சமீபத்தில் – நேற்று முன்தினம் – வெள்ளை வேட்டி பெரிய மனிதர் ஒரு வீடு தேடி வந்திருந்தார். சரி ஏதோ முக்கிய சமாச்சாரம் என்று ஆத்தாவும்(எனது தாயார்) , நானும் பேசினோம். அவர் வந்த சமாச்சாரத்திற்க்கு நேரடியாக வந்தார். ஊருக்குள் இன்னார் உங்களுக்கு உறவு தானே என்றார் ஆமாங்க என்றார் ஆத்தா. அவிங்க வீட்டில் உள்ள வரன் சம்பந்தமாக விசாரிக்க வந்தேன் என்றார். ஆர்வமாக ஆத்தாவும் நல்லவிங்க, வசதியானவிங்க என்று விஸ்தராமா சொல்லிட்டு நைசாக எதிர்தரப்பு அதாங்க மாப்பிள்ளை என்ன செய்கிறார் என்றார்.. வந்தவரோ அதாங்க மாப்பிள்ளை இன்ன செய்து கொண்டு இருப்பதாக ஊரில் சொல்லுகிறார்கள்.. அவரை பற்றி நீங்க தானே சொல்லனும் என்றார்.
ஆத்தாவுக்கு ஒண்ணும் விளங்கவே இல்லை.. ஆமா நீங்க எந்த தரப்பு என்று வினவ அவரோ நான் பெண் வீட்டார் என்றார். அடப்பாவி மனுசா நானும் பெண் வீட்டாரை பற்றி தானே சொன்னேன். என்னடா கொடுமை என்று இருவரும் குழம்பி பின் பார்த்தால் திருமண வயதில் ஒரு பெண்ணும், ஒரு பையனும் அந்த வீட்டில் உள்ளார்கள். முதலில் பெண்ணுக்கு தானே பண்ணுவார்கள் என்ற நினைப்பில் ஆத்தா இன்னேரம் பேசியிருக்கிறார். வந்தவர் சொன்னார் உங்கள் உறவினர் வீட்டிலிருந்து மாப்பிள்ளை சாதகம் எல்லாம் வரன் தேடும் இடத்தில் பதிந்து வைத்துள்ளார்கள். அதிலிருந்து தான் பார்த்து எடுத்து கொண்டு பேச வந்தோம் என்றார். ஆத்தாவுக்கு முகம் “ஙே” என்றாகி விட்டது. இன்னமும் ஆத்தாவுக்கு அவர் மனம் ஆறவில்லை. திருமண வயதிற்க்கு தேவைக்கும் மேலான வயதான பெண்ணை வைத்து கொண்டு தேவையே இல்லாத பையனுக்கு திருமணமா என்று பொங்கி வருகிறார்.
**********************************************************
ஆத்தா:சில “ஙே” குறிப்புகள் – என்று தான் பெயரிட நினைத்திருந்தேன். இருந்தாலும் சாதா குறிப்புகளாகவே இருக்கட்டும் என விட்டாச்சு.. சுதந்திர தினத்தை முன்னிட்டு எனது ஆத்தா (தாயார்) பற்றிய சில வரி குறிப்புகளை அவ்வப்போது போட்டு மக்களை இம்சிக்க முடிவெடுத்து துவங்கியுள்ளேன். பார்ப்போம்…

Leave a Reply