நேற்று ஆடி கடைசி வெள்ளிகிழமை. காலையில் ஒரு வாடிக்கையாளர் சந்திப்பு நீண்ட நேரம் நடந்தது. புதிய திட்டம் பற்றிய பேச்சுவார்த்தை, கூலி அது இதுவென அனைத்து முடிவு செய்ய பட்ட பின் வரும் திங்கட் கிழமை முதல் துவக்கிடலாம் என்று முடித்து விட்டார். மதியம் சாப்பிடும் போது ஆத்தா இது ஆடி கழிவு (மாத கடைசி) என்பதால் யாரும் புதியன துவங்க மாட்டார்கள் என்று விளக்கம் கொடுத்தார். மதியத்திற்க்கு பின் மற்றொரு வாடிக்கையாளர் அவசரமாக அழைத்தார். பேசி முடித்து இந்த நேரம் முதல் எனது ஆன்மீக/சோதிட சம்பந்த பட்ட திட்ட பணிகளை துவக்குங்கள் என்று கூறி அச்சாரம் கொடுத்தனுப்பி வைத்தார். இரவு சாப்பிடும் போது ஆத்தா இன்று வரலட்சுமி நோன்பு. மிக நல்ல நாள் என்பதால் உடனடியாக துவங்கிட சொல்லியுள்ளார்கள் என்று ஆன்மீகவிளக்கம் கொடுத்தார். இப்ப நான் “ஙே” என்று முழித்து கொண்டுள்ளேன். ஆத்தாவின் ஆன்மீக விளக்கமே விளக்கம்.. புரியாதவர்கள் மீண்டும் படிப்பது நல்லது..
Leave a Reply