலில் எடுத்து ​செல்லுதல் ஆகும், அடுத்த நாள் ​பெரும்பாலான இடங்களில் கடா ​வெட்டும், மஞ்சள் நீராடுதலும் ந​டை ​பெறுகிறது, தவிரவும் தீச்சட்டி எடுத்து ஊர்வலம் வருவது பல ஊர்களில் மிகவும் பிரசித்தி ​பெற்றது.

மு​ளைப்பாரிகள்

மு ளைப்பாரிகள்

எங்கள் ஊரில் இன்று மாரியம்மன் திருவிழா, அந்த காலத்திலும் சரி இன்றும் சரி ஊருடன் ஒத்து வாழ் என்பதற்க்கு ஏற்ப விளக்கு மாவு அம்மா தயார் ​செய்து ​கோவிலுக்கு ​கொண்டு ​சென்று வருவார்கள். விளக்கு/பச்​சை மாவி​னை முடிந்த அளவு அப்படி​யே உண்ணலாம். மற்​றொரு வழியாக அதிரசம் சுட்டும் உண்ணலாம். இது ​போன்ற திருவிழாக்கள் சமயத்தில் ஊரில் ந​டை​பெறும் அரசியலும், உறவுகளில் ந​டை​பெறும் முரண்களும், பூசல்களும் வாழ்க்​கையில் தவிர்க்க இயலாத​வைகள்.

சில இடங்களில் சில ​பேர் க​டைப்பிடிக்கும் ​கொள்​கைகள் நம்மால் ஜீரணிக்க இயலாத வண்ணம் இருக்கும். சில ​கொள்​கைகள் நாம் விரும்பி ஏற்று பின்பற்ற கூடியதாக இருக்கும். ​பெரும்பாலும் நல்ல விசயங்கள் நம்மால் பின்பற்ற இயலாததாக​வே இருக்கும். ஏ​னெனில் நல்ல விசயங்க​ளை பின்பற்ற மிகவும்​மெனக்​கெட ​வேண்டியிருக்கும். ​கெட்ட​வைகளுக்கு அவ்வாறு ​தே​வையிரா​தே.. 🙂 😉 சமீபத்தில் ஒருவர் புதியதாக ஒரு ​கொள்​​கை​யை க​டைபிடிக்க ஆரம்பித்தார். எப்படி​யெனில் அவராக ​சென்று யாரிடமும் ​பேச மாட்டார், வரவு​செலவு ​வைத்து ​கொள்ள மாட்டார். யா​ரேனும் ​தேடிவந்து தன்னிடம் ​பேசினா​ல் இவர் பதிலளிப்பாராம். ​ரோமில் ​ரோமானியனாக இரு – என்பது பழ​மொழி. மிகவும் தவறான ​கொள்​கை என்பதால் நாமும் க​டைபிடிக்க ​வெகு எளிய ​கொள்​கை என்பதால் நானும் அவரிடம் மட்டும் இந்த ​கொள்​கை​​யை க​டைபிடிக்க ஆரம்பித்து விட்​டேன். ​நல்ல ​வே​ளை ​தெளிவாக அவரிடம் மட்டும் இந்த ​​கொள்​கை​யை க​டைபிடிப்பதால் தனி​மை ​நோயில் சிக்காது உள்​ளேன். ஆனால் சம்பந்தபட்டவர் எப்படி தான் யாருடனும் ​போய் ​பேசாது, பழகாது இருக்கிறா​ரோ? இந்த வருட மாரியம்மன் திருவிழாவில் உறவுகள் குறித்த விசயத்தில் அ​னேகமாக இது​வே முக்கியமாக குறிப்பிட தக்கதாக இருக்க கூடும்.

மறக்காமல் எல்லாரும் எங்க ஊரு மாரியம்மன் திருவிழாவிற்க்கு வந்திடுங்கப்பா. எல்லாருக்கும் மாரியம்மன் அருளும், விளக்கு/பச்​சை மாவும் தயாராக இருக்கு.

Share

2 comments to மாரியம்மன் திருவிழா

 • மாசிலா

  பழைய நினைவுகளை திரும்பி பார்ப்பது போல் உள்ளது. 1958 வாக்கில் எனக்கும் கூட சின்ன வயதில் (6 மாசம்) பெரியம்மை போட்டு உயிருக்கு போராடி இருந்தப்போது புதுச்சேரி முத்தியால்பேட்டை ‘முத்து புத்துளாய் ஏழை மாரியம்மன்’ கோவிலில் வாழை இலையில் படுக்க வைத்து பெரியவர்கள் வேண்டிவந்தார்களாம்.நாளடைவில் இந்த கோவிலுக்கு எங்கள் தகப்பரே தருமகர்த்தா ஆகி அதை நிர்வகுத்தி வந்தார். இந்த கோயிலின் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், 1990கள் வரை இது முழுதும் பறையர் குலத்தவர்களால் மட்டுட்மே நிர்வகம் செய்யப்பட்டு வந்தது. தேரோட்ட காலங்களில் ஊரில் பல வித (உயர்) சாதி (என கூறிக்கொள்ளும்) மக்கள் எந்த வித பாகுபாடும் இல்லாமல் அம்மனுக்கு தீபாராதனை செய்து வணங்குவர்.

  உங்கள் ஊரிலும் அம்மன் கோவில் திருவழா நல்லபடி நடந்தேற வாழ்த்துகிறேன்.

 • பாண்டியன்

  அண்ணே
  ரிக்கார்டு டான்சு நடக்காத எந்த ஒரு திருவிழாவிற்கும் நாம் வருவதாய் இல்லை.
  தகுந்த ஆவண செய்யுமாறு வேண்டுகிறோம்.

Leave a Reply to மாசிலா Cancel reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>