இந்து மதத்தின் முக்கிய பிரிவுகளில் ஒன்றான சைவ அன்பர்களின் முக்கிய நாட்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும்.
மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி இரவே சிவராத்திரி விரதமாக கடைபிடிக்க படுகிறது. ஐந்து வித சிவராத்திரி விரதங்கள்
கடைபிடிக்க பட்டு வருகின்றன. அவைகள் விக்கியிலிருந்து….
1.மகாசிவராத்திரி
2.யோகசிவராத்திரி
3.நித்திய சிவராத்திரி
4.பட்ஷிய சிவராத்திரி
5.மாத சிவராத்திரிஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர்.
விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல் ஒருநாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவாயலங்களில் நடைபெறும் நான்கு யாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
சிவபெருமானை பல்வேறு வடிவில் மக்கள் வழிபட்டதுண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே காண்போம்.
பாசுபதம் என்பது மிக முக்கியமான ஒரு வடிவம். 2900BC-1900BC காலத்திய பாசுபத முத்திரையினை மொகஞ்சதாரா அகழ்வாராய்ச்சியில் கண்டறிந்தது குறித்து விக்கியிலிருந்து…

பாசுபதம்
Pashupati (Sanskrit: पशुपति Paśupati), “Lord of all animals”, is an epithet of the Hindu god Shiva.[1] In Vedic times it was used as an epithet of Rudra.[2] The Rigveda has the related pashupa “protector of animals” as a name of Pushan. The name was also applied by John Marshall to a figure, probably a deity depicted as sitting among animals, on a seal discovered in the context of the Indus Valley Civilization[3]The main temple of Nepal is Pashupatinath at Kathmandu.
Pashupati seal
A seal discovered during excavation of the Mohenjodaro archaeological site in the Indus Valley (2900BC-1900BC)[4] has drawn attention as a possible representation of a “yogi” or “proto-Shiva” figure.[5] This “Pashupati” (Lord of Animals, Sanskrit paśupati)[6][7] seal shows a seated figure, possibly ithyphallic, surrounded by animals.[8][9][10] Some observers describe the figure as sitting in a traditional cross-legged yoga pose with its hands resting on its knees.Imagery
Archaeologist Jonathan Mark Kenoyer, current Co-director of the Harappa Archaeological Research Project in Pakistan and Indologist Heinrich Zimmer agree that the ‘Pashupati’ figure shows a figure in a yoga posture.[11][12][13]
மூன்று முகம் கொண்ட சிவபெருமானின் திருவுருவ சிலை அன்றைய காந்தார நாட்டு கலை வடிவிலான சிலை ஒன்று.

காந்தர நாட்டு மூன்று முக சிவபெருமான் சிலை
ஆடல்வல்லான் நடராசராக…

நடராச பெருமான்
உமையாரு பாகனாய் ஆணும், பெண்ணும் சமம் என்பதை உணர்த்தும் அர்த்தநாரியாக…

அர்த்தநாரீசுவரர்
எலிபெண்டா குகையில் காணப்படும் மணவிழா காட்சியினை விளக்கும் சிற்பம்….
எலிபெண்டா குனை – சிவபெருமான் மணக்கோல சிற்பம்
அருமையான படங்கள்.
அன்பே சிவம்
நன்றி அண்ணே.