புள்ளிவிவரம்

குறுஞ்​செய்தி கிறுக்கல்கள்..

பின்னூட்டங்கள்

 • சீனா ​போர் - ​09/2020 (1)
  • கடைசிபெஞ்ச் { நாம் சீனா போன்று இல்லை. ஆனால், சீனா போன்று ஆகிக் கொண்டு இருக்கிறோம். சீனா உள்ளே வரவே இல்லை என்று பொய் சொல்கிறோம். சீன புல்லட்டில் இந்தோதிபெத் வீரர் இறந்து போய் இருக்கின்றனர். அதை... } – Sep 02, 8:04 AM
  • பாண்டியன் { கைலாயத்தை மீட்டெடுப்பாரா மோடி. } – Sep 01, 7:00 PM
 • இந்த வார என் வர்த்தகம் - 06/03/2020 (1)
  • பாண்டியன் { எளிமையான அர்த்தமுள்ள விரிதாள். } – Mar 07, 8:35 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 28/02/2020 (1)
  • பாண்டியன் { மகிழ்ச்சி. உலகமே கதறுகிறது. இங்கே மட்டும் பட்டை கிளப்பப்படுகிறது. } – Feb 29, 8:46 AM
 • இந்த வார என் வர்த்தகம் - 21/02/2020 (2)
  • தமிழ்பயணி { அன்றன்​றே வாங்கி, விற்பது அல்லது விற்று, வாங்குவது என கா​லை 9:15 முதல் மா​லை 3:30 க்குள் கணக்கு வழக்கி​னை முடித்து ​​கொண்டு விடுவ​தே இந்த லாபநட்ட அறிக்​கையின் அடிப்ப​டை. } – Feb 23, 9:27 AM
 • Older »

ப​ழைய​வைகள்

குறிப்புகள்

​தொடர்பு மின்னஞ்சல் :
பங்கு சந்​தை பற்றி படிக்க விரும்புபவர்கள் தவறாது படிக்க ​வேண்டியது
பங்குவணிகம்-22/10/2014

நட்பு வட்டம்

  

எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

சமீபத்தில் படித்த செய்தியொன்று கவனத்தை பெரிதும் ஈர்த்தது.

பெய்ஜிங்: சர்வதேச வர்த்தகத்தில் தன்னை மிஞ்ச யாருமில்லை என்ற நிலையில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கா கொஞ்சம் ஆடித்தான் போயிருக்கிறது. காரணம்… சீனா வெகு வேகமாக முன்னேறி, அமெரிக்காவை இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளிவிட்டது. 2012 ம் ஆண்டில் சரக்கு ஏற்றுமதி வர்த்தகத்தில் 3.82 ட்ரில்லியன் டாலர் ஈட்டியுள்ளது அமெரிக்கா. ஆனால் சீனா 3.87 ட்ரில்லியன் டாலர் ஈட்டி அமெரிக்காவை முந்தியுள்ளது.

இதனை அமெரிக்கா, சீனா இரு நாடுகளுமே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன் மூலம் உலகின் மார்க்கெட் லீடர் என்ற புதிய அந்தஸ்து சீனாவுக்குக் கிடைத்துள்ளது. “அமெரிக்காவின் பொருளாதார அளவில் ஒரு சிறு பகுதிதான் சீனாவுடையது. ஆனால் அவர்கள் சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளியிருப்பது சாதாரண சாதனை அல்ல…”, என்று கருத்து தெரிவித்துள்ளார் வாஷிங்டனில் உள்ள பீட்டர்சன் சர்வதேச பொருளாதார நிறுவனத்தின் நிபுணர் நிகோலஸ் லார்டி. உலக வங்கி கணக்கின்படி, பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் அமெரிக்காவை விட சீனா பெரிய நாடுதான் என்றாலும், பொருளாதாரத்தில் சீனாவை விட இருமடங்கு பெரியது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

2012-ம் ஆண்டு சேவை வர்த்தகத்தில் அமெரிக்காவுக்கு உபரியாக 193 பில்லியன் டாலர் கிடைத்தது. சரக்கு வர்த்தகத்தில் 700 பில்லியன் டாலர் பற்றாக்குறை விழுந்துள்ளது. ஆனால் சீனாவுக்கோ சரக்கு வர்த்தகத்தில் 231 பில்லியன் டாலர் உபரி கிடைத்துள்ளது. ஜிடிபி எனும் மொத்த உற்பத்தி அளவில் பார்த்தால் அமெரிக்கப் பொருளாதாரம் 15 ட்ரில்லியன் டாலர் மதிப்புடையது. சீனாவோ 7.3 ட்ரில்லியன்தான்! ஆனாலும் தொடர்ந்து வர்த்தகம் மற்றும் அந்நிய முதலீடுகளில் கவனம் செலுத்துவதன் மூலம் தனது ஜிடிபியை உயர்த்தத் திட்டமிட்டுள்ள சீனாவின் வளர்ச்சி விகிதம் 1978லிருந்து சராசரியாக 9.9 என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/02/11/business-china-surpassed-us-goods-trade-169595.html
இந்த செய்தியினை தொடர்ந்து பொருளாதாரம் குறித்தான சில புள்ளிவிவரங்களை அறிய விரும்பி இணையத்தில் அலசினேன்.

அமெரிக்கா - சீனா செலாவணி விகிதம் வரைபடம்

அமெரிக்கா – சீனா செலாவணி விகிதம் வரைபடம்

சீன நாணயமான யுவான் மதிப்பு அமெரிக்க டாலருடன் கடந்த நான்கு வருடத்தில் கிட்டதட்ட 17% சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இந்த நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கும் நாணய மதிப்புக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கா?

அமெரிக்கா - இந்தியா செலாவணி விகிதம் வரைபடம்

அமெரிக்கா – இந்தியா செலாவணி விகிதம் வரைபடம்

இந்திய ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருடனான வரைபடம்.

கொடுத்துள்ள நாணய மாற்று வரை படத்தின் படி 1டாலர் மதிப்பு ரூ,40ல் துவங்கி கிட்டதட்ட ரூ.53 க்கு வந்துள்ளது. ஒரு ஐந்து வருடத்தில் நாம் 22% (21.2%) மதிப்பை இழந்துள்ளோம். இத்தனைக்கும் 5வருடத்திற்க்கு முன்பு இருந்ததை காட்டிலும் அதிக ஏற்றுமதிகள் நடந்தும் நமது மதிப்பை குறைத்து கொண்டுள்ளோம். http://commerce.nic.in/eidb/Default.asp இது இந்திய அரசின் அதிகார பூர்வ புள்ளி விவர அளிப்பு தளம், இதில் நான் பெற்ற தகவலின் படி இந்தியா 2008 ஐ வி 2012ல் இருமடங்கு அதிகமாகவே ஏற்றுமதியினை செய்துள்ளது. ஆனாலும் பிற நாடுகளில் பெட்ரோல் இறக்குமதிக்கு செலவளித்து விடுவதால் கூட இந்திய ரூபாய் மதிப்பு டாலருக்கு எதிராக சரிந்திருக்க கூடும் அல்லது வெளிநாட்டு பொருட்கள் இறக்குமதியில் கட்டுபாடுகளை நீக்கி ஐபாடுகளையும் பிற நவீன சாதனங்களை இந்திய குடிமக்கள் நுகர்வு செய்ய அனுமதித்ததால் கூட ரூபாய் மதிப்பு சரிந்திருக்க கூடும்.

இந்திய ஏற்றுமதி - அமெரிக்க டாலர் மதிப்பில் பட்டியல்

இந்திய ஏற்றுமதி – அமெரிக்க டாலர் மதிப்பில் பட்டியல்

இன்றைக்கு அமெரிக்காவில் ஐபோன் 5 ன் துவக்க விலை $649 என்றுள்ளது. வரைபடத்தின் துவக்கத்தில் (2008) உள்ள இந்திய ரூபாய் மதிப்பை கொடுத்து வாங்கனும் எனில் நம்மிடம் ரூ.25960 இருந்தா வாங்கிடலாம். ஆனால் இன்றைய மதிப்பின் படி வாங்க ரூ.34397 தேவைபடுகிறது. கிட்டதட்ட ரூபாய் பத்தாயிரம் வீணா போகுது நமக்கு. ஆனால் இந்திய பொருளாதாரத்தில் அக்கறை கொண்டவர்கள் இதை கண்டு மகிழ்வார்கள்.. ஏனென்று அடுத்த மடல்களில் காண்போம்.

நமது நாடோ ஏழ்மையான மற்றும் பெரிய அறிவுசார் சொத்துரிமை அற்ற நாடு. எனவே பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதியினால் வரும் வருமானம் தான் நமது பொருளாதாரத்தின் உயிர் நாடி. விளை பொருட்களான தேயிலை, மிளகு, பாசுமதி மற்றும் தொழிலக உற்பத்தி பொருட்களான ஆடை வகைகள், பவுண்ட்ரி பொருட்கள் மற்றும் சேவை துறைகளான நாம் பொட்டி தட்டும் கணிணி மென்பொருள் போன்ற ஆயிரகணக்கான தொழில்கள் பிழைத்து வாழ நம்மால் பிற நாடுகளுக்கு குறைந்த விலையில் கொடுக்க முடிந்தால் தான் விற்க முடியும்.

உதாரணமாக ஒரு டஜன் (12) பின்னலாடை டிஷர்ட்டுகளை திருப்பூரிலிருந்து ஏற்றுமதி செய்ய முனைபவர் 2008ம் ஆண்டு நாணய மாற்று விகிதத்தின் படி $250 விலைக்கு விற்று இருப்பார். ஆனால் இன்றைக்கோ $189 க்கு விற்றால் போதுமானது. அமெரிக்காவில் இருந்து வாங்குபவர்களுக்கு கிட்டதட்ட $60 விலை குறைவு. இது போன்றே பல்வேறு துறைகளிலும் விலை குறைவாக விற்க நமக்கு வாய்ப்பு உருவாகிறது.

இதன் நேரெதிர் விளைவாக நாம் இறக்குமதி செய்யும் பொருட்களில் மிக முக்கியமான பெட்ரோல்களின் விலை மிகவும் உயர்ந்து விடுகிறது. எந்தவொரு பொருளாதார தத்துவத்திலும் சாதக, பாதகங்கள் இருக்கவே செய்யும். அரசானது தொழிலை காப்பாற்ற முனைந்தால் மக்களுக்கு இப்படியொரு விலைவாசி உயர்வு தலைவலி.ரூ.40 க்கு இருந்தது  22% நாணய மாற்று விலை உயர்வு எனில் நம் அரசுகளின் கிட்டதட்ட 100% வரி கொள்கையின் காரணமாக 8.80+8.80 = 17.60 ரூபாய் விலை உயர்ந்து ரூ58 என்று விலை நிர்ணயம் ஆகிறது. இதை தவிரவும் கச்சா எண்ணையின் சர்வதேச விலை உயர்வு சேர்ந்து விட்டால் 40 ரூபாயிலிருந்த பெட்ரோலின் விலை விர்ரென ரூ.70 ஐ எளிதில் தாண்டி விட்டது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை வரைபடம்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை வரைபடம்

நாம் ஏற்றுமதியினை பெருக்கி வருகிறோம். அந்நிய செலாவணி நம் கையில் சேரும் போது தானாக ரூபாய் மதிப்பு உயர ஆரம்பித்து விடுகிறது. அப்போது தொழில் நிறுவனங்கள் தங்கள் பொருள்களின் விலையை சர்வதேச சந்தையில் உயர்த்த வேண்டி வருகிறது. விலை உயர்வின் காரணமாக விற்பனை மந்தம் ஏற்பட்டு தொழில் சுணக்கம் ஏற்படுகிறது. இதை கருத்தில் கொண்டு தான் தன் கையில் சேரும் அந்நிய செலாவணிகளை இந்தியா போன்ற நாடுகள் ஏதேனும் ஒரு வழியில் செலவழித்து விட விரும்புகின்றன.

முற்காலத்தில் தங்கத்தை அடகு வைத்து அந்நிய செலாவணி பெற்ற சூழல் போய் இன்று யார் வேண்டும் எனிலும் வெளிநாட்டில் குறிபிட்ட தொகை வரை செலவழிக்க அனுமதியளிக்க பட்டுள்ளது. எப்படியாவது எதையாவது தின்னு, அனுபவித்து டாலரை தொலைங்க என்று விட்டுள்ளார்கள். இது சாதரண குடிமகனுக்கான வசதி. ஒரு கடனட்டையை வைத்து இணையம் மூலம் ஏதேனும் ஒரு பொருளை குறிப்பிட்ட இந்திய பண அளவு வரை அந்நிய நாணயங்கள் மூலமாக வாங்க அனுமதியுண்டு. இதையே பெரிய அளவில் இந்திய நிறுவனங்கள் வெளிநாட்டில் நிறுவனங்களை கைக்கொள்ளல் (take over) செய்யவும் அனுமதியளிக்கிறார்கள். புகழ் பெற்ற உதாரணங்கள் டாடாவின் ஜாகுவார் கைக்கொள்ளல், பாரதி ஏர்டெல்லின் தென்னாப்பிரிக்கா Zain Africa நிறுவனம் கைக்கொள்ளல்.இதன் மூலமாக நமது முதலீடுகள் அந்நிய நாடுகளில் பெருகுகின்றன. அதே சமயத்தில் டாலர்களை சந்தைக்குவெளியே விடுவதன் மூலமாக நமது ரூபாய் மதிப்பினை மாற்றமின்றி வைக்க முயல்கிறது இந்திய அரசு.

நமது நாணய மாற்று சந்தையானது பெரிதும் மத்திய அரசின் (Reserve Bank of India) கண்காணிப்பில் நடந்தாலும் பெரிய அளவில் தேவையின்றி குறுக்கிடுவதில்லை என்பது சமீபகால வழக்கமா உள்ளது. சந்தையின் நிலவர படி ஏறினாலும், இறங்கினாலும்
அவ்வளவு எளிதாக உள்ளே நுழைந்து கட்டுபடுத்துவதில்லை. அரசாங்கம் இந்த மதிப்பில் தான் இந்திய ரூபாய் இருக்கனும் என்று அடம்பிடிப்பதில்லை. ஏறினால் இறக்குமியாளர்களும், இறங்கினால் ஏற்றுமதியாளர்களும் லாபத்தை அனுபவித்து கொள்ளட்டும்
என்று விட்டு விடுகிறது.

சீனாவும் இந்தியா போன்றே ஏழை தொழிலாளர்கள் நிறைந்த நாடே. இது முன்னொரு காலத்தில் என்று தனியே நினைவில் வைத்துக்கனும். துவக்க காலத்தில் குறைந்த விலைக்கு பொருட்களை உற்பத்தி செய்து சந்தையில் புகுந்தனர் சீனர்கள். சீனாவின் ஏற்றுமதி குறித்த வரைபடம் பின்வருமாறு..

சீனா ஏற்றுமதி வரைபடம்

சீனா ஏற்றுமதி வரைபடம்

இந்த இடத்தில் இந்தியாவின் ஏற்றுமதி குறித்த வரைபடத்தினையும் இங்கே காண்பது நல்லது…

இந்தியா ஏற்றுமதி வரைபடம்

இந்தியா ஏற்றுமதி வரைபடம்

2002 ம் வருடத்தில் சீனா அடைந்ததை தான் நாம் 10 வருடம் பின்னாடியாக வந்துகொண்டு இருக்கிறோம். மேற்கண்ட வரை படங்கள் http://www.indexmundi.com/g/g.aspx?v=24&c=in&l=en இணைய தளத்திலிருந்து எடுக்க பட்டது. இந்த தளத்தில் எண்ணற்ற   வகைகளில் உலக நாடுகள் அனைத்திற்க்கும் பலவித புள்ளிவிவரங்கள் தொகுக்க பட்டு வரைபடமாக அருமையாக அளிக்கிறார்கள்.

சீனா குறித்து உலகவங்கி தெரிவிப்பது…

http://www.worldbank.org/en/country/china/overview

With a population of 1.3 billion, China recently became the second largest economy and is increasingly playing an important and influential role in the global economy.

Yet China remains a developing country and its market reforms are incomplete. In 2011, China’s gross national income per capita of $4,940 ranked 114th in the world; and over 170 million people still live below the $1.25-a-day international poverty line. With the second largest number of poor in the world after India, poverty reduction remains a fundamental challenge.

http://www.nationmaster.com/graph/eco_pov_sha_of_all_poo_peo-poverty-share-all-poor-people

உலக வறுமை கோடு பட்டியல்

உலக வறுமை கோடு பட்டியல்

உலகில் உள்ள வறியவர்களில் 41% பேர் இந்தியாவில் தான் உள்ளார்கள். அதே சமயம் உலகில் முதலிடம் பிடிக்க முயலும் சீனாவிலும் 22% பேர் உள்ளார்கள் என்பது அங்குள்ள மிக கடுமையான சமூக ஏற்ற தாழ்வினை காட்டுகிறது. ஆனால் ஒட்டு மொத்த உற்பத்தியில்
முதன்மையாக இருக்க கூடிய அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளில் ஒரு சதவீத 1% வறியவர்கள் கூட காண இயலாத நிலை. http://www.nationmaster.com/graph/eco_gdp_ppp-economy-gdp-ppp

ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) பட்டியல்

ஒட்டு மொத்த உற்பத்தி (GDP) பட்டியல்

1. 20 சதம் எழைகள் இருக்கும் சீனாவைப் பார்த்து ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கிறது என்றால் 43சதம் இருக்கும் நம்ம ஊரில் மாத்திரம் என்ன வாழ்கிறது?

நடைமுறையில் சொல்ல போனால் மாதம் 30ஆயிரம் ரூபாய் (300பில்லியன் $) சம்பாதிப்பவனுடைய வீட்டில் ஏழை சகோதரன் இருப்பதற்க்கும், மாதம் 2லட்சம் (2,000பில்லியன்$) சம்பாதிப்பவனுடைய வீட்டில் ஏழை சகோதரன் இருப்பதற்க்கும் வித்தியாசம் நிறைய இருக்கே.

இந்த இடத்தில் செலாவணி பொருளாதாரத்தை விட்டுட்டு சமூக, பொருளாதாரம் பற்றி கொஞ்சம் கவனிப்போம். உலக வறியவர்களில் 40சதத்தை வைத்துள்ள நாம் அவர்களை முன்னேற்ற இந்திய அரசு கொண்டு வந்த திட்டமே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் என்பதை கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் கிராமப்புரங்களில் உள்ள வயதுவந்தோருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்த பட்சம் 100 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கிறது. ஒரு நாளைக்கான சம்பளம் ரூபாய் 120 ஆகும். (2009 ஆம் ஆண்டு விலைகளின் படி) – Note: The original version of the Act was passed with Rs 155/ day as the minimum wage that needs to be paid under NREGA. However, a lot of states in India already have wage regulations with minimum wages set at more than INR100 (US$1.82) per day. NREGA’s minimum wage has since been changed to INR130 (US$2.37) per day.

கிட்டதட்ட 60கோடி மக்களின் வாழ்க்கை சம்பந்த பட்ட பொருளாதார கொள்கை இது என்பது மிகவும் முக்கியமானது. விவசாய கூலிகள் பற்றாகுறை போன்ற சில உடனடி பிரச்சினைகள் வந்தாலும் பல நெடுந்தொலைவு குக்கிராமங்களில் இந்த திட்டம் உண்டாக்க கூடிய விளைவு அளப்பரியதாகும். இந்த திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பலனளித்து இந்தியாவில் உள்ள வறியவர்கள் சதவீதத்தை குறைக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.இந்தியாவை பொறுத்த வரை இந்த ஏழ்மையானது மக்களை சில தீவிரவாத (நக்சல்) இயக்கங்கள் பக்கம் தள்ளிவிடும் அபாயம் இருப்பதால் மிக வேகமாக இந்த பொருளாதார ஏற்றதாழ்வு நிலையினை நீக்க வேண்டிய அவசியம் அரசிற்க்கு ஏற்பட்டுள்ளது.

2. ஏழைகள் எண்ணிக்கைக்கான சார்ட் கிடைக்குமா? ஏற்றுமதி வளர்ச்சி என்பது ஏழைகள் எண்ணிக்கையை என்ன செய்திருக்கிறது என்று பார்க்க.,

முன்னரே  குறிபிட்டுள்ள http://www.indexmundi.com/g/g.aspx?v=69&c=in&l=en  இணைய தளத்தில் வரைபடம் காண கிடைக்கிறது. இந்தியாவன்
வறுமை கோட்டிற்க்கு கீழே உள்ளவர்கள எண்ணிக்கைக்கான வரைபடம்…

இந்தியா வறுமைகோட்டு நிலவர வரைபடம்

இந்தியா வறுமைகோட்டு நிலவர வரைபடம்

சீனாவின் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் வரைபடம்…

சீனா வறுமைகோட்டு நிலவர வரைபடம்

சீனா வறுமைகோட்டு நிலவர வரைபடம்

இந்த இரு வரைபடங்களுக்கு நேரெதிராக பின்வரும் சுட்டியில் வரைபடம் காட்டபட்டுள்ளது.
http://www.tradingeconomics.com/india/poverty-gap-at-dollar2-a-day-ppp-percent-wb-data.html
http://www.tradingeconomics.com/china/poverty-gap-at-dollar2-a-day-ppp-percent-wb-data.html

Share

2 comments to எனது ​பொருளாதார புரிதல்கள் – 1

 • சீனர்களின் உழைப்பில் இந்தியர்களின் உழைப்பை ஒப்பிடமுடியாது அவர்களின் வாழ்க்கைமுறை முற்றிலும் வேறுபட்டது இந்தியாவை காட்டிலும் சீனாவில் உழைப்பிற்கான ஊதியம் குறைவாகவே கிடைக்கிறது சீனாவில் அதிகபட்ச மனிதஉடல் உழைப்பு பயன்படுத்திகொள்ளப்படுகிறது. அடுத்து இந்தியா சீனாவிடம் இருந்து அதிகப்படியான எலக்டரானிக் பொருட்க்களை கொள்முதல் செய்திருக்கிறது Huwei ZTE போன்ற நிறுவனங்களின் தொலைதொடர்பு சாதனங்களை இந்தியாவில் உள்ள தொலை தொடர்பு நிறுவனங்கள் 90 சதம் சீனாவில் இருந்து இறக்குமதிசெய்து பயன்படுத்தியுள்ளது. அமரிக்க தயாரிப்புகளை 2 சதவீதம் கூட இந்தியர்கள் பயன்படுத்தமுடியாது அந்த அளவுக்கு அதன் விலைகள் அதிகம்.

 • புரட்சிதமிழன் தங்கள் வரு​கைக்கும், கருத்திற்க்கும் மிக்க நன்றி.

Leave a Reply

You can use these HTML tags

<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>