
நெல்சன் மண்டேலா – இளம்பருவம்
தென்னாப்பிரிக்க விடுதலை போராட்டத்தின் மிக முக்கிய தலைவர் வகித்த நெல்சன் மண்டேலா கடந்த சில நாட்களாகவே மிக மோசமாக உடல்நலம் குன்றி இருந்த அவர் நேற்று (5-டிசம்பர்) மரணமடைந்தார்.

நெல்சன் மண்டேலா – திருமணம்
துவக்கத்தில் அறவழிபோராட்டதினை துவக்கிய அவர் இடையில் ஆயுத வழியிலான கொரில்லா போர் முறைக்கு மாறியது மிக முக்கிய நிகழ்வாகும். இதன் காரணமாக 1962ல் கைது செய்ய பட்ட அவர் 27வருட நீண்ட நெடிய கடும் சிறை தண்டனைகளுக்கு பின்னர் 11.2.1990 அன்று தென்னாப்பிரிக்க அதிபர் டெக்ளார்க் அவர்களால் விடுதலை செய்யபட்டார். இவர் விடுதலை செய்ய பட்ட காலத்தில் எல்லாம் இவர் முழுக்க முழுக்க காந்தியவாதி என்றே நான் அரைகுறையாக புரிந்து கொண்டு இருந்தேன்.
நிறவெறிக்கு எதிரான இவருடைய நீண்ட நெடும் போராட்டம் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். விடுதலைக்கு பின்னர் இவர் தேர்தலில் போட்டியிட்டு முதலாவது கருப்பின அதிபராக வென்று பதவியேற்றார். அமைதிக்கான நோபல் பரிசு அளிக்க பட்டு கெளரவிக்க பட்டார்.

நெல்சன் மண்டேலா – தென்னாப்ரிக்க அதிபர்
மண்டேலாவினை பற்றி உயர்வாக பேச நிறைய விசயங்கள் உள்ளன. என்னளவில் அவர் இறப்புக்கு பின்னர் நான் அவருடைய சறுக்கல்களாக கருதுவது மூன்று விசயங்களை…
- கொரில்லா போர் முறைக்கு மாறியதும், தானே ஆயுத படை தலைவனாக மாறியதும்.
- விடுதலைக்கு பின்னர் அதிபராக பதவியேற்றது.
- மற்றவைகளை விட மிக முக்கியமாக நான் கருதுவது அரசு, அதிகாரம் போன்றவைகளையும் தாண்டி இவர் கோட், சூட் போட்ட மண்டேலாவாகவே வாழ்ந்து மறைந்து விட்டது. ஆப்ரிக்க கலாச்சாரம், பாரம்பரியம் எதனையும் தம் மக்களுக்கு தன் வழியாக வலியுறுத்தாது மேற்கத்திய கலாச்சார மேலாதிக்கத்தினை ஒப்புக்கொண்டு விட்டது. ஒரு சமயம் அவர் சிறுவயது பெயரிலேயே நெல்சன் வந்து விட்டது தான் காரணமோ? எந்த ஆப்ரிக்க பாரம்பரியத்தில் நெல்சன் என்ற பெயர் இருக்க வாய்ப்புண்டு.
ஒரு நட்சத்திரம் மறைந்தது