
The God Must Be Grazy
இன்றைக்கு சுமார் 32 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த திரைபடத்தினை பற்றி சிலாகித்து எழுதகிறோம் எனில் அந்த படத்தின் தாக்கம் குறைவானதல்ல. முற்றிலும் நம் தலைமுறைக்கு முந்தைய படம். கடைசி வரை சிரிப்பு மட்டுமே குறிக்கோள் என்பதாக மிக எளிமையாக எடுக்க பட்டுள்ள படம். அப்படி பட்ட படத்தின் முதலிரண்டு பாகத்தினை கடந்த சில நாட்களில் பார்க்க நேர்ந்தது.
போட்ஸ்வானா பகுதியினை களமாக கொண்டு கதை நகர்த்த பட்டாலும் நம்மால் மிக சுவாரசியமாக புரிந்து கொள்ளவும், சிரிக்கவும் முடிகிறது. காலியான ஒரு குளிர்பான (கோக்கோ கோலா ) புட்டியினையே கதையின் முக்கிய கதாபாத்திரமா கொண்டு கதையினை நகர்த்த எந்தளவு மிகவும் மெனக் கெட்டு இருக்க வேண்டும் என்பது இப்போது நினைத்து பார்க்க பிரமிப்பாக உள்ளது.

கதா நாயகன்
முதல் பாக படத்திலேயே ஒரு நாட்டில் ஆயுதமேந்திகள் இராணுவ புரட்சிக்கு முயல்வதும், அவர்களை இராணுவம் துரத்தி வேட்டையாடுவதும் நடப்பதால்
ஏதோ சிக்கனமாக படமெடுக்க முடிவு செய்து படமெடுக்க பட்டுள்ளதாகவும் கருத இயலாது, அந்த இராணுவ புரட்சியினை முதன்மையாக கொண்டு எடுத்திருந்தால் அந்த கால கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் எடு பட்டு இருக்கும். நகைச்சுவை படம் என்பதால் ஆயுத நடவடிக்கைகள் கூட சிரிக்க வைக்க உதவுவதாகவே கொண்டு சென்றுள்ளது இயக்குநரின் குறிக்கோளை நன்கு வெளிபடுத்துகிறது.

ஓட் டை வண்டி.. 🙂 🙂
அன்றிலிருந்து இன்று வரை கதாநாயகன் வசதி அற்றவனாகவே இருப்பது திரையுலகின் விதிமுறை போலும். ஓட்டை வாகனத்தில் கோமாளித்தனமான
வேலைகள் செய்து கதாநாயகியினை வரவேற்று கூட்டி செல்லுவது மிகவும் இரசிப்புக்கும், நகைப்புக்கும் உரியது. நண்பனாக வருபவர் ஆடம்பர வாகனத்தில்
வந்து நாயகியினை கூட்டி செல்வதும், ஓட்டை வண்டியில் தேமே என்று பின்னாடி நாயகன் செல்லுவதும் பெரியவர்களையும் புன்னகைக்க வைக்காது விடாது.

பெரியவனாகிட் டேன்.. 🙂 🙂
இரண்டாம் படத்தில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் வருகிறார்கள். அண்ணன், தம்பி என்று இரு சிறுவர்களும் வேட்டையாடுபவர்கள் வாகனத்தில் ஏறிக் கொண்டு ஏக ரகளை செய்கிறார்கள். காட்டுவாசியாக இருப்பினும் தாய், தகப்பன் என்ற உணர்ச்சிகள் ஒன்றே நிரூபிக்கும் வண்ணம் வேட்டையாளர்கள் வாகனத்தினை பின் தொடர்ந்து கால்நடையாக தகப்பனாக ஓடுவது மிகவும் அருமை. கடைசி காட்சி வரையிலும் ஓடுவது என்பது அன்பு என்பது அனைத்து நாடு, இன மக்களுக்கும் அடிப்படையானது என்பதை உணர்த்துகிறது.

மகிழ்ச்சி..!!
இளையவனாக நடிக்கும் சிறுவன் தன்னை துரத்தும் நரி(ஓநாய்..?)யிடமிருந்து தப்பிக்க ஒரு கட்டையை எடுத்து தன்னை உயரமாக காண்பித்து தப்பிப்பது மிகவும் நெகழ்ச்சியான காட்சி. இதே போல காலணியை கடித்து பிறாண்டும் கீரிபிள்ளை (எறும்பு திண்ணி..?) வெய்யிலில் களைத்து போயும் விடாது பின்தொடர்ந்து வருவது, பையன்கள் இருவரும் தமது தகப்பனை கண்டவனும் அவர் மீது இருவரும் ஒரே நேரத்தில் பாய்ந்து விழுந்து புரளும் காட்சி.
முதலிரண்டு படங்கள் மட்டுமே சமீபத்தில் பார்த்தேன். 3 ம் பாகம் சிறுவயதில் பார்த்து. 4ம் பாகத்தினை படம் வெளியான சமயத்தில் திரையரங்கில் பார்த்தது. கடைசி பாகம் என்னை பொறுத்த வரையிலும் மகா அறுவை.
பாகம் – I
http://www.youtube.com/watch?v=pJGVc4_vdLk
பாகம் – II
http://www.youtube.com/watch?v=AnD0AWHle5E
இரண்டாம் பாகத்திற்க்கான சுட்டி கிடைக்கவில்லை.
Leave a Reply