நம்மில் பலருக்கும் சிறுவயதில் தீவிரமான கதை புத்தக படிக்கும் இருந்திருக்கலாம். அப்படியில்லையெனினும் பால்ய வயதில் தமிழகத்தில் அம்புலிமாமா கதைப் புத்தகத்தை சந்திக்காது வளர்ந்திருக்க இயலாது. வளர்ந்து விட்ட இன்றைய நிலையில் அந்த காலத்து வண்ண படங்கள் அடங்கிய அந்த புத்தகத்தை நினைத்து பார்த்தாலே இனிமையான நினைவுகள் வந்துமோதுகின்றன.
விக்கிரமாதித்யன் மற்றும் வேதாளம் போன்ற பல கதாபாத்திரங்கள் அச்சிறு வயதில் நமக்கு அறிமுகமாது. அதே காலகட்டத்தில் டிடி யில் விக்ரம் அவுர் வேதாள் புரிந்தும் புரியாமலும் இரசிக்க வைத்தது.
மிக எளிமையான கதாபாத்திரங்கள், பாரம்பரியமான வண்ண உடைகள், மந்திர தந்திரங்கள் நிறைந்த கதைகள் என என்றும் தன் தரத்தினை சற்றும் விட்டு கொடுக்காது சிறுவர்களுக்கான புத்தகமாகவே வெளிவந்தது.
அந்த காலத்தில் வெளியான அனைத்து புத்தகத்தையும் இன்றைய நவீன இணைய உலகில் அனைவரும் படித்து மகிழ சந்தமாமா.காம் தளத்தில் ஒளிவருடி இணையேற்றியுள்ளார்கள். சுட்டி…
http://www.chandamama.com/
இந்த சுட்டியில் போய் தமிழ் மொழியினை தெரிவு செய்து நமக்கு தேவையான புத்தகத்தின் வருடம் மற்றும்
மாதம் தெரிவு செய்தால் போது அந்த குறிப்பிட்ட இதழ் நம் கண் முன்னே விரியும்.

அம்புலிமாமா - பொக்கிஷ குவியல்
அருமை அண்ணே. நல்ல கலிக்சன்