
ஒரு நபர் நிறுவனம்
நிறுவனங்கள் மசோதா 2009 “ஒரு நபர் நிறுவனம் – One Person Company [OPC]” என்ற கருத்துருவினை முன்மொழிந்துள்ளது. சாதரணமான நிறுவனங்கள் போன்ற செயல்பாடுகள் அடங்கியவையே ஆனால் ஒரே ஒரு தனி நபர் மட்டும் பங்குதாரராக இருப்பார். இந்த முறையானது
இந்தியாவின் பழைய சிக்கல்(ஆபத்து) நிறைந்த தனியுரிமையாளர் (proprietorship) முறைக்கு சிறந்த மாற்றாக அமையும் என்று எதிர்பார்க்க படுகிறது.
நேற்றைக்கு மக்களவையில் இந்த மசோதா – நிறுவனங்கள் சட்டம் 2012 – ஏற்று கொள்ள பட்டதுள்ளது.
எதற்க்கு இந்த ஒரு நபர் நிறுவனம்?
இந்த பெயரே சுட்டி காட்டுவது போல இந்த நிறுவனத்தில் ஒருவரே பங்குதாரராக இருப்பினும் நிறுவனத்தின் சட்டபூர்வ மற்றும் பொருளாதார பொறுப்புகளுக்கு (legal and financial liability) நிறுவனமே பொறுப்பாகும். சம்பந்த பட்ட நபர் பொறுப்பாக மாட்டார்.
நடப்பிலிருப்பவைகளுக்கும், புதிய மசோதாவிற்க்கும் உள்ள வித்தியாசம் என்ன?
ஏற்கனவே உள்ள நிறுவனங்கள் சட்டம் – 1956 படி ஒரு நிறுவனம் என்பதை துவக்க கட்டாயம் குறைந்தது இரு நபர்கள் தேவை. இந்த இரு நபர்கள் தேவை என்பதன் மூலம் தெளிவாக தனியுரிமையாளர் என்பதிலிருந்து நிறுவனம் என்பதை வேறு படுத்தி காட்டுகிறது.
இதன் மூலம் தனது தொழிலை நிறுவனமாக்க விரும்புவோர்கள் பெயரளவில் சில இயக்குநர்களை நியமித்து அவர்களுக்கு ஒரே ஒரு பங்கினை
வழங்கி நிறுவனமாக பதிவு செய்து தொழில் நடத்தி வருகின்றனர். ஒற்றை பங்கினை ஒதுக்குவதன் மூலம் நிறுவனங்கள் சட்டத்தின் படியான சாதகங்களை அனுபவித்து கொண்டு தனியுரிமையாளர் நிறுவனம் கொண்டுள்ள பொறுப்புகளிலிருந்து தப்பி வருகின்றனர்.

ஒரு நபர் நிறுவன சட்டம்
ஒரு நபர் நிறுவனம் அமைய போவது எப்படி?
1. முதலாவதாக சம்பந்த பட்ட நபர் தனியான பெயர் மற்றும் சட்டபடியான அடையாளம் தனது நிறுவனத்திற்க்கு உருவாக்க வேண்டும். அது எந்த பெயரில் தொழில் செய்ய போகிறாரோ அந்த பெயரில் இருக்க வேண்டும்.
2. வாரிசினை நியமிக்க வேண்டும். நிறுவனத்தை துவக்குபவர் இறந்தாலோ அல்லது வேறு ஏதேனும் ஆனாலோ வாரிசானவர் சட்டபடியான உரிமைகளை பெறுவார். இது “நபர்கள் வருவார்கள், போவார்கள். நிறுவனம் என்றும் வாழும்.” என்ற பொன்மொழியின் அடிப்படையிலானது.
3. எந்த ஒரு தனி நபர் நிறுவனமும் தனது பெயரின் இறுதியில் OPC என்ற இணைப்பை பெறும். PVT என்பதை ஏற்கனவே நாம் கண்டுவந்துள்ளோம்.
இதனை எந்தவொரு அச்சு வெளியீட்டிலும், பிற ஊடக வழியிலும் பயன்படுத்தலாம்.
எனது pvt ltd நிறுவனத்தை மூடி விட்டு ஒரு நபர் நிறுவனமாக மாற்றிவிடலாமா?
இப்போதைக்கு முடியாது. இந்த சட்டமானது கருத்துரு அளவிலேயே உள்ளது. நடைமுறைக்கு இன்னமும் வரவில்லை. தவிரவும் இந்த வகையான நிறுவன அமைப்பு மிகச் சிறிய தொழில் முனைவோருக்கே மிகவும் உபயோகமாக இருக்கும்.
கவர்ச்சியான அம்சங்கள்:
1. நிறுவனத்தை விரிவாக்குவது மிக எளிதானது. தேவையான அளவு பிற முதலீடுகளையும், பங்குதாரர்களையும் உள்ளே கொண்டு வரலாம்.
2. முதலீட்டாளர்கள் தனியார் நிறுவனமாக மாற்ற விரும்பினாலும் எளிதில் மாற்றி கொண்டு விடலாம்.
#இக்கட்டுரையில் ஏதேனும் தகவல், கருத்து பிழைகள் இருப்பின் கம்பெனி பொறுப்பல்ல.
##ஆங்கில மூலக் கட்டுரை http://yourstory.in/2012/12/one-person-company-approved-by-the-lok-sabha-implications-and-what-it-means-to-current-and-to-be-entrepreneurs/
ஒன்னுமே புரியலை
அருமையான தகவல் பதிவுகள் இது போன்ற பதிவுகள் நிறைய வரவேண்டும் வாழ்த்துக்கள் தோழரே —
http://www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
company act-1953 is very old. It is not at all suitable for present situation. To stop cheating public money(sarada scam, satyam computers) new company act-2016 has been updated.